1. அந்தக் காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்கலாம அவ தோழிக்கிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா; ”நாட்டை ஆளற ராஜா நல்லா இருக்கணும்; நெல்லு நல்லா வெளயணும்; பொன்னு நெறய கெடைக்கணும்; காஞ்சிப்பூவும், செனையாயிருக்கற சின்ன மீனும் இருக்கற ஊர்க்காரனான நீ நல்லா இருக்கணும்; அத்தோட ஒன் தோழனும் நல்லா இருக்கணும்” […]
ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’ யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது. சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே வருமான அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள், உள்ளீடற்ற வெறுமை ஆகியவை மற்ற மதத்தவரிடமிருந்து எந்த விதத்திலும் வேறானதல்ல என்ற ஜன்னலே இந்தக் கதையில் திறக்கிறது. இஸ்லாமியர் அனைவரும் பிற கலாச்சாரங்களை வெறுப்பவர் போன்ற ஒரு பிம்பத்தைப் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com செல்வம் மண்ணுலக வாழ்க்கைக்கும் விண்ணுலக வாழ்க்கைக்கும் இன்றியமையாதது செல்வம் ஆகும். வள்ளுவரும், ‘‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’’(247) என்று செல்வத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. செல்வத்தைப் பெருக்கிப் பிறருக்கு உதவி செய்வோர் யானை மீது செல்வர் என்ற நம்பிக்கையும், ஆலமரங்கள் கெட்டாலும் அவற்றை விழுதுகள் தாங்கும்(495,497498) அதுபோல முதுமையில் உடல்வலிமை கெட்டாலும் இளமையில் அவர்கள் சேர்த்த […]
சேலம் எஸ். சிவகுமார் தேடல் 1 காத்திருந்து காலம் போனது ; பூத்திருந்து பார்வை போனது . கடந்துபோன காலமும், கரைந்து போன பார்வையும் திரும்பவும் கிடைத்தால் – என் தேடலைத் தொடங்குவேன் காத்திருக்காமல். தேடல் 2 குழந்தை இருக்கும் வீட்டில் எல்லாமே கசமுசா ; எதையோ தேடினால் எதுவோ கிடைக்கிறது – வாழ்க்கையைப் போல. குழந்தையும் கடவுளும் ஒன்றுதானோ ! தேடல் 3 கால் கடுதாசி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் எல்லாரும் கடுகடுப்பு, சத்தம் ; மீண்டும் தேடவேண்டும் – […]
. சனிக்கிழமைக் காலை. மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் கிளம்பினோம். டாக்சி மூலம் விஜயா வாஹினி ஸ்டூடியோவுக்குச் சென்றோம். நுழைவாயில் காவலர் எங்களை விசாரித்தார். நாங்கள் சிங்கப்பூரிலிருந்து இரவிச்சந்திரனைப் பார்க்க வந்துள்ளோம் என்று நாதன் அவரிடம் கூறினார். அவர் சலாம் அடித்து எங்களை உள்ளே விட்டார். விஜயா வாகினி ஸ்டூடியோ உள்ளே நுழைந்ததும் அது ஒரு மாய உலகம் போன்று தோற்றம் தந்தது! வீதிகளும் கட்டிடங்களும் கூடாரங்களும் மரம் செடி கொடிகள் கொண்ட பூங்காவனங்களும் என்னை அப்படிதான் திகைக்கவைத்தது. […]
(09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்) கடந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதிய வித்யா பவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்டு தமிழின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரான பாரதிகிருஷ்ணகுமார் உரையாற்றினார். அரங்கம் நிரம்பியிருந்தது. நிரம்பியிருப்பது முக்கியமல்ல. இருந்தவர்கள் அனைவரும் செவிகளைத்தவிர எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தனர் என்பது தான் சிறப்பு. திறந்து வைத்த […]
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்ட் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot
அழகர்சாமி சக்திவேல் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் ஊர்க் கழிப்பறையில் போக இந்த மூணுக்கு மட்டும் முடியவில்லை… பாதகத்தி என்னைப் பத்தி… பத்துவரியில் சொல்லட்டுமா? பாவாடை மேலாக்கில் பாடிஓடித் திரிகையிலே காலோடு ஒழுகிநின்ற தூமையால் சமைஞ்ச பின்னே தாய்மாமன் ஓலைகொண்டு ஆசையாய் வேய்ஞ்சு விட்ட குடிசையிலே குத்தவச்ச குமரியல்ல என் பிறப்பு… பெண்ணாகும் ஆசையிலென் பிறப்புறுப்பு பிடிக்காமல் பிளேடு கொண்டு அறுத்தெரிந்து புழைக்குழியை உருவாக்கி நானே சமைஞ்சுக்கிட்டேன்.. நாதாரிப் பிறப்பானேன்… கிராமத்து மாமன்கள் […]
சேயோன் யாழ்வேந்தன் அணையில்லாக் காலங்களில் ஆண்டெல்லாம் நதிபெருகி சாலையோரக் குழிகளிலும் துள்ளியாடும் கெண்டைகளில் ஒன்றிரண்டை ஈர்க்கில் கோர்த்து சுள்ளிகளைச் சேகரித்துச் சுட்டுத்தின்ற காலமெல்லாம் மலையேறிப் போச்சு என அங்கலாய்த்து, பின்னொரு நாள் மலையேறிப் பார்த்தபோது சொன்னார்கள் அவர்கள் காலமும் மலையிறங்கிப் போயிடுச்சாம்.
அமொிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும்(உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் ஆகிய முப்பெரும் பிாிவுகளின் கீழ் இம்மாநாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆய்வரங்கத்தில் பாா்வையாளராகப் பங்கேற்பதற்குாிய கட்டணம்- உத்தமம் உறுப்பினா்களுக்கு ரூ.2000 உத்தமம் உறுப்பினா் அல்லாதவா்களுக்கு ரூ.3000 மாணவா்களுக்கு ரூ.2000 இம்மின்னஞ்சலுடன் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. தொடா்புக்கு முனைவா் […]