கரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா

This entry is part 13 of 14 in the series 26 ஏப்ரல் 2020

ஜெ பாஸ்கரன் சிறுகதை இலக்கியம் படைப்பதுதான் சிரமமானது. நன்கு வளர்ந்து வரும் இலக்கியப் பகுதியும் இதுதான் என்பார் க. நா.சு.இதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எந்த ஒரு சிறுகதையையும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், ஒரு சிறுகதையை வாசித்தவுடன், அது ஏற்படுத்தும் தாக்கம், ஒரு வாசகனை பாதிக்கிறதென்றால், அக்கதை ஒரு நல்ல சிறுகதையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது என் எண்ணம். ஸிந்துஜாவின் இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. எல்லாக் கதைகளிலும், நாம் அன்றாடம் காணும் மனிதர்கள், […]

சாளேஸ்வரம்

This entry is part 12 of 14 in the series 26 ஏப்ரல் 2020

கௌசல்யா ரங்கநாதன்……. -1- இந்த வாரத்தில் இரண்டாம் முறையாய், என் கடை முதலாளி தம்பி என்னை அழைப்பதாய் அவர் பிள்ளையாண்டான் வந்து அழைத்தபோதுதான் நான்மறுபடியும் ஏதோ தவறு செய்துவிட்டிருக்கிறேன் போலும்  என்று எண்ணியவாறு  கூனிக்குறுகி அவனருகில் போனால்,  அவன் “அண்ணே வாங்க,உட்காருங்க… தாக சாந்தி எதனாச்சம் பண்றீங்களா” என்றான், நாராயணன், என் மகன் வயதையொத்தவன்..அவன் அப்பா காலத்திலிருந்து, அதாவது, சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, என் 20 வயதில் அந்த ஹோல்சேல் மளிகை கடைக்கு என்னை வேலைக்குக்கொண்டு […]

கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?

This entry is part 14 of 14 in the series 26 ஏப்ரல் 2020

நவின் சீதாராமன், அமொிக்கா உணவகங்களை மாத்திரமே அதிகம் நம்பியிருக்கும் அமொிக்காவில், உணவகங்கள் முழுவதுமாய் மூடப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவுப் பண்டங்களை இணையத்தின் வாயிலாகக் கோருகிறார்கள். பிறகு தேவையான உணவுப் பண்டங்கள் அவர்களின் இல்லங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. சமையலறைகளில் சமைப்பவர்கள் தவிர, பரிமாறுபவர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், நம் நாடுபோல் பரிமாறுபவர்களுக்கு இங்கே வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடையாது. வாடிக்கையாளர்களின் மூலம் வரும் ‘டிப்ஸ்’ எனப்படும் குறைந்தபட்ச ஊக்கத்தொகை மாத்திரமே அவர்களின் மாத வருமானம். ஆனால், தற்போது […]

தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 11 of 14 in the series 26 ஏப்ரல் 2020

                                                                           சிரம் தெரிந்தன அறிந்தறிந்து குலை                         செய்து பைரவர்கள் செந்நிலம்                   பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை                         பரிக்க வந்தவர் சிரிப்பரே.                 [51] [சிரம்=தலை; அறிந்து=வெட்டி;  குலை=கூட்டம்; பைரவர்கள்=வாம மதத்தினர்; பரிக்க=நீக்க]       இப்பாடலில் வாம மதத்தினரின் வழிபாட்டு முறை சொல்லப்படுகிறது. அவர்கள் சக்தியை வழிபடுபவர்கள். தலைகளை வெட்டி வந்து அவற்றைப் பூக்களாகக் கருதி வனதுர்க்கைக்கு இடுவர். மறுநாள் அவற்றை அப்புறப்படுத்த வருவர். அப்போது அவை சிவந்த நெருப்பு எரியும் பாலையின் வெப்பத்தில் […]

நான் கொரோனா பேசுகிறேன்….

This entry is part 10 of 14 in the series 26 ஏப்ரல் 2020

மஞ்சு நரேன் ஏன் மனிதா  என்னை  கண்டு  பயப்படுகிறாய் .. நான் கிருமி அல்ல … கடவுளின்  தூதுவன் .  ஆயிரமாயிரம்  பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை  உடுத்தியவன் தானே  நீ… ஆயிரமாயிரம்  விலங்குகளை  கொன்று  பயணித்தவன்  தானே  நீ ஆயிரமாயிரம்  மரங்களை   அழித்து நாற்காலியில் அமர்ந்து தேனீர்  பருகியவன் தானே நீ ஆயிரமாயிரம்  பறவைகளை  அழித்து தொலைபேசியில்  உரையாடியவன்  தானே  நீ இப்போது புரிகிறதா  வலி  என்றால் என்ன  என்று … பணத்துக்கு ஒரு நீதி..  […]

ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்

This entry is part 9 of 14 in the series 26 ஏப்ரல் 2020

முல்லைஅமுதன் ஈழத்தின் நாடக,திரைப்பட வரலாற்றில் மறந்திவிடமுடியாத மாபெரும் கலைஞன் ஏ.ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை. வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்.05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும்,தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார்.தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார்.நாடகக் கலைக்குப் பேர்போன  மானிப்பாய்,நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது. நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில்  மத்தியஸ்தராக,பார்வையாளராக,சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது. சுந்தரர் இல்ல போட்டி நாடகமான ‘மூன்று துளிகள்’  கலைஞர்  (அமரர்)நற்குணசேகரன் (1933 – 2020) இயக்கினார்.நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய  பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார்.கலை ஆர்வத்தில்  தன்  அரச பதவியே  இராஜினாமச்  செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும்  நாடகங்களை அரங்கேறிய  அனுபவங்களைப் பலதடவைகள் என்னுடன் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில்  லிபர்ட்டி  பிலிம்ஸாரின்  ‘உறங்காத உள்ளங்கள்’  திரைப்படத்தை  ஆரம்பித்து  அதற்கான  சில காட்சிகளும் படமாக்கப்பட்ட  சூழலில் அது தொடரமுடியாது போனது. ஏற்கனவே கடமையின் எல்லை,நிர்மலா,நெஞ்சுக்கு நீதி,தெய்வம் தந்த வீடு, புதிய காற்று போன்ற ஈழத்துத் திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தாலும் நாடகமே தன் மூச்சு என அடிக்கடி சொல்வார். கலையரசு  சொர்ணலிங்கம் அவர்களின் பாராட்டுடனும்,பயிற்சியுடனும் ‘தேரோட்டி மகன் உட்பட பல நாடகங்களில் நடித்தார்..தேரோட்டி மகன், சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை, அவனைக் கொன்றவள் நீ, சலோமியின் சபதம், பார்வதி பரமசிவம், ஆராவமுதா அசடா  எனப்  பல நாடகங்கள் பலரின்  பாராட்டைப் பெற்றமையும்  இங்கு  குறிப்பிடத்தக்கது. 1966இல் வெளிவந்த கடமையின் எல்லை திரைப்படத்திற்குப் பிறகு 1968இல் நண்பர்களுடன் இணைந்து ‘நிர்மலா எனும் திரைப்படத்தைத் தயாரித்தார்.தமிழக திரைப்படங்களின் அனுபவம் மிக்க இவரின் நண்பரின் கைவண்ணமும் இணைய நல்லதொரு படமாக வெளிவந்தது.நல்ல விமர்சனங்களைப் பெற்றுத்தந்தாலும் நம்மவர்களின் தென்னிந்திய சினிமாமோகம் தயாரிப்பாளரின் கையைச் சுட்டுக்கொள்ளும் நிலைமை வந்தது.ஆனாலும் ரகுநாதனின் உற்சாகம் அதிகமாகவே ஏற்பட முனைப்புடன் செயல்பட்டார்.அதன் தொடர்ச்சியாகவே வி கே டி பொன்னுச்சாமியின் தயாரிப்பில் இலங்கையில் முதன் முதலில் சினிமாஸ்கோப் வடிவில் வெளிவந்த ‘தெய்வம் தந்த வீடு திரைப்படத்தை 1978இல் வெளியிட்டார்.ஆர்வமுள்ளவர்களை,அனுபவம் மிக்கவர்களை தேடிச்சென்று ஊக்கம் கொடுப்பதுடன்,தன்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்தியவர். பலதிரைப்படங்கள் வெளிவரவிருந்த சூழல்,பல ஆரம்ப பூஜைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் எனச் சிறப்பான வெளிச்சம் வரவிருந்த சூழலில் தான் 83 ஜூலைக்கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது.வாழமுடியாத சூழலிலே புலம்பெயர்ந்தார். தமிழகத்தில் இருந்த காலங்களிலும் தன கலை முயற்சியை விடவில்லை. பின்,பாரிஸ் வந்துசேரவே,கலைகள்,கலைஞர்கள் சங்கமிக்கும் நாடாக பாரீஸ் இவருக்காகியமையினால்,நாடகம்,குறும்படங்கள்,திரைப்படங்கள் எனத் தொடர்ந்தார். அவற்றுள்  இன்னுமொரு பெண், முகத்தார் வீடு, பேர்த்தி,நினைவு முகம், மௌனம்,தயவுடன் வழிவிடுங்கள், தீராநதி,மீளுதல்,தொடரும்,முள்ளும் மலராகும்,மாறுதடம்,பூப்பெய்தும் காலம்,தொடரும், அழியாத கவிதை,இனியவளே காத்திருப்பேன்(2012), WITNESS IN HEAVEN     சாட்சிகள் சுவர்க்கத்தில் (2018)குறிப்பிடத்தக்கன. எனது வீட்டுக்கு வந்தபோது நிறையப் பேசிய பொழுதுகளில்  புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது கலைஞர்களை ஒன்றிணைத்து நீண்டது திரைத் தொடரை ஆரம்பிக்க இருப்பதாகச் சொன்னார்.லண்டன் ஈழவர் திரைக்கலை மன்றம்/ஈழவர் சினி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்  அமைப்பினரும்  இணைந்து […]

அழகாய் பூக்குதே

This entry is part 8 of 14 in the series 26 ஏப்ரல் 2020

பாலமுருகன் வரதராஜன் அவன் காத்திருந்தான்.கடந்த  ஒரு மணி நேரத்திற்கு மேலாக,  அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும், பொறுமையாக காத்திருந்தான்.அதற்கு அவனுக்கு பயிற்சி தரப்பட்டு இருந்தது..பொறுமையாக இருப்பதற்கும், வெறுப்பு உமிழும் பார்வைகளை சமாளிக்கவும், கிடைக்கும் சில மணித்துளிகளில் அவன் மீது கவனத்தை ஈர்க்கவும், சரளமாக உரையாடவும் தயாராக இருந்தான்.மிக நேர்த்தியாக உடையணிந்து, அதற்கும் மேலாக புன்னகை அணிந்து காத்திருந்தான்.அவன் சூர்யா, மருத்துவப் பிரதிநிதி. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஒரு விழுது. ஐந்திலக்கத்தில் சம்பளம், பைக், வாடகை ஃபிளாட்டில் குடியிருப்பு.அழகனாய் […]

இழப்பு !

This entry is part 7 of 14 in the series 26 ஏப்ரல் 2020

வந்தவை உச்சிக்குப் போய் படிந்து கனத்தன இருந்த நல்லன மெல்ல விலகின அது இருட்டெனவும் இது வெளிச்சமெனவும் பேதமறிய முடியாமல்

மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு

This entry is part 6 of 14 in the series 26 ஏப்ரல் 2020

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. முன்னுரை                தொல்காப்பிய மெய்ப்பாட்டியலானது உலகமொழிகளில் உள்ள பல்வேறு கொள்கைகளோடு பல்வறு தொடர்புடைய ஒர் இலக்கிய கொள்கையாக உள்ளது. உலகில் உள்ள பல்வேறு இலக்கிய கொள்கைகளுக்கும் மெய்ப்பாட்டியலே முதன்மையானதாகும். பிற்கால இலக்கிய கொள்கைகளுக்கு வழிவகுத்தவர் தொல்காப்பியர் என்றால் மிகையாகா. மெய்ப்பாடானது ரசம், சுவை, உவமை, நோக்கு, பொருட்பாடு, விறல், சத்துவம் ஆகியவற்றோடு கொண்டுள்ள உறவை  நிறுவதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும். […]

3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

This entry is part 5 of 14 in the series 26 ஏப்ரல் 2020

குமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள்.  பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த […]