ஜி.ஜே. தமிழ்ச்செல்வி வடிக்கப் படுகின்றன நவீன சிற்பங்கள் கடற்கரையில், பிரம்மனின் படைப்பு இலக்கணத்தை வெற்றி கண்டதாக ! பிஞ்சு விரல்களின் மண் பூச்சுக்களில் வர்ணம் தீட்டிக் கொள்ள முற்படும் மனங்கள் அத்தனையும்! சுற்றுப்புறம் ஸ்தம்பிக்கக் கூடும் அழகியலாய் வடிக்கப்படும் கற்பனைக் கவிதை களுக்காக ! ஒரு மலையைக் கட்டியெழுப்ப மழலை விரல்களுக் குத்தான் ஆகாய பெலன் ! கட்டிய பின் பொங்கிவரும் குறுஞ் சிரிப்பில் தோய்ந்து போகிறதே என் இதயம். ஏதேனும் ஒரு மழலையின் இதயம் பரிதவிக்கக் கூடும் […]
நவம்பர் 4 2001 இதழ்:பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்வுக்கான முன்னுரை- ராஜன் குறை (நிறப்பிரிகை 1993)- பெரியார் சாதிகளை ஒழிப்பதற்கான முனைப்பில் தீர்மானமாக இருந்தார். மதம் மற்றும் வருணாசிரமப் பாரம்பரியம் மூலம் நால் வருணத்தைக் கட்டிக் காப்பவர்களை கடுமையாக எதிர்த்தார். இறுதி நாட்களில் அவர் ” கருவறை நுழைவுப் போராட்டம், அனைவரும் அர்ச்சகராகுதல்” ஆகியவற்றை வலியுறுத்தும் போது சாதி ஒழிப்புப் போராளியாகவே தெரிகிறார். நாத்திக வாதத்தை ஒப்பிட சாதி […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா காத்திருக் கிறாள் எனக்காகக் காரிகை ஒருத்தி ! எல்லாம் உள்ளது அவளிடம் ! இல்லையென அவள் எதுவும் இழக்க வில்லை! காமசக்தி இல்லையேல் மாந்தரிடம் காணாது போகும் எல்லாம் ! அல்லது தகுதி வாய்ந்த மனித ஈர்மை இல்லாமல் […]
-தாரமங்கலம் வளவன் “ என்னோட ஒரே ஆசை எதுன்னா, நான் நடிகைங்கறத மக்கள் மறந்துடணும்.. கடைத்தெருவில நா நடந்தா யாரும் என்ன கண்டுகொள்ளக்கூடாது…. ப்ரியா இருக்கணும்… மனசுக்கு பிடிச்சதை நெறய சாப்பிடணும், வெளியில போனா, யாரும் என்ன கண்டு கொள்ள கூடாது.. இது தான் என்னோட ஆசை…” மும்பை விமானத்தில் இருந்து சென்னையில் இறங்கியவுடன், ஒரு குழந்தையைப் போல் சொன்னாள் நடிகை புஷ்பவல்லி. ஒரு கதா நாயகி நடிகைக்குள் இப்படி ஒரு ஆசையா என்று சந்திரன் வியந்து […]
சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம் KFC உணவகம் அருகில். நேரம்: மாலை 5 மணிக்கு. Contact: 9840698236 நண்பர்களே சென்னையில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவிருக்கிறது. இதில் தேர்ந்த வாசகர்களுக்கும், புதிதாக படிக்க வரும் ஆர்வலர்களுக்கும் இருக்கும் பெரும்பிரச்சினை, எந்த புத்தகத்தை வாங்குவது, அதை ஏன் வாங்க வேண்டும் என்பதுப் போன்ற கேள்விகள்தான். இந்த ஆண்டு […]
டாக்டர் ஜி ஜான்சன் ஃபோபியா ( Phobia ) என்பதை காரணமில்லா அச்சவுணர்வு, அச்ச நோய் மருட்சி, மருளியம் என்று தமிழில் கூறுவோர் உளர். பெரும்பாலும் இது நோய் தன்மையுடைய அச்சக்கோளாறு அல்லது வெறுப்புக்கோளாறாக இருக்கலாம். ஃபோபியா என்பது கிரேக்கச் சொல்லான ஃபோபோஸ் ( phobos ) என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் அச்சம் அல்லது தப்பித்து ஓடுவது ( fear or flight ). ஃபோபியா என்பது அறிவுப்பூர்வமற்ற, செயலிழக்கச் செய்யவல்ல அச்சத்தால் வலுக்கட்டாயமாக சில […]
தத்தம் இல்லங்களில் , நடைபெற இருக்கும் , பேத்தியின் பெயர்சூட்டுவிழா பேரனின் காதுகுத்தல் மகளின் பூப்பு நீராட்டு மகனின் திருமணம் மருமகளின் வளைகாப்பு அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி தாத்தாவின் சதாபிஷேகம் வாரிசின் புதுமனைப்புகுவிழா சகலமும் தடையின்றி முடியும்வரை , கிழம் இருக்கணுமே என்ற , சுயநல பிரார்த்தனையில் , மூச்சைப் பிடித்துக் கொண்டு , நார்க்கட்டிலில் , நாரோடு நாராய் கிடக்கிறது தொண்ணூறைக் கடந்த பெரிசு .
21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள் மறுபடியும் பெற்றோரை விட்டுப் பிரிவது கஷ்டமாகவே இருந்தது. தாய் சானுக்கு ஹாங்காங்கில் தான் எதிர்காலம் இருக்கிறது என்று அறிந்த போதும், பிரிய மனமின்றி அழுதார். சானுக்கு இரண்டு வருட கெடு வைத்தார் தந்தை. அந்த இரண்டு வருடங்களில் அவனால் வெற்றி பெற முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவிற்கே திரும்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார். வெற்றி பெற இரண்டு வருடங்கள் போதவில்லையென்றாலும், தோல்வியைச் சந்திக்க அதுவே போதுமானது என்று சான் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 38.கருப்புக் காந்தி எனப் போற்றப்பட்ட ஏழை……… “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” அடடா…நல்ல பாட்டு…அருமையாப் பாடுறீங்க….என்ன போனவாரம் கேட்ட கேள்விக்குப் பதிலக் கண்டுபிடிச்சிட்டீங்க போல…நீங்க பெரிய ஆளுதாங்க…அவரு யாரு சொல்லுங்க பார்ப்போம்…ஆமா….சரியாச் சொன்னீங்க…அவருதாங்க நம்ம தமிழகத்திற்கும் பாரதத்திற்கும் பெருமை சேர்த்த காமராஜர். நாட்டையே […]
[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -12 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 23 & படம் : 24 [இணைக்கப் பட்டுள்ளன] ++++++++++++++++++ காட்சி ஆறு முடிவை நோக்கிச் சீதா [படம் : 1] இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை அகற்றி விடுகிறேன். வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான […]