தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்

This entry is part 11 of 19 in the series 19 ஏப்ரல் 2015

.           கல்லூரி நிர்வாகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் நுழைந்ததும்  எதிரே சிற்றாலயம் தெரியும். அதற்கு எதிரே ஒரு தாமரைத் தடாகம். அதில் அழகிய மலர்கள் மலர்ந்திருந்தன.          நுழைவாயிலின் வலது பக்கத்தில் கல்லூரி முதல்வரின் அறையும் அலுவலகமும் இருந்தன. அதன் வெளியே வராந்தாவில் அனைவரும் ஆவலுடன் கூடியிருந்தனர். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் ஒருவித பீதியும் குடிகொண்டிருந்தது. தேர்வு பெற்றால் பெரும் குதூகலம். இல்லையேல் பெரும் சோகம்.           அலுவலகத்தின் முன்னே ஒரு ஒலிவாங்கி ( மைக் ) […]

வைரமணிக் கதைகள் – 12 கறவை

This entry is part 12 of 19 in the series 19 ஏப்ரல் 2015

காடு வெட்டியாருக்கு நாற்காலி கொண்டு வந்து ஒருவன் களத்தில் போடும்போதுதான் கான்ஸ்டபிள் வந்தார்.   காலையில் காப்பி, பலகாரம் முடித்துக் கொண்டு, அமர்த்தலாக ஏப்பம் விட்டவாறே பண்ணை வீட்டிலிருந்து கீழே இறங்கும்போதே காடு வெட்டியார் பார்வை கான்ஸ்டபிள் மேல் பட்டுவிட்டது.   அதைக் கண்டு கொள்ளாமல் வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம் ஓர் அதட்டல். சாக்கில் அறுவடை நெல் அளந்து நிரப்புகிறவனிடம் ஒரு விசாரிப்பு. தலையைச் சொறிந்து நின்ற டிராக்டர் டிரைவரிடம் ஒரு சீறல்… இத்தனையும் நடத்திக் […]

மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”

This entry is part 13 of 19 in the series 19 ஏப்ரல் 2015

  [1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்து கொண்டே இருக்கும். அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். பல வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய வழிகளைக் கண்டறிவதுதான் வாசகருக்குப் பெரிய சவால். அந்த சவாலில் வாசகன் வெற்றி அடையும் போது படைப்பாளருடன் அவனும் ஒன்றிப்போய் விடுகிறான். அவர் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் எஸ்தரில் […]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…

This entry is part 14 of 19 in the series 19 ஏப்ரல் 2015

நீலமணி மிருதுவான சிந்தனைகள் தடவும் விரல்களுக்கு இதமான ஆர்ட் தாளில் மனசை வருடும் எண்ணங்களைத் தெளிவான எழுத்துகளில் தரும் இந்நூலின் நூறு பக்கங்கள் வாசகரை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும். இருபது வயது முதல் அறுபத்தாவது வயதுள்ளிட்ட காலகட்டத்தில் மிருதுவான ஆழங்களில் பூக்கும் கருத்துகளின் தொகுப்பு. கிராமத்து ஓட்டுவில்லை வீட்டின் சாணமிட்ட திண்ணையில் அகரம் தொடங்கிய எழுத்தின் கனிவு. தஞ்சாவூர்க்காரரான ஆசிரியரின் இடப்பெயர்வு ஸ்ரீரங்கத்திற்குப் பெருமை சேர்க்கும் நிலையில் ஆற்றங்கரை நாகரிகம் இவர் எழுத்துவழி பதிவாகிறது. கடவுள்மீது பூப்போடுவோர் […]

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2

This entry is part 15 of 19 in the series 19 ஏப்ரல் 2015

சிறு தூக்குச் சட்டியில் களியும், களிக்கேற்ற கீரை கடைசைலையும் எடுத்துக் கொண்டு நடந்தாள் யாழினி. மெரூன் நிற தாவணியும், வெள்ளைப் பொட்டுகளும் சந்தனக் கோடுகளும் நிறைந்த பாவாடையும் அணிந்திருந்தாள். அலங்காரம் ஏதும் அற்று சாதாரணமாய் கூந்தலைத் தூக்கிக் கொண்டை போட்டிருந்தாள்.   பச்சைப் பசேல் என்று புல் பரத்தி இருந்த வரப்பில் நடப்பது அலாதியான சுகம். அதிலும் மழை நனைத்து சிறு சிறு பொட்டுக்களாய் தேங்கி நிற்கும் நீர்த் துளிகள். பாதங்களின் உட் புறத்தை நனைத்து சிலிர்க்கச் […]

ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !

This entry is part 16 of 19 in the series 19 ஏப்ரல் 2015

  [A Love Denial] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     காலம் கடந்தது நாம் சந்திக்கவே ! தாமத மானது நமது சந்திப்பே ! நண்பா ! நீ நண்ப னுக்கு மேலில்லை ! மரணச் சவப் போர்வை சிக்கிடும் கால் சுற்றி, தாண்ட முயன்றால் முடிவைத் தொடுவேன் எனது இறுதித் துயருடன் நான் உன்னை நெருங்க லாமா நகர முடியாத நிலையில் ? இப்படிக் […]

வீடு பெற நில்!

This entry is part 17 of 19 in the series 19 ஏப்ரல் 2015

  ஒரு அரிசோனன் ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார்.  அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள். “வாங்க ஸ்ரீநிவாஸ்,  எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி[காமாட்சி நிலைய உரிமையாளர்]. அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே குறிப்பிடுவோமே! “என்னத்தைங்க சொல்லறது?  பொழுதுபோய் போழுதுவந்தால் இங்கே வந்து நாம பேசறோம்.  அலுத்துக்கறோம்.  வேற என்னாங்க சொல்றது!” அலுத்துக்கொண்டார் ஸ்ரீநிவாஸ். “அண்ணாச்சி, ஏன் அலுத்துக்கறீக?  இங்கே வந்து பேசுனாத்தானே வீட்ட ஒழுங்கா வச்சுக்கத் தாவலை!” […]

சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி

This entry is part 18 of 19 in the series 19 ஏப்ரல் 2015

18.4.2015 சனிக்கிழமை வடபழனி பேருந்து நிலையம் எதிரில் ஆர்கேவி அரங்கம் என்னும் “ப்ரிவியூ தியேட்டரில்” ஜெயகாந்தனுக்கு நினைவில் நிற்கும்படியான ஒரு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.   எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கேகே நகரின் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. கவிதா பப்ளிகேஷன்ஸ் சொக்கலிங்கம் ஜெயகாந்தனின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடத் தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவருடன் பழகிய நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். சா.கந்தசாமி சாகித்ய அகாதமியில் ஏழு ஆண்டுகள் முயன்று ஜெயகாந்தன் மீது ஆவணப்படம் தயாரிப்பதில் […]

ஜெமியின் காதலன்

This entry is part 19 of 19 in the series 19 ஏப்ரல் 2015

மாதவன் ஸ்ரீரங்கம் ஒரு கருக்கலில்தான் அவன் இருப்பைஉணர்ந்தேன். கட்டிலின் விளிம்பில் அமர்ந்தபடி ஒரு குறுநகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் என்னை. என் திடுக்கிடலை ஒரு சைகையால் அமைதிப்படுத்தினான். அருகில் படுத்திருந்த என் மனைவி மகனை அச்சுறுத்தலோடு பார்த்துக்கொண்டேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். மெல்ல அவனை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு நகர்ந்தேன். படுக்கையறைக்கும் ஹாலுக்குமான சிலநொடிகளில் கடந்திருந்தேன் பல நூற்றாண்டுகளை. சோபாவில் உட்கார்ந்தபடி என்னைப் பேச அழைத்தவனை நன்றாகத்தெரியுமெனக்கு. ஏன் உங்களுக்கும்கூட தெரிந்திருக்கக்கூடும். வறண்ட என் தொண்டைக்கிதமான தேநீர் தேவைப்பட்டது எனக்கு. அவனிடம் கேட்டேன். […]