இங்கே, காக்கைகளும், ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் ஆரம்பமாகிறது. அது போரும், சமாதானமும் பற்றியது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு: ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால் நேசம் பாராட்டுகிறவர்களை நம்பவேண்டாம்! ஆந்தைகள் கூடிவாழ்ந்த குகைக்குக் காக்கைகள் நெருப்பு வைத்து எரித்துவிட்டன. ‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்க, விஷ்ணு சர்மன் சொல்லத் தொடங்கினார்: தென்னாட்டில் பிருதிவிப்பிரதிஷ்டானம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையிலே பல கிளைகளுள்ள பெரிய ஆலமரம் ஒன்றிருக்கிறது. அதில் மேகவர்ணன் என்ற காக்கையரசன் இருந்து வந்தது. […]
உலகிலேயே மிகவும் விலை கொண்ட கற்கள் வைரக் கற்கள். ஒரு வைரக் கல்லே பல கோடி பெறுமானம் கொண்டது. அப்படிப்பட்ட வைரக் கற்களும் இன்னும் உலகிலே கிடைக்கும் பல கற்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? வைரங்கள் பதித்த நகைகள், மரகதம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து என்று பல தரப்பட்ட கற்கள் கொண்ட நகைகள், அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டு விற்கப்படும் கண்காட்சி தான் ஆசியாவிலேயே முதலிடம் வகிக்கும் ஹாங்காங்கில் நடக்கும் நகை மற்றும் கற்கள் […]
மயிலாப்பூரில், இருந்து பல ஆண்டு காலமாக இயங்கி வரும், பாரம்பரியம் மிக்க சபை ‘கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ‘. ஏப்ரல், மே மாதங்களில், ஒவ்வொரு ஆண்டும், பத்து நாட்களுக்கு மேல், கோடை நாடக விழா நடத்தி, நாடகக் கலையை நசிந்து விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். பாராட்டுக்கள். 27.04.2012 அன்று மாலை மேடையேறிய நாடகம் தான் தலைப்பில் வரும் நாடகம். நகைச்சுவை நாடகம் என்பதைத், தலைப்பிலேயே உணர்த்தும் இக்குழுவினர்க்கு ஒரு ஷொட்டு. மெட்ரோ கட்டுமானமும் , அதனால் ஒரு […]
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. உலகில் தோன்றிய ஆண், பெண் என்ற இரு இனங்களில் பெண்ணினம் மட்டும் கடும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழ் மண்ணில் மட்டுமல்ல, இது உலகின் பொது நிலையாகும். . நாம் இப்பொழுது நம் தமிழ்மண்ணின் வரலாறு பார்க்கப் போகின்றோம். அதுவும் இந்த நூற்றாண்டு வரலாறு. பெண்ணின் நலம் காக்கப் பெண் மட்டுமல்ல ஆணும் உதவிக்குத் தோள் கொடுத்தான். வேர்களூம் விழுதுகளும் தெரியாமல் போனதாலோ அல்லது ஒருங்கிணைந்த […]
வளி கொண்ட உலகமெலாம் நடந்து “வழி”யற்ற உள்ளங்களைப் பார்த்தேன் – வலித்தது… வலியிலாத உள்ளங்கள் வாழும் உலகமெங்கே தேடிப்பார்த்தேன் – “வெளி”களில் கண்டேன்….! அண்டமெல்லாம் மின்னும் நட்சத்திரங்கள் அருகிலே ஓருலகாவது இருக்கலாம்… அங்கே – மனிதன் போன்றோ வேறோ பல்லுயிரினங்கள் உலவலாம்… நெருங்கி வரும் நதிகளில் தேன் பாயலாம்.. நெருங்காமல் வெப்பமெல்லாம் தணிந்திடலாம்.. எட்டும் திசையெல்லாம் களி கொள்ளலாம்.. ஒளிக்குக் கிட்டும் கதிகளில் நாம் செல்லலாம்.. தொலைவு வெளி காலமெல்லாம் சுருங்கிடலாம்… தொல்லை கொள்ளை களவில்லாமல் […]
சந்தேகமும் எரிச்சலுமாய்ப் பார்க்கிறான் பூச்செடி விற்பவன்… மஞ்சள்,வெள்ளை, சிவப்பு,மரூன்,ஆரஞ்சு .. இன்னும் பெயர் சொல்லவியலா நிறச்சாயல்களில் எதையும் தேர்ந்தெடுக்காது எதையோ தேடும் என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை… “மூணுநாள் கூட வாடாது,…” “கையகலம் பூ….” அவன் அறிமுக இணைப்புகளைக் கவனியாது , “நா கேட்டது ….லைட் ரோசுப்பா … இவ்ளோ பெருசா பூக்காது… மெல்லிசா…சட்டுன்னு உதிரும்… அந்த வாசனையே இதுல இல்ல்லியே….” வாரந்தோறும் நான் தரும் மறுப்புகளில் என் நினைவில் படிந்த ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான் அவன்…… […]
2-ஜி அலைக்கற்றை ஊழலின் தாக்கம்: 2-ஜி அலைக்கற்றை (2-G Spectrum) ஊழல் இந்திய ஜனநாயகத்தில் ஒரு பெரிய நில அதிர்வு போல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்த நில அதிர்வின் அலைகள் இன்னும் நின்றபாடில்லை. 2011-ல் டைம்( Time) இதழ் உலகளாவின தலையாய பத்து அதிகார முறைகேடுகளில் 2-ஜி அலைக்கற்றை ஊழலை வாட்டர்கேட் ஊழலுக்கு(Watergate scandal) அடுத்து இரண்டாம் இடத்தில் தரப்படுத்துகிறது (விக்கிஃபீடியா). மேல்தட்டு மனிதரிலிருந்து கீழ்த்தட்டு மனிதர் வரை 2-ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிப் பேசாமலில்லை; முதல் முறையாக, […]
++++++++++++++++++++++ இரட்டை வாழ்வு உனக்கு ++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நான் சல்வேசன் அணியில் சந்தோசமாக இருந்தேன் சில மாதங்கள் ! அதைக் கெடுத்தவர் என் தந்தை ! இப்போது அவருக்கு உடந்தை என் காதலன் அடால்·பஸ் ! ஆன்மீக வாழ்வை விட்டு நான் ஆயுத உலகில் சிக்கிக் கொண்டேன் ! என் ஆன்மீகப் பணியிலிருந்து நான் துரத்தப் பட்டேன் ! இப்போது பியர் கம்பேனியும், பீரங்கித் தொழிற்சாலையும் சல்வேசன் […]
வடிவேலு…நகைச்சுவை நாயகன்..! அவரது உடலசைவும் முக பாவனையுமே போதும்…! தமிழ் அகராதியில் அவர் சேர்த்த வார்த்தைகள்…அலங்காரங்கள் தான் மேல்தட்டு வகுப்பிலிருந்து அனைவரும் ஒரு முறையாவது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பார்கள் அல்லது நினைத்தாவது பார்த்திருப்பார்கள். சார்லி சாப்ளின் போல் தன்னை மட்டும் பழித்து வேடிக்கை காட்டும் வித்தகன் வடிவேலு . அவரது அத்தனை படத்திலும் இதுவரை அவர் மற்றவரைப் பழித்தோ, இழிவான வார்த்தைகள் பேசியோ..நம்மை சிரிக்க வைத்ததில்லை. ஆனால் கவுண்டமணி முதல் விவேக் வரை சந்தானம் வரை….மற்றவர்களை […]