-தினேசுவரி, மலேசியா ‘அழிப்பு’க்கும் ‘அளிப்பு’க்கும் இடைவெளி அதிகம் இருப்பினும்.. அளித்து அழிப்பதற்கு இங்கு அழைப்பவர்களே அதிகம்….. அன்பளிப்புகளில் மூழ்கிப்போக எப்படியோ கண்டுப்பிடித்து விடுகின்றனர் சில ‘வம்பளிப்புகளை’… வம்பாகி போகும் போது தெளிகிறது அளிப்புகளின் இறுதி வாசல் அழிப்பே என்று……… இருந்தும் ‘அளிப்பு’க்கும் ‘அழிப்பு’க்கும் இடைவெளி என்பது அதிகம் தான்…
– பா.சத்தியமோகன் வானில் பறக்கும் பறவையிடம் இரும்புப் பூட்டு ஒன்றைக் காட்டினேன் அது சிரித்துக் கொண்டே பறந்து விட்டது. தவழும் மழலையிடம் கூர் கத்தி ஒன்றை நீட்டினேன் மேலும் கலகலப்பானது. அப்போதுதான் பனியில் துளிர்த்த மலர்க்கொத்து ஒன்றிடம் என் துக்கக் கம்பியை விவரித்தேன் அதுவோ மலர்ச்சியை நிறுத்தவேயில்லை. எனது குளியலால் சிதறப்போகும் எறும்புகளிடம் அச்சத்தை விளக்கினேன் அவையோ சுறுசுறுப்புடன் உள்ளன நாளைய உலகம் நீருக்குத் தவிக்கும் எனும் மிரட்டலை ஓடிச்சென்று தாமரை ததும்பும் குளத்திடம் சொன்னால் அதன் […]
பஞ்சு மனம் கொண்டவர்… வானத்தைச் சுருக்கி இதயத்துள் அடக்கி . ரணமனங்கள் கண்டெடுத்து மருந்திடும் மகத்துவம்..! புனிதம் குணத்திலும் புண்ணியம் மனதுள்ளும் ஒற்றைத் திரியாய் …நின்று.. ஏற்றும் ஒளிச்சங்கிலிகள்..! புவியெங்கும் ஒளி சேர்த்து.. இருளை துரத்திய தாயே..! கோடிக்கண்கள் தேடிடும்… யாவர் கால்களும் நாடிடும்.. வெள்ளை ரோஜா உம்மைப் போற்றித் துதிகள் பேசிடும்… என்றோ அரும்பிய இயக்கம் இன்றும் வாழும் அதிசயம்..! அன்புக் கரங்கள் ஏந்தி… கருணையால் துயர்துடைத்து… கனிவாய் தெம்பளித்து.. தொட.. விலக்கியவரைத். தொட்டணைத்தீர்..! தேசியக் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா உன் தந்தை உத்தம சீலன் பார்பரா ! உன்னத கோமான் ! வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்ற விதியைப் பின்பற்றுபவர். தான் தந்த நன்கொடைப் பணம் வெளியே தெரிந்தால் அத்தனை அருட்கொடை நிலையங்களும் கையேந்திக் கேட்கும் என்று கூட்டத்தில் பெயர் சொல்லக் கூடா தென்று வேண்டிக் கொண்டார். விளம்பரத்துக்கு ஏங்கிக் கிடக்கும் செல்வந்தர் மத்தியில் […]
அஜய் குமார் கோஷ் அறந்தாங்கி பெண்பூக்கள் மாக்கோலமிட வருகிறது மார்கழி சிரிப்புக்களுடன் தெரு நிறைகிறது வருகிறது மார்கழி மெல்லிய பனியில் மனது நனைகிறது வருகிறது மார்கழி மரபின் ஈரம் காய்ந்து போய்விடவில்லை வருகிறது மார்கழி
கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் […]
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ சில் வண்டுகள் ரீங்காரமிடும் ஓர் இரவும் பகலுமற்ற இடைத்தருணத்தில் அவன் வருகையை தவிர்க்கவியல்வதில்லை மெல்லிய புகை தன் சூழ மிதக் குளிரினூடே ஏதோ ஒன்றைப் பகர நினைப்பதாய் அமர்வான் என்னருகாய்! மிக வலியதாய் பாதித்தலுக்குட்பட்ட அந்நாளுக்கான சில அவசியச் செய்திகளை அசைபோட்டுக் கிடப்பான் ஒன்றுமற்றுப் போன விஷயமொன்றிற்காய் யோசனையிட மெனக்கெடுவதாய் நடிப்பான் எப்படி இருந்திருக்கக் கூடாதென்றும் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டுமென்றும் அறிவொழுகும் தன் தலை வழியாய் புத்தி சொல்லிக் கிடப்பான் சில கணங்கள் வரை […]
பாரதி புகழ் ஓங்குக!! ஓர் நற்செய்தி! மகாகவி பாரதியாரின் 130 ஆவது பிறந்த நாளான 11.12.2011 அன்று முதல் பாரதியாரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் வழங்க www.mahakavibharathiyar.info என்னும் இணையதளம் தஞ்சாவூர் பாரதி சங்கத்தால் தொடங்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதைப் பயன்கொள்ளுமாறு வேண்டுகிறோம். இங்ஙனம், வீ.சு.இராமலிங்கம், தலைவர், பாரதி சங்கம் தஞ்சாவூர்.
பல பெரிய மேற்கத்திய சில்லரை வியாபாரிகள் இந்தியாவின் 120 கோடி ஜன சந்தையால் கவரப்பட்டு தங்களின் வியாபாரங்களை இந்தியாவில் திறக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றன. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் இந்தியாவில் கடை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். உண்மையில் வியாபார உலகில் இது ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரக் கூடிய ஒரு முடிவு. நம்மில் மிச்சமிருக்கும் சில அடையாளங்களை நீக்கிவிடும் வாய்ப்புள்ள ஒரு மிகப் […]
மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும், மீன் குழம்பை புளிப்பா காரசாரமா சுள்ளுன்னு வைக்கணும் என்பார்கள். கர்ப்பிணி பெண்கள், ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள், பியர் குடித்தவர்கள், என எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும், மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது, எவ்வளவு வேண்டுமானாலும், எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம். அதில் இது ஒரு ஈசியான முறை. மீனை கடைசியில் தான் போடணும் இல்லை என்றால் குழைந்து விடும். தேங்காய் பவுடர் இல்லாதவர்கள், தேங்காய் பத்தை நான்கு […]