பொன் மாலைப்பொழுது

This entry is part 16 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

மயக்க வைக்கும் பின்னணி இசையுடன் ஒரு பொன் மாலைப்பொழுது, நேர்மறையாக எல்லாவற்றையும் முடித்து வைத்த பொன் மாலைப்பொழுது..வெளியே மழை,உள்ளே ராஜா’வின் இசை, கையில் கோல்ட் காஃபி,எதிரே ஒரு அழகான பெண், வேறென்ன வேண்டும்?! இதுவே மாலைப்பொழுதின் மயக்கத்திலே..! ஒரு திரைப்படத்தை இயக்கிவிட நினைக்கும் ஆசையில் ஒரு இளம் இயக்குநர். அதை எப்பாடுபட்டாவது சாத்தியமாக்கி விட நினைக்கும் ஒரு ஆத்மார்த்த நண்பன். 7 Year Itchல் ஒரு சிறுவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் தம்பதியினர். வாங்கிய கடனைக்கொடுக்க இயலாத […]

வாழ நினைத்தால் வாழலாம்!

This entry is part 15 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  உலகப்புகழ் மெரீனா கடற்கரை. பலவிதமான வண்ணங்களும், எண்ணங்களும் சுமந்துத் திரியும் மனிதர்களுடன் நாளும் உறவாடும் ஓயாத அலைகள். மாறி மாறி வரும் மக்கள் மத்தியில் என்றும் மாறாமல் அனைத்திற்கும் சாட்சியாய் நிற்கும் கடல் அன்னை. பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கி, விழுங்கினாலும் பச்சைப்பிள்ளையாய் துள்ளி விளையாடும் தோற்றம். கதிரவன் தம் செங்கிரணங்களை வீசத்துடிக்கும் மங்கிய  இளங்காலைப் பொழுது.   சரசரவென கடலோரம் ஈர மணலில் பாதம் பதித்துக் கொண்டிருந்தவளின் நடையில் இருந்த தள்ளாட்டம் ஏதோ உள்ளுணர்வாக […]

அற்புதமான ஓர் சுய முன்னேற்ற புத்தகம் – Who moved my Cheese

This entry is part 14 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

Who moved my Cheese- மிக சிறிய ஆனால் செறிவான புத்தகம். கதை வடிவில் சுய முன்னேற்ற கருத்துகள் சொல்கிறது இந்த புத்தகம். இதனை எழுதியவர் ஸ்பென்சர் ஜான்சன் கல்லூரி படிப்பை முடித்து சில வருடங்கள் கழித்து சில நண்பர்கள் சந்திக்கிறார்கள். யார் யார் எந்த நிலையில் உள்ளனர் என்று பேசி கொள்கின்றனர். இதை சொல்லி விட்டு நேரே ஒரு கதைக்குள் நுழைகிறார் ஆசிரியர். நான்கு குட்டி எலிகள் ஒரு இடத்தில் உள்ள Cheese-ஐ மகிழ்வுடன் உண்டு வருகின்றன. […]

பி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”

This entry is part 13 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

திரில்லர் படங்கள் இரு வகை. ஒன்று, குற்றமும் குற்றவாளியும் பார்வையாளர்களுக்குத் தெரிந்து விடும். ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது. இரண்டாவது வகையில் பார்வையாளர்களுக்கும் தெரியாது. முதல் வகை எஸ். பாலச்சந்தரின் ‘பொம்மை’. ‘அதே கண்கள்’ இரண்டாவது வகை. எ.ம.வ. முதல் வகை. ஒரு குற்றம் நடந்த பின், கிடைக்கும் தடயங்களை வைத்துக் கொண்டு, அது எப்படி நடந்திருக்கும், யார் செய்திருப்பார்கள் என்று யூகிப்பது ஒரு துப்பறியும் நிபுணரின் மூளை. அதைக் குற்றம் செய்தவனின் குணமாக மாற்றியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம். […]

பாற்சிப்பிகள்

This entry is part 12 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

    சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும் மென்மையான பாற்சிப்பிகளை உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை அச்சமா???   எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம் இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே… எல்லையில் வானும் கடலும் இணையாதென்பது குறித்து நன்கறிந்தும் ஏன் பொய்யான கனவுக் கவிதைகள் கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து?   சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை கடலுக்குள் இறங்காமல் கரையில் சுகமாக இருந்துகொண்டு…   – இஸுரு சாமர […]

தாகூரின் கீதப் பாமாலை – 26 உறக்கத்தில் தவறிய காட்சி !

This entry is part 11 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி யுள்ள போதென் அருகில் வந்தமர்ந்தான் அவன், ஆயினும் நித்திரை யிலிருந்து நான் விழித்தெழ வில்லை ! என்னே எந்தன் சாபக் கேடானத் தூக்கம்? அந்தோ வருந்தி வருவோனே ! அருகில் அவன் வந்த தருணம், நள்ளிரவு ஊன்றிய நேரம் ! கரங்களில் யாழினை ஏந்தி அவனது, கை விரல்கள் மீட்டிய இன்னிசைக் கானங்களில் மனம் ஒன்றிப் போய்ப் பின்னிக் கிடந்தன […]

தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012

This entry is part 10 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது நாள்: 15-08-2012, புதன்கிழமை இடம்: எம். எம். திரையரங்கம் (MM Theater), கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் ஆடவர் விடுதி அருகில்) நேரம்: மாலை ஐந்து மணிக்கு சரியாக (Exactly 5 PM) சிறப்பு விருந்தினர்கள் பாலு மகேந்திரா, வசந்த், பாலாஜி சக்திவேல், பவா செல்லதுரை, மருது, கூத்துப் பட்டறை ந. முத்துசாமி, காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன், நாடகவியலாளர் ஸ்மைல் வித்யா, லெனின் & அம்ஷன் குமார் நண்பர்களே எதிர்வரும் புதன்கிழமை […]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இலக்கியகம் ஏற்பாட்டில் சிறுவர்/இளையோர் சிறுகதைகள் பரிசளிப்பு விழா

This entry is part 9 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  (செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி துணைச்செயலாளர்) “இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம்; இளைஞர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்; தமிழை எப்படி நாம் உறுதியாகவும், நிலையாகவும் வைத்துப் பாதுகாக்கப் போகிறோம்? என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கக் கூடிய காலம்தான் இது. காரணம் தமிழ்ப்பள்ளியை மூட வேண்டும் என்றும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழை அழிப்பதற்கு இன்னொரு தமிழர் மூலமாகத்தான் முயற்சிகள் நடக்கின்றன.” என்று கூறினார் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் டத்தோ […]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மு.வ. நூற்றாண்டு விழா

This entry is part 8 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  (செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி, துணைச் செயலாளர்)   மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரரறிஞர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா எதிர்வரும் 26.8.2012ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவிலுள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் தலைவர் பெ.இராஜேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.   இருபதாம் நூற்றாண்டு கண்ட நிகரற்ற பேராசிரியர் டாக்டர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.வ. என்னும் இரண்டெழுத்து, தமிழ் மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே […]

இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 7 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) உதட்டில் ஒன்றோடும் உள்ளத்தில் வேறொன்றோடும்  புரட்டுக்கள் புரியாத  புனித மனம் கொண்டோருக்கு  இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை சமர்ப்பித்திருக்கிறார் ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள். புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கும் இத்தொகுதி 72 பக்கங்களில் 56 கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.  கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய […]