ஆன்டரூ நியுபெர்க்கும் மார்க் ராபர்ட் வால்ட்மானும் இணைந்து எழுதிய “நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?”நூலின் அடிப்படை கருத்துகளையும் ஆய்வுகளையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த புத்தகம் பற்றியும் பொதுவாக நியுபெர்க் முன்வைக்கும் ஆய்வையும் அதன் தர்க்கங்களையும் பற்றிய கேள்விகளையும் அதற்கு அவர் தரும் பதில்களையும் இங்கே பார்க்கலாம். கேள்வி : நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்? நம்பிக்கை நான்கு முக்கிய விஷயங்களைச் சார்ந்திருக்கிறது – புலனறிவு, உணர்சசிகள், அறிதல், சமூக […]
அ. ஜெயபால் தமிழகத்தில் நாடோடிகள், மானிடவியல் கோட்பாடுகள், அடையாள மீட்பு, தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள் , ஆதி மருத்துவர் போன்ற அடித்தள ஆய்வு சார்ந்த நூல்களை தமிழுலகிற்கு கொடுத்திருக்கின்ற வல்லினம் பதிப்பகம், ஜூலை 2006 ல் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் (இனவரைவியல் ஆய்வு) என்ற ஓர் ஆழமான நூலை தந்திருப்பதன் மூலம் தன்னுடைய இருப்பை வெளிபடுத்தியிருக்கிறது. இந்நூல் நாட்டார் வழக்காற்றியலின் சிரத்தையான ஆய்வாளர் ஆ. தனஞ்செயன் அவர்களின் பனிரெண்டு கட்டுரை தொகுப்புகள் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற ‘Folklore’ […]
சுஜாதா எழுதி எண்பதுகளின் துவக்கத்தில் கல்கி வார இதழில் வந்த நாவல் வஸந்த் வஸந்த். வெளி வந்த போதே வாசித்துள்ளேன். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் சுஜாதா வைக்கும் சஸ்பென்ஸ் செமையாக இருக்கும் ! உயிர்மை பதிப்பு நூலாக பல ஆண்டுகளுக்கு பிறகு இதனை இப்போது மீண்டும் வாசித்தேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் முதலில் வாசித்த போது கிடைத்த அதே உணர்வுகள் ..! வாத்தியார் வாத்தியார் தான் ! 2005-ல் எழுதிய முன்னுரையில் சுஜாதா இப்படி சொல்கிறார்: […]
சிறுகதை அப்பத்தா- பாரதிகிருஷ்ணகுமார் சிவ பாலனின் இடப்பெயற்சிக் குறிப்புகள்-அழகிய பெரியவன் நாவல் நிழலின் தனிமை-தேவி பாரதி நீர் துளி- சுப்ரபாரதி மணியன் கவிதை இறக்கி வைத்துவிட முடியாத சுமை- எஸ்.பாபு அந்த நான் இல்லை நான்-பிச்சினிக்காடு இளங்கோ விருது பெறும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள் செந்தமிழ் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா 29-04-2012 அன்று மணப்பாறையில் நடைபெறுகிறது. தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுப் போட்டி
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலில் எனக்கு வேதனை தவிர வேறில்லை ஏது மில்லாக் காதல் எதற்கு ? உன் இதயத்தை அவளுக் களித்து அவளது இதயத்தை நீ பறிக்கப் போவது எத்தகை அறிவீனம் ? ரத்தத்தில் வேகும் இச்சை உன் பித்துக் கண்களில் ஒளியுடன் மிளிர பாலைவனத்தைச் சுற்றி நானும் வட்டமிட்டு வருவதா ? ஏனிந்த வீணான காதல் சுயமதிப்பைத் தன் வயப் படுத்தி வைத்துள்ள வனுக்கு ? […]
அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தளர் நாஞ்சில் நாடன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் இருவரையும் பாராட்டும் வகையில் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாய் கராமாவில் அமைந்துள்ள சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்ற […]
+++++++++++++++ காதல் உபதேசம் +++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]
வையவன் பிறந்தாள் ஒரு பெண் அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள் பிறந்த பண்ணை வீட்டின் வழிநடையில் அந்தியிருள் சூழ்ந்த அரைக் கருநிழலில் கூடியிருந்த கும்பல் விலக்கிப் பேறு பார்க்கச்சென்ற மாது நிசி கழிந்து முகம் தொங்கி திரும்பி வரக் கண்டு கூட்டத்தில் நிசப்தம். அடுத்து அழுகுரல். பின் ஓர் ஓலம் மீண்டும் பிறந்தது ஒரு பெண் குழந்தை பெண்ணுரிமை பெண் சமத்துவம் பேசலாம் வீரமாய் பிறந்ததும் திறக்கின்றன அடைத்து மூட முடியாத கவலையின் கதவுகள் கறந்து காட்டியது காராம்பசு […]
சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை பூத்திருந்தது. பாவப்பட்ட ஜென்மம்.. அவள் புருஷன் ஒரு மொடாக்குடியன். தினந்தினம் அவர்களுக்குள் ஓயாமல் சண்டை நடக்கும். உச்சக் கட்டத்தில் தம்திம் என்று அடி விழும். கொடுப்பது யாராகவும் இருக்கலாம்.. இவள் கை ஓங்கியிருந்தால் அப்புறம் மூன்று நாட்களுக்கு அவன் இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டான். அறுத்துக் கொண்டு ஓடிய மாடு எப்போது பட்டி […]
இரவு மணி இரண்டு. “எனக்கு டீ வேண்டாம்” என்றாள் செல்வராணி, “மேக் அப்” பைக் கலைத்து விடாமலிருக்க மெல்லிய கைக்குட்டையால் முகத்தை ஒற்றியபடி. இந்தப் பனியிலும் துளிர் விடும் வியர்வை.இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த “ஷூட்டிங்க்” இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக அழகியாயிருந்து இப்போது நடிகையானவரின் பாடல் காட்சி. அவரது “கால் ஷீட்” முடிவதற்குள் “ஷூட்டிங்க்” முடிந்தாக வேண்டும். எத்தனை டீ குடிப்பது? உமட்டல் வந்தது. கால்களும் கழுத்தும் இடுப்பும் இற்று விட்டன. பக்கத்து வீட்டு ஆயாவைக் […]