This entry is part 11 of 11 in the series 18 ஆகஸ்ட் 2019
NO MEANS……? ’NO MEANS NO’ என்று ஒரு படம் சொல்கிறதென்கிறார்கள் ’NO MEANS YES’ என்று நீலம் பச்சை சிவப்பு மல்ட்டி கலர்களில் 90 விழுக்காடு படங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன காலங்காலமாய். NO என்றும் YES என்றும் விதவிதமாய்ப் பொருள்பெயர்த்தபடி NOக்கும் YESக்கும் இடையில் வாழ்க்கையை சிக்கவைத்து சீரழித்து வேடிக்கை பார்க்கும் விபரீத விளம்பரங்களும் வெட்கங்கெட்ட சீரியல்களும் சினிமாக்களும் ’சூப்பர்சிங்கர்’களும்…. 2.விழுமியம் வெறும் வசனமாக… மச்சினிச்சியை அக்கா புருஷனின் இச்சைப்பொருளாய் காட்டும் பாட்டுகளும் படங்களும் விதவிதமாய்… […]
. மீனாட்சிசுந்தரமூர்த்தி நூல் அறிமுகம்; எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டுள்ளது.நான்கடிச் சிறுமையும்,எட்டடிப் பெருமையும் உடையது.307,391 ஆம் பாடல்கள் மட்டும் 9 அடிகளாக உள்ளன. தொகுத்தவர் பூரிக்கோ என்பவராவார்.மாந்தர்தம் மனதின் உணர்வுகளைக் கருப்பொருளின் துணை கொண்டு அழகுற அகவற் பாக்களால் வெளிப்படுத்தும் அகப்பொருள் பற்றிய நூலிது. திணை ;குறிஞ்சி(மலையும் மலை சார்ந்த இடமும்) கூற்று;தோழி. துறை; தோழி கையுறை மறுத்தது. தலைவன் தலைவிக்காகக் கொண்டு வந்த மலர்களைத் தோழியிடம் தந்து அவளிடம் […]
கடலூர் துறைமுகம் பகுதியில் மாலுமியார்ப் பேட்டையில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அது சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட பழைமையான ஆலயமாகும். அங்கு தீமிதித் திருவிழா தொடர்ந்து 177 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். திருவிழாவின்போது பாரதம் படிப்பது நடக்கும். இப்பொழுதுதான் சொற்பொழிவு முறை வந்தது. அக்காலத்தில் பாரதம் மற்றும் இராமாயணங்களையும் ஒருவர் படிக்க மற்றவர்கள் குழுமியிருந்து கேட்பதுதான் வழக்கம். இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள விராச்சிலையில் என் மருமகன் இராமநவமியை […]
அழகர்சாமி சக்திவேல் மொழிக்கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்தியாவின் சிறப்பு. ஆனால் “அந்த வேற்றுமையின் அளவு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த அதே அளவில் இப்போதும் இருக்கவேண்டுமா, அந்த வேற்றுமையின் அளவு நாளாக நாளாகச் சுருங்கி, ஒருங்கிணைந்த இந்தியா என்ற வடிவம் பெறவேண்டாமா” என்பது இந்தியக் கல்வியாளர்கள் சிலரின் எதிர்பார்ப்பு. இந்தக் கேள்வியில் ஓரளவு நியாயம் இருந்தாலும், இந்தியாவின் மொழிக்கொள்கைக்கு இந்த எதிர்பார்ப்பு பொருந்தாது என்பதே எனது பதில் ஆகும். சிங்கப்பூரை உதாரணமாய் எடுத்துக்கொள்வோம். சிங்கப்பூரின் பெரும்பான்மையான […]
இல.பிரகாசம் விபரீதமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஒரு போதும் உண்மையாகாத ஒன்றை மெய்யென முன்மொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையல்லாத போதும். ஒரு பொய்மையான வாதத்திற்கு ஒப்பானதாக கற்பனையான ஒன்றை உண்மையென முன்மொழிந்து கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு முழுமையான அபத்தம். எனது குற்றச்சாட்டுகளின் தன்மையை புரிந்து கொள்ள உங்களுடைய காதுகளை காட்சிப் புலன் நிலைக்கோ அல்லது உங்களுடைய கண்களை கேட்கும் புலன் நிலைக்கோ மாற்றிக் கொள்ள உங்களால் முடியுமா? உங்களுடைய சரீரம் என்று நம்பப்படுபவை எல்லாம் ஆண்குறியைக் கொண்டோ அல்லது […]
சுப்ரபாரதிமணியன் : இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர் வெளியீடு : கரங்கள் பதிப்பகம், கோயம்புத்தூர் மணிமாலா மதியழகன் அவர்கள் புனைவு இலக்கியத்தில் பல்வேறு அம்சங்களை சிறுகதைகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர் அவரின் சமீபத்திய முகமூடிகள் சிறுகதைகள் குறிப்பிடத்தக்க தொகுப்பாகும் ,அவர் சிறுவர்களுக்கும் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார் அதன் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை தாண்டி பொதுத் தலைப்பில் கட்டுரைகள் எழுதும் அவசியம் பல சமயங்களில் […]
மஞ்சுளா என் இரவுப் பாடலுக்காய் திறந்து விடப்பட்ட அறையெங்கும் பொங்கி எழுகிறது நூல்களின் வாசம் என் கண்களை களவாடிச் செல்ல காத்திருக்கும் வரிகள் எந்த நூலின் இடுக்கிலோ ஒளிந்திருக்கின்றன தேடித் திரிந்த பொழுதெல்லாம் களைத்துவிடாமல் இருக்க இளைப்பாறக் கிடைத்து விடுகிறது ஒரு கவிதை சிதறிய மணிகளை கோர்த்தெடுத்து சிந்தனைக் கோப்புக்குள் வைத்த அவையாவற்றையும் கொத்தி எடுக்கின்றன சிறு குருவிகள் கலையாமல் பாடிக் கொண்டேயிருக்கிறேன் அறையின் நூல்களை தின்று கொண்டே…. […]
கௌசல்யா ரங்கநாதன் ——-1-“நினைக்க, நினைக்க நெஞ்சம்” என்ற புகழ் பெற்ற பாடல் என் நினைவுக்கு வருகிறது..ஊம்..எல்லாமே ஒருக்கணப் பொழுதில் நடந்து, முடிந்து விட்டது..இப்படியாகி விடும் எங்கள் நிலைமை என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை..ஒரு சின்ன மனத்தாங்கல்தான்..எப்படியும் சில நாட்களில் எல்லாம் மறந்து போய் சகஜ நிலைமைக்கு திரும்பிவிடும் என்று நினைத்திருந்தது தவறாகிவிட்டது..சம்பவம் நடந்து இன்றுடன் 20 நாட்களாகிவிட்டது..என் புருஷனிடம் இது பற்றி பகிர்ந்து கொண்டால் அவரோ “நாமதான் முன் ஜாக்கிரதையாய் நடந்துக்கிட்டிருக்கணும்” என்கிறார்.“என்னங்க […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ சந்திரனைச் சுற்றுதுஇந்தியத் துணைக் கோள் -1 மந்திர மாய மில்லை !தந்திர உபாய மில்லை !சொந்த மான, நுட்ப மானஇந்தியத் திறமை !பிந்திப் போயினும்முந்தைய ஆற்றல் ! யுக யுமாய்ச்சிந்தையில் செழித்தது.எந்தையும் தாயும்தந்திடும் சக்தி ! ஆதிஅந்த மில்லாத சக்தி !இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்விந்தை யுக்தி ! பலர்நிந்தனை புரியினும்வந்தனை செய்வோம்இந்தியர் நாமெலாம் !உந்திப் பயணம் செய்து சுற்றியசந்திரயான் -1 வெற்றியே !இந்தியக் கொடி இறங்கும் சந்திரனில் […]