சிறகு இரவிச்சந்திரன் ஜெகதீசனுக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மல்லிகாவிற்கு கல்யாணம். அதுவும் சாதாரண மல்லிகா இல்லை. பட்டதாரி. அதுவும் சாதாரண பட்டதாரி இல்லை. முதுகலை பட்டதாரி. அரசு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை. கை நிறைய சம்பளம். நேற்றுதான் அப்பா ஊரிலிருந்து கடிதம் போட்டிருந்தார். ஆவணி மாதம் 10ந்தேதி திருமணம் விழுப்புரத்தில் நடத்தப் போகிறார்கள். மாப்பிள்ளைக்கு அரகண்ட நல்லூர். திருக்கோயிலூர் பெருமாள்தான் இந்த வரனை இவர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அப்பா அப்படித்தான் எழுதி இருந்தார். திருக்கோயிலூரில் இருந்து பத்தாவது […]
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் தொழில் துறை பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் கிடைத்தாலும் தொழிலாளர் பற்றாக்குறை அதை முடிக்க முடியாமல் தாமதமாக்குகிறது.அல்லது நூல் விலை உயர்வு அல்லது மனித உரிமை மீறல்கள் என்னும்படியான சுமங்கலித் திட்டத்தில் பெண்களின் மீதான துன்புறுத்தல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, சாயம் சார்ந்த பிரச்சினைகள் என்று இருந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் செயல்பட்டு வந்த சில மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதி அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன. அல்லது பெங்களுருக்கு சென்று விட்டன […]
டாக்டர் அப்துல் கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vw9tYzAkctU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q57FCLQUR94 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J8XJjkA5NuQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9CKCfiX3uO0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TnX7SvAbf5k +++++++++++++++++++ “உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு […]
ஜோதிர்லதா கிரிஜா இந்தியாவின் அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலும் அப்துல் கலாம் அவர்களின் அளவுக்கு மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றவர் வேறு யாரும் இலர். அவரை அப்பெரும் பதவியில் அமர்த்திய வாஜ்பேயி அவர்களுக்கு நாம் கட்டாயம் நன்றி கூறியே ஆகவேண்டும். இப்பதவி இல்லாமலேயே ஒரு விஞ்ஞானி என்கிற அளவில் அவரது புகழ் ஈடு இணையற்றது தானென்றாலும், அவரது தகுதியை உணர்ந்து வாஜ்பேயி செயல்பட்டதைப் பாராட்டியே தீரவேண்டும். ஜவாஹர்லால் நேரு சிறு குழந்தைகளின் உறவில் மகிழ்ந்தது போல் அப்துல் கலாம் […]
பாவலர் கருமலைத்தமிழாழன் மரம்போல உயர்வாக வளர்வ தாலே மனிதனுக்குப் பெருமைவந்து சேர்ந்தி டாது மரம்போலப் பிறருக்குப் பயனை நல்கும் மனமிருந்தால் தான்அவனை மனித னென்பர் ! அரம்போலக் கூரறிவு இருப்ப தாலே ஆன்றோனாய்ப் புகழ்வந்து குவிந்தி டாது கரத்தாலே அணைத்துபிறர் துயரைப் போக்கும் கருணையிருந் தால்தான்இப் புவியும் போற்றும் ! என்னஇந்த சாதியிலே பிறந்தோ மென்றே எண்ணிமனம் ஏளனத்தில் குறுகி டாமல் என்னயிங்கே சாதிக்கப் பிறந்தோ மென்றே எண்ணிமனம் செயல்செய்து நிமிர வேண்டும் ! சின்னதொரு தோல்விக்கும் […]
முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர் ‘புறநானூற்றின் வாயிலாக எண்வகை மெய்ப்பாடுகளைப் பயிற்றுவித்தல்” எனத் தரப்பட்டுள்ள தலைப்பைப் பொதுத்தலைப்பான “இலக்கியம் பயிற்றுவித்தல்” என்பதற்கேற்ப “எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்” எனும் தலைப்பில் இப் பயிலரங்க உரை அமைகிறது. இதனடிப்படையில் இக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் என்பது தெளிவுரை, பொழிப்புரை, விரிவுரை, விளக்கவுரை ஆற்றுவது என்பதாகவே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. சிறப்பாக, ஓரிரு இடங்களின் நுட்பங்களை ஆய்வுநோக்கில் அணுகுவதும் எப்போதோ நிகழ்கிறது. பாடத்திட்டம், தேர்வுமுறைக்கேற்பவே பயிற்றுவித்தல் நிகழும். […]
முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், இந்தத் தலைப்பில் முத்தொள்ளாயிரத்தை நோக்கி என்ன கண்டறிய முடியும் என்று தோன்றும். ஆனால், “அறம் இன்றி இலக்கியமில்லை@ அறமில்லாதது இலக்கியமில்லை” என்னும் நோக்குநிலையில் எல்லா இலக்கியங்களுக்குள்ளும் அவ்வவ் இலக்கியப் படைப்பாக்கப் பின்னணிக்கேற்ற ஓர் அறவியல் அறிவுறுத்தல் நிலை அறிவித்தல் நிலை அறிவுணர்த்தல் நிலைப் பார்வை ஊடாடிநிற்பது இலக்கிய இயங்கியல் இயற்கையாகும். எனினும், அறத்தை அறிவுறுத்தும் முதன்மைநோக்கப் போக்கு இல்லாத முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை எத்தகையதாக அமைந்துள்ளது என்பதை இக் கட்டுரை ஆராய […]
சிறகு இரவிச்சந்திரன் 0 கமலின் வெற்றிப்படத் தலைப்பை வைத்து ஒரு ஒட்டுத்துணி கதையை படமாக்கி அவருக்கு அவப்பெயர் உண்டாக்கி இருக்கிறது சுராஜ்-ஜெயம் ரவி கூட்டணி! சக்தியும் அஞ்சலியும் காதலிக்கிறார்கள். சந்தர்ப்பவசத்தால் சக்தியும் திவ்யாவும் கணவன் மனைவி ஆகிறார்கள். மனம் சேராத தாம்பத்தியத்தை முறிக்க அவர்கள் எண்ணும்போது இருவருக்கும் காதல் வர, சுபம். ஜெயம் ரவிதான் சக்தி. ஆனால் அவரை விட சின்னச்சாமியாக வரும் சூரி நன்றாக நடிக்கிறார். அதைவிட மொட்டை ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பனாக பட்டையைக் கிளப்புகிறார். […]
-எஸ்ஸார்சி ‘நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே எதுக்குவரணும்?’ ‘சிடியில பிளாட் வீடு வாங்கிட்டு அதுவும் இந்த கன்னா பின்னா ஆளுவுளு கூட மல்லுக்கட்டவேண்டிருக்கு’ ‘எனக்கு இப்ப வண்டி வாங்க முடியல்லே. பிளாாட் கடன மொதல்ல அடைக்கணும் நான் என்ன பண்ண முடியும்’ ‘சார் அது வரைக்கும் என் பெரிய வண்டி கொஞ்சம் முன்ன பின்ன நிக்கட்டுமே’ ‘என்ன சாரு நீங்க பேசுறது.எனக்குன்னு […]