போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15

This entry is part 21 of 31 in the series 7 ஏப்ரல் 2013

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15 மகாராணி பஜாபதி கோதமி, மகன் நந்தாவின் நெற்றியின் மீது ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பணிப்பெண் மென்மையான குரலில் ” ராஜகுமாரி யசோதரா அவர்களும் குழந்தை இளவரசர் ராகுலனும் தங்களைக் காண வருகிறார்கள்” என்றாள். சற்று நேரம் கழித்து ராணி கோதமி தனது அறைக்குள் நுழைந்த போது யசோதரா எழுந்து அவர் பாதம் தொட்டு வணங்கினாள். ராகுலனிடம் வணங்கும்படி கூற அவன் மலங்க மலங்க […]

புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி

This entry is part 20 of 31 in the series 7 ஏப்ரல் 2013

கவிஞர் கருணாகரன்   ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெறவுள்ள எழுத்தாளர் விழாவில் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் என்னும் புத்தகம் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெறவுள்ளது. அந்த புத்தகத்திற்கு கவிஞர் கருணாகரன் எழுதிய முன்னுரை. — இது எஸ். கிருஷ்ணமூர்த்தியின் பல வகை எழுத்துகளைக் கொண்ட ஒரு  தொகுப்பு. அனுபவங்களின் பதிவு. திரைப்படங்களைக் குறித்த பார்வை. நேர்காணல்இ புத்தக விமர்சனம், ஆளுமைகளைப் பற்றிய வெளிப்பாடு எனப் பல வகையில் அமைந்த எழுத்துகள் இதிலுண்டு. ஆறு […]

வெற்றிக் கோப்பை

This entry is part 19 of 31 in the series 7 ஏப்ரல் 2013

    நீங்கள் கைப்பற்றலாம் விலங்குகள் இல்லா கானகத்தை உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் தாகத்திற்கு சிறுநீரைப் பருகும் தேசத்தை உங்கள் தீர்மானத்துக்கு தலையாட்டலாம் இறையாண்மையை அடகு வைத்து பூம்பூம்மாட்டினைப் போல் உறக்கத்தில் கனவுகளுக்கு தடை போடலாம் சிறைக்கு உள்ளே மனதை விலங்கிட்டு உங்கள் ஏகாதிபத்தியத்தை விஸ்தரிக்கலாம் கடனை திருப்பித் தர இயலாத கிராமத்திலிருந்து வாசலில் கோலமிட்டு அழைக்கலாம் நீல வண்ணத்தில் யார் வந்தாலும் நீங்கள் நதியை நாடலாம் பாவமூட்டையை இறக்கி வைக்க உங்கள் கால்களை வருடும் அலைகள் […]

எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்

This entry is part 18 of 31 in the series 7 ஏப்ரல் 2013

  –       யாழினி முனுசாமி     நவீனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவராகத் திகழ்பவர் எம்.வி.வெங்கட்ராம். அவரது படைப்புகள் காலத்தால் அழியாத் தன்மை கொண்டவையாகும். அவரது வேள்வித் தீ எனும் புதினம் தமிழின் தலைசிறந்த புதினங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. அதற்கான காரணம் அப்புதினம் ஒரு சமூக வரலாறாகவும் இருப்பதுதான். தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிரர்களைப் பற்றிய இனவரைவியலாக இப்புதினம் அமைந்திருக்கிறது. அப்புதினத்தின்வழி சௌராஷ்டிரர்களின் வாழ்வியலையும் அச்சமூகத்தையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.   எம்.வி.வெங்கட்ராம் வாழ்க்கைக் குறிப்பு :   […]

அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்

This entry is part 17 of 31 in the series 7 ஏப்ரல் 2013

க. புவனேஸ்வரி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை (SFC) தேசியக்கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி – 1. முன்னுரை ஒரு மனிதனின் முழுவாழ்வையும் வெளியிடும் ஆற்றல் மிக்க இலக்கிய வகையாகத் திகழ்வது புதின இலக்கியமாகும். மனிதனின் அகவுணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் புதினத்திற்கு மட்டுமே உண்டு. கூர்ந்த அறிவும், கடின உழைப்பும் மிக்க மனிதர்கள் யாவரும் விரும்பும் இலக்கியமாகத் திகழ்வது புதினமாகும். நாம் வாழும் கலாச்சாரம், பண்பாடு இக்காலத்தியச் சூழலை நாமே உணரும்படி முழுமையான வார்ப்பாகக் கண் முன்னே சமுதாயத்தைக் […]

செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]

This entry is part 16 of 31 in the series 7 ஏப்ரல் 2013

 [ http://vimeo.com/52164776 ] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி 1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டு பிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்! அப்போது அவர்களின் புதல்வி ஐரீன் கியூரி ஆறு வயதுச் சிறுமியாக, அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்! முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1935 ஆம் ஆண்டு […]

40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்

This entry is part 15 of 31 in the series 7 ஏப்ரல் 2013

நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன் 06-07 ஏப்ரல் 2013 (சனி-ஞாயிறு) மேலதிக விபரங்களுக்கு இணைப்பினைப் பார்க்கவும் இந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள் நட்புடன் நன்றி 40thIlakkiyachChanthippu-LondonProgramme

பணிவிடை

This entry is part 14 of 31 in the series 7 ஏப்ரல் 2013

காலையும் மாலையும் செல்ல நாயோடுதான் சிறு நடை வார்ப் பட்டை ஒரு கையில் கழிந்தால் கலைய ஒற்றுத் தாட்கள் மறு கையில் அந்த ‘இனிய’ பணிவிடையில் அலாதி இன்பம் அம்மாவுக்கு ஆனால் பெற்ற குழந்தைக்கு ‘பெம்பர்ஸ்’ கலைவது எப்போதுமே பணிப் பெண்தான் அமீதாம்மாள்

கனிகரம்

This entry is part 13 of 31 in the series 7 ஏப்ரல் 2013

பவள சங்கரி ”அம்மா.. அப்பா நம்மளை விட்டுப்போயி எத்தனை வருசம் ஆவுதும்மா…? “அவுரு போயி எட்டு வருசம் ஆவுதேப்பா.. நீ காலேசுல சேர்ந்த முதல் வருசமே போயிட்டாரே… நிமிச நேர நெஞ்சு வலியில பொசுக்குனு போயிட்டாரே..” “நானும் வருசா வருசம் வரும்போதெல்லாம், உன்கிட்ட இந்த தறிப்பட்டறையெல்லாம் ஏறகட்டிட்டு என்கூடவே வந்துடுன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறியேம்மா… “ ‘என்னமோப்பா, உங்க அப்பாரோட வாழ்ந்த இந்த மண்ணை உட்டுப்போட்டு எனக்கு எங்கியும் வர புடிக்கலைப்பா. என்னமோ அந்த மகராசரு யாபாரத்துல […]

வெல்லோல வேங்கம்மா

This entry is part 12 of 31 in the series 7 ஏப்ரல் 2013

குழல்வேந்தன் அழுத கண்ணும் சிந்திய மூக்கும் தலைவிரி கோலமுமா, ஓடர பஸ்ஸ தொறத்திப் புடிக்கிறமாரி ஓடிக்கினு இருந்தா அவ. அவளோட நிழலோட்டம் கூட, மதுரை ராஜாக்கிட்ட தன்னோட புருஷனுக்கு அழுதுக்கினே பத்திரகாளி மாரி நீதி கேட்டாளாமே கண்ணகிதெய்வம்!, அவளையே தோக்கடிக்கிற மாதிரி இருந்துச்சிங்க சாமி அவளோட போக்கு. இவ கைய்யில ஒரு துணி கைப் பைய்யி. அந்தக் கைப்பைக்குள்ள ஏதோ இருக்குது மூட்டையாட்டம் துருத்திக் கினு. அது என்னான்னு அவளத் தவுர யாருக்குத் தெரியும்? ஆளு பாக்கிற […]