தி.ந.இளங்கோவன் ஒரு கையாலாகாத தகப்பனின் வேதனையோடு இந்த சாலையை நான் கடக்கிறேன். மழை வருமென்று பயந்து நெற்குவியலை அள்ளி மூட்டை கட்டியபின் பரிகசித்து அடிக்கும் வெயில் போல பல நாட்கள் என் வேதனை அர்த்தமற்றுப் போனதுண்டு. ஆனால் என்றுமே இப்படி ஆகுமென உறுதியேதும் இல்லாததால் நான் உள்ளுக்குள் பயந்தவனாகவே இருக்கிறேன் இன்னமும், வெளியில் தைரிய முகம் காட்டி. பாம்பா பழுதாவென அறுதியிடமுடியா பேதமை எனை சுயபச்சாதாபம் கொள்ள வைக்கிறது. வெற்று நம்பிக்கை வார்த்தைகளின் மேல் நான் நம்பிக்கை […]
க.நாகராசன் புதுச்சேரி ( பாவண்ணன் எழுதியுள்ள ’மனம் வரைந்த ஓவியம்’ நவீன கவிதைகளைப்பற்றிய அறிமுக நூலை முன்வைத்து ) உயிரோசை இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் பாவண்ணன் எழுதி வெளிவந்த நவீன கவிதைகளைப்பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில் நூலாக தற்போது அகரம் பதிப்பகத்தால் வெளியிட்ப்பட்டுள்ளது. நூலில் மொத்தம் ஐம்பது கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஒரு நவீன கவிஞரின் கவிதையை அறிமுகப்படுத்துகிறது. கவிதையின் மையக்கருவுக்குத் தொடர்பான பாவண்ணனின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கட்டுரை தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட […]
பா.பூபதி பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடியும், பகலில் இரவு கரைவதை என்று புரிந்தாலும் போதுமான அளவு இரவை போர்வையில் அடைகாத்துக் கொண்டேன். ஆனாலும் நேரம் வளர வளர நான் அடைகாத்த இரவின் நிரம் தேய்ந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் தேய்ந்த நிரம் அதற்குமேல் மங்காமல் அப்படியே இருந்தது. இதென்ன இப்படியே இருக்கே! என்று பக்கத்தில் போய் பார்த்ததும் பல்லைக்காட்டி சிரித்தது நிழல். நிழலா! இது நிஜத்தின் பின்னால்தானே இருக்கும். இது… இது இந்த போர்வையின் நிழலாச்சே! அப்படினா […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உறுதியற்ற உன் வருகைக்கு காத்தி ருக்கப் போவதில்லை நான் ! திறந்த வெளிநோக்கிப் பறந்து செல்வேன் ஆயினும் ! சருகான பூக்களி லிருந்து தரையில் உதிரும் இதழ்கள் ! காற்று ஓங்கி அடிக்குது ! கடல் குமுறுது ! உடனே வந்து அற்று விடு வடத்தை ! படகு நதி நடுவே மிதக்கட்டும் படகோட்டி நான் ! காரணம் முடிவு நோக்கிப் போகுது கால […]
சிறகு இரவிச்சந்திரன். முகநூலில் மாலை 5 மணி என்று அறிவிப்பு. இடம் டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர். வழமை போல 6 மணிக்கு ஆரம்பித்தார்கள். அதற்குள் சொற்பக் கூட்டம் தேங்கியது. விழா முடியும்போது 50 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள். விழா மேடையில் சா. கந்தசாமி, ( 7 மணிக்கு வந்த ) பாரதி கிருஷ்ணகுமார், தி.பரமேசுவரி, கவின்மலர், ஆழி செந்தில்நாதன். உட்கார மறுத்த ஜாகீர்ராஜா! 21ம் நூற்றாண்டுச் சிறுகதைகளை வெளியிட்டுப் பேசினார். சா. கந்தசாமி. […]
தசவதாரங்களைத் தாண்டி தானெடுத்த அவதாரமொன்றில் பிறந்தார் இறை மத்தியத்தரக் குடும்பமொன்றில் புத்திரனாய் பந்தய வாழ்க்கையில் வாடகை சுவர்களுக்குள் அலாரங்களின் ரீங்காரங்களுக்கிடையே சீராய் வளர்ந்தான். **** டொனேஷன் படிப்பாயினும் கருத்தாய் பயின்று முதல்வனாய் பவனி அந்தோ பரிதாபம்! ‘கோட்டா’க் கூறு போட்டதில் திசை மறந்த பந்தாய் கிடைத்த கல்லூரியில் தொடர்ந்தது இத்திருநிறைச் செல்வனின் பயணம். **** படித்த மிதப்பில் தந்தையின் நிலத்தில் கால் பதியாது இறுமாந்திருந்தான். சொல்லிச் சலித்த தந்தையின் ஆவி சொல்லாது ஒரு நாள் ஆகாயம் கிளம்பிட […]
”ஏப்பா…. சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே…?” “கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு… அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன விசனமே தீரல.. ஆச்சு தங்கச்சியோட கட்டு சோறு விருந்தும் வந்தாச்சு.. அவ குழந்தைப்பேறுக்கு வரப்போற நாளும் தூரமா இல்ல… இந்த லட்சணத்துல வர சம்பளம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியாயிருக்கு.. இதுல இன்னொரு டிக்கட்டை […]
இரு பாதுகாவல் தேவதைகள் ஒரு பொன்மாலைப் பொழுதில் நகர எல்லையில் இரு பாதுகாவல் தேவதைகள் சந்தித்து, ஒருவரை ஒருவர் வாழ்த்தியவாறு உரையாடலானார்கள். ஒரு தேவதை, “தற்போது என்ன செய்கிறாய், உனக்குக் கொடுக்கப்பட்ட பணி என்ன?” என்றது. மற்றொரு தேவதை, “பள்ளத்தாக்கின் அடியில் வாழும் மிக மோசமாக மதிப்பிழந்த, பெரும் பாவியான, வீழ்ச்சியடைந்த ஒரு மனிதனின் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு முக்கியமான பணி அது என்பது உறுதி” என்று பகன்றது. முதலாம் தேவதை, […]
வர்ஷினி என்ற இந்தப் பெண்ணை மையமாக வைத்து தான் சுந்தரின் மனப்பிரபஞ்சமே சுற்றிக் கொண்டிருந்தது.அழகு,கடவுள் அவளுக்கு அளித்த வரமென்றால், அவர்கள் குடும்பப் பின்னணி அவளுக்கு கம்பீரத்தைக் கொடுத்தது;அவளது நிமிர்ந்த நன்னடையில் தன்னம்பிக்கை தெரிந்தது.கல்லூரி வாழ்க்கையில் படிப்புச் சம்மந்தமான அன்றாடக் கடமைகளை சுந்தர் நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது,உள்ளம் அவ்வப்போது கழுகாய் சிறகு விரித்து அவளின் மனவெளியில் பறந்து கொண்டிருக்கும்.அத்திப்பூத்தாற் போல் ஏதாவதொரு சமயத்தில் அவளருகில் நெருங்கி நிற்கும் போது,அவளது முகம் பிரகாசிக்கும் ஒளியில் அவனுடைய மனம் தொட்டாற்சிணுங்கியாய் கூனிக் குறுகி […]