டிசம்பர் 30, 2017 அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016 ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் விளக்கு விருது இவ்வாண்டிலிருந்து இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவரையும், அம்பை, பெருந்தேவி , தமிழச்சி தங்கபாண்டியன் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 75,000 மதிப்புள்ள இவ்விருதுகள் விரைவில் […]
பி.ஆர்.ஹரன் அன்புள்ள ரஜினிகாந்த் வணக்கம் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு, அந்த ஆண்டவனையும் ஆதரவானவர்களையும் நம்பி, அமைதியான முறையில், அழுத்தமான அறிமுக உரையுடன், அரசியலில் நுழைந்திருக்கிறீர்கள். வரவேற்கிறேன். பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!! எனக்குத் தேவை “தொண்டர்கள்” அல்ல; “காவலர்கள்” என்று கூறியதன் மூலம் உங்களை வாழவைத்த தெய்வங்களான உங்கள் ஆதரவாளர்கள் தமிழகத்தைக் காவல் காக்கும் தெய்வங்களாக விளங்க வேண்டும் என்று உணர்த்தியுள்ளீர்கள். உங்களுடைய மந்திரமாக “உண்மை, உழைப்பு, உயர்வு” என்று உச்சரித்துள்ளீர்கள். உண்மையாக உழைத்தால் உயர்வு கிட்டும் என்று […]
சுப்ரபாரதிமணியன் திருப்பூரைச்சார்ந்த 114 தியாகிகளின் வாழக்கை வரலாறுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல்.விடுதலைப் போராளிகள் யார் என்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட 1972ம் ஆண்டுக்குறிப்பு நூல், கொடிகாத்தக்குமரன் என்ற தியாகி பி எஸ். சுந்தரம் எழுதிய நூல் மற்றும் தியாகி பி ராமசாமி எழுதிய நூல்களின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் சுதந்திரப்போராட்ட வீர்ர்கள் சமிதியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வரும் பி ஆர். நடராஜன் இந்நூலை எழுதியுள்ளார். ஏறத்தாழ 90 ஆண்டுகால சுதந்திரப்போராட்டத்தில் திருப்பூர் பகுதியில் […]
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில் ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள் இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய் தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்….. அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம் என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள். அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட வழியற்ற தன் நிலைக்காய் வருந்தியதேயில்லை யவள். பார்புகழும் படைப்பாளியின் பாதியாக இருந்தது பற்றி பத்திகளோ, புத்தகங்களோ எழுதப் புகாதவள்; பக்கம் பக்கமாய் தங்கள் அந்நியோன்யத்தை கடைவிரிக்கப் பழகாதவள்; புத்தியில்லாதவளல்ல, புன்மதியற்றவள். வரித்துக்கொண்டவன் வாரிவழங்கிய அன்பை வழிய வழிய மனங்கொள்ளாமல் சேகரித்துக்கொண்டவள். […]
அருணா சுப்ரமணியன் அரைமணி நேரம் தாமதமாய் வந்து சேர்ந்தவன் சாதாரணமாக போக்குவரத்து நெரிசல் என்கிறான்.. குறித்த நேரம் கடந்தும் வராதவள் அழைத்து பேசும் பொழுதே சொல்கிறாள் வர இயலவில்லை என… நேரத்திற்கு சென்று காத்திருக்கும் பொழுதுகளில் இவ்வாறாக இவர்கள் கிணற்றில் விழுவதையே நாளும் காண நேரிடுகிறது… -அருணா சுப்ரமணியன்
கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டியில் விஜயலட்சுமி புன்னகையுடன் … முதலில் அவர் யாரோவென நினைத்தார் இடது புருவ மத்தியில் இருந்த தழும்பு ஐம்பது வருட நினைவுகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தது அவரும் அவளும் மனமொத்த காதலில் ஒவ்வொரு கல்லையும் பார்த்துப் பார்த்துக் கற்பனைக் கோட்டையை உருவாக்கினார்கள் அவள் கண்களில் அவரைப் பற்றிய ஆசைகள் மிதந்துகொண்டிருக்கும் அவர் சொற்களில் அவர்களது எதிர்காலச் சம்பவங்கள் வரிசைப்பட்டுக் கொண்டே இருக்கும் சங்கீதத்தின் மகிழ்ச்சியான எல்லா ராகங்களும் அவர்கள் உரையாடலில் வந்து போகும் மலர்களின் மென்மையை […]
அன்புள்ள திண்ணை வாசகர்களே ! எனது புதிய நூல் “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு இப்போது தாரிணி பதிப்பக வெளியீடாக அதிபர் திரு வையவன் வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ? அல்லது தாறுமாறாகத் தானாக உருவான வடிவா ? காரண – விளைவு நியதிப்படி பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பு என்பது திண்ண மாகிறது. படைப்பாளியை நம்பாத விஞ்ஞானிகள், நாத்திகர் பிரபஞ்சம் தானாக உருவானது, உயிரினங்கள், மனிதம் உட்படத் […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் […]
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) பரந்துகிடக்கும் உலகில் பரவியிருக்கும் தமிழர்களின் தமிழ் தலைநிமிர தமிழ்த்தலை நிமிர தமிழர்களின் நிலையுயர எழுதுகோலை மட்டுமே தலைவணங்கவைக்கும் வணங்காமுடிகளே! உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் தமிழ்வெளிச்சம் பரப்பும் தமிழ்மூளைகளே! மூளைச்சூரியன்களே நிலாக்களே! நித்திலங்களே! நம்மைச்சந்திக்க வைத்த-தமிழைச் சிந்திக்கவைத்த திருமூலர்களே! மாநாட்டு மூலவர்களே முனைப்புடன் முன்னின்றுழைத்த முன்னோடிகளே! அரசுமொழியாய்த் தமிழ் முரசுகொட்டும் அதிபர் பதவியும் அரிய பதவியும் தமிழர்க்குக் கிட்டும் அதிசய நாடாம் கடல்நுரை கொலுசணிந்த கன்னி கட்டடக்கவிதைகளின் தொகுப்பு கப்பல் வாத்துகளின் விளையாட்டு மைதானம் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி இந்நூலின் பார்வை பெண்மை பற்றி,கற்புடைப் பெண்டிர், பொதுப் பெண்டிர்(கணிகையர்),இல்லிருந்து வழுவிய பெண்டிர்(ஒருவனுக்கு உரியவளான பின் வேறொருவன்பால் மனம் செலுத்திய பெண்டிர்) என மூன்று வகையினதாய் அமைகிறது. 1.போற்றற்குரியார்;(கற்புடைப் பெண்டிர்) நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும் பீடுறும் மழைபெய் கவெனப் பெய்தலும் கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால் பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே.(7) இல்லறத்தில் கருத்தொருமித்து வாழும் தலைவன் தலைவியரில் நாடும் ஊரும் புகழுமாறு வாழ்தலும்,பருவமழை பெய்யெனப் பெய்வதும் தலைவியின் திறத்தால் மட்டுமே விளையும் எனும் […]