ரகுநாதன் என்னையே எனக்குள் தேடுகின்றேன். தேடுகின்ற தேடுபொறியாய் மனம் உலாவிச்செல்கிறது. ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் காட்டுகின்றது. நீ உன்னையே இழந்த தருணத்தில் தோல்வியைத் தழுவிச்செல்கின்றாய் உன்னையே சீா்தூக்கி ஆராய்கின்ற துலாக்கோலாய் காட்சியளித்தபோது வாகை சூடினாய். உன்னையே அறியாமல் மனத்தை தொலைத்தபொழுது பித்தனாய் பிதறுகின்றாய். நிலையறிந்த ஆதிசிவனோ தொடா் சோதனைக்கே ஆட்படுத்துகின்றான். தவறுகள் செய்ய மனம் நினைத்தபொழுதெல்லாம் கடவுளாய் தடுத்தார். சூழ்நிலைகள் தவறுகள் செய்ய துண்டலாய் தூரிதமானபொழுது மனம் நடுவுநிலையாய் தடுத்தாண்டது. உன்னுடைய குறைகளை அறிந்த இறைவனோ சோதனை […]
சு. இராமகோபால் கூன் விழுந்தவன் கைத்தடியை ஊன்றியவண்ணம் எப்படியிருக்கிறாயென்று கேட்டுவிட்டுப் போகிறான். முன்பின் தெரியவில்லை. வெளியேறுகிறான். ஓட்டையை உதறி நழுவிய ஆரஞ்சுப்பழம் கண்மூடித்தனமாக வழுவிக்கொண்டிருந்த கொடிக்குள் பதுங்கிக்கிடக்கிறது.. மின்சாரக் கம்பத்தில் தட்டியிருந்த அழைப்பிதழ்: இத்தடத்திலுள்ள குப்பைகளையெல்லாம் தத்தெடுத்துக்கொள்ளலாம். வெள்ளைச் சட்டையணிந்த கறுப்புப் பெண் பன்றிக்குட்டிகளைப் போலிருந்த நான்கு நாய்கள் நடுவில் கரகாட்டம். ஈராக் போரை ஆரம்பித்த குடியிலிருந்து மீண்டு ஜனாதிபதியான புஷ் இரண்டு கீழிறங்கியதும் கொன்ற சிப்பாய்களின் படங்களை வரைந்து வரைந்து குறுகியும் நெடுகியுமாக உதிரிகள். கொடுக்கு […]
ஆதியோகி எழுத மறந்து எப்பொழுதோ தொலைந்து போன கவிதைகளில் சில இப்பொழுதும் பேருந்து பயணத்தின் போதோ இரவு உறக்கம் களையும் சிறு இடைவெளியிலோ தீவிர வாசிப்பின் ஊடாகவோ ஏதோவொரு எழுத இயலாத தருணத்தில் நினைவடுக்குகளின் உள்ளிருந்து மீண்டு வந்து எட்டிப்பார்த்து விட்டு மீண்டும் தொலைந்து போகின்றன..! – ஆதியோகி
டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம். அதோடு கால் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி குன்றிப்போவதால் காலில் காயம் உண்டாவது தெரியாமல் போகலாம். வலி தெரியாத காரணத்தால் புண் பெரிதாகலாம். கால்களில் வெடிப்பு, வீக்கம், புண், சதைக்குள் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 215. திருமண ஏற்பாடு அமைதியான இரவு நேரம். ஊரார் பெரும்பாலோர் உறங்கிவிட்டனர். பால்பிள்ளையும் வீடு சென்றுவிட்டான். நாங்கள் மட்டுமே குடும்பமாக அமர்ந்திருந்தோம். அது போன்ற வாய்ப்பு கிடைப்பது கிராமத்தில் அபூர்வம். எப்போதுமே யாராவது உறவினர் வீட்டில் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். அதனால் முக்கியமான குடும்ப காரியங்களை அவர்கள் இல்லாமல் தனியே பேசுவது சிரமம். அப்படி வருபவர்கள் நாங்கள் என்ன பேசினாலும் அதில் தாங்களும் கலந்துகொள்ளவே விரும்புவர். அதைத் தவிர்க்கவும் இயலாது. இது கிராமப் புறங்களில் […]
நிலாரவி. பச்சை புல்வெளி பக்கத்தில் நெகிழிப் பைகளுடன் நிரம்பி வழிந்த குப்பைத்தொட்டி… ஆடு மாடுகள் மேய அலங்கோலமானது குப்பைத்தொட்டி.
நீலச்சேலை வானில் சிவப்பு முந்தானை காணப்படாமலேயே கரைந்துவிட்டது விமானப் புகைவில் காணப்படாமலேயே கலைந்துவிட்டது அழகான அந்தப் பூ ரசிக்கப்படாமலேயே உதிர்ந்துவிட்டது கன்னியாகவே அவள் வாழ்க்கை கழிந்துவிட்டது அழகான கோலம் காணப்படாமலேயே சிதைந்துவிட்டது சேலத்து மல்கோவா ருசிக்கப்படாமலேயே அழுகிவிட்டது பொத்திப் பொத்தி வைத்த விக்டோரியா ரூபாய் தொலைந்துவிட்டது பொம்மை அழுகிறது விளையாட குழந்தை இல்லையாம் ‘கலையாமல் கரையாமல் உதிராமல் தொலையாமல் அழுகாமல் அழாமல் காத்திருக்கிறேன் ஒருநாள் புரட்டப்படுவேன்’ நம்பிக்கையுடன் புத்தகம் அமீதாம்மாள்
எஸ்.அற்புதராஜ் (கணினியை மூடிவிடு. ஏ .சி .யை நிறுத்திவிடு . அறையை விட்டு வெளியே வா!) வானத்தை வந்து பார். வெண்மேகங்கள் ஊர்வதைப் பார். நீலமேகம் ஒளிந்து விளையாடுவதைப் பார். செங்கதிரோன் கீழ்வானில் மறைவதைப் பார். பச்சைவயல் ஓரங்களில் தென்னை மரங்கள் சிலுப்புவதைப் பார். அசைவில் காற்று மெல்லத் தவழ்ந்து வரும். மெல்லவரும் காற்றை சுவாசம் கொள். இயற்கையை நுகர்ந்து பார். இன்றைய வேலை வெற்றியில் ஜ்வலிக்கும்.
மீனாட்சி சுந்தரமூர்த்தி சூர்ப்பநகை தூண்டி விட்ட முறை தவறிய ஆசையால் அல்லலுற்ற இராவணன் தனது மாமன் மாரீசனின் இருப்பிடம் வருகிறான்.அவன் வரக் கண்ட மாரீசன் இந்த நேரத்தில் இவன் ஏன் வந்தான் எனக் கலக்கமுற்று அதனைக் காட்டாமல் வரவேற்கிறான்.சிறந்த சிவபக்தனாகி எண்ணற்ற வரங்களைப் பெற்றவன் தன்னை நாடி வந்த காரணம் என்னவென வினவுகிறான். இராவணன் என் உயிரைத் தாங்க முடியாது தாங்கிக் கொண்டிருக்கிறேன் தேவர்களும் நம்மைக் கண்டு எள்ளி நகையாடும்படி பழி நேர்ந்து விட்டது.மனிதர்கள் வலிமை பெற்று […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ உள்ளத்தை மூடி விட்டு சற்று ஓய்வெடு ! ஓடும் ஆற்றில் மிதந்து விடு ! மரிப்ப தில்லை அது ! மரிப்ப தில்லை அது ! சிந்தனை யாவும் சமர்ப்பணம் செய்திடு வெட்ட வெளிப் பாதத்தில் ! ஒளி வீசும் அது ! ஒளி வீசும் அது ! உள்ளத்திலே காண்பாய் உலக வாழ்வின் மெய்ப் பொருளை ! உன்னுடன் பேசும் அது ! உன்னுடன் பேசும் அது […]