தேச விரோதத்திற்குப் பயன்படும் கருத்துச் சுதந்திரம்

This entry is part 11 of 11 in the series 3 டிசம்பர் 2017

பி.ஆர்.ஹரன் பாலிவுட் (Bollywood) என்று அழைக்கப்படும் ஹிந்தித் திரையுலகில் சஞ்ஜய் லீலா பன்ஸாலி பிரபலமான இயக்குனர்களுள் ஒருவர். இவர் சமீபத்தில் “பத்மாவதி” என்கிற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், அந்தத் திரைப்படத்தில் பத்மாவதி என்கிற சரித்திரப் புகழ் பெற்ற, உயிரைவிட மானத்தைப் பெரிதாக மதித்து அதைக் காப்பாற்றிக்கொள்ளத் தீயில் விழுந்து உயிர் தியாகம் செய்துகொண்ட, வீரப்பெண்மணியான பத்மாவதியின் குணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசியவே, நாடெங்கும், […]

பாகிஸ்தானின் க்வாதர் துறைமுகமும் ஈரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகமும்

This entry is part 10 of 11 in the series 3 டிசம்பர் 2017

இந்தியாவினால் கட்டி முடிக்கப்பட்டிருக்கும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகத்தின் முதலாவது பகுதி இன்றைக்கு பயன்பாட்டிற்கு வருகிறது. முன்னாள் பாரதப் பிரதமர் அவர்களால் வழிமொழியப்பட்டு, பின்னால் வந்த காங்கிகிரஸ் அரசினால் மூலையில் தூக்கியடிக்கப்பட்டுக் கிடந்த ச்சாபஹார் துறைமுக புராஜெக்ட் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக, மிக முக்கியமான ஒன்று. இதன்மூலம் ஆப்கானிஸ்தானும் பிற முன்னாள் சோவியத் பகுதிகளான உஸ்பெக்கிஸ்தான், தஜாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியர்கள் வியாபாரத் தொடர்பு கொள்வது எளிதாக்கப்பட்டிருக்கிறது. மத்திய […]

நான் யார்

This entry is part 1 of 11 in the series 3 டிசம்பர் 2017

மகி இயல்பாய் இருப்பதாய்த்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அயலிடம் அநீதி அடைகையிலென்னவோ விழிகள் பெருத்து நாக்கு நீண்டுவிடுகிறது உயிர்கள் இம்சை காண்கையில் உணர்வில் அழுத்தி சிலுவை தூக்கிச் சுமக்கிறது மனசு கயிறுகளால் கட்டப்படும் கணங்களில் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அறுத்துக் கொள்ள கத்தி தீட்டுகிறேன் குயிலிசைக்குள் மூழ்கி குழல்களுக்குத் துளையிட்டு காற்றை அவைகளில் செலுத்துகிறேன் துயிலும் உடலங்கள் துறந்த ஆன்மாக்களுக்கு நித்திய வழி செதுக்க நினைக்கிறேன் பயின்றவை ஒன்று பழகியவை ஒன்று இரண்டையும் முறுக்கித்திரி செய்கிறேன் வயிற்றுப் பசியுணர்ந்தும் […]

தொடுவானம் 198. வளமான வளாகம்

This entry is part 2 of 11 in the series 3 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 198. வளமான வளாகம் திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் வாழ்க்கை மிகவும் இன்பமாகக் கழிந்தது. மருத்துவர்களுக்குள் நல்லுறவு நிலவியது. வேலூரில் படித்த மருத்துவர்கள் அதிகம் என்பதால் நாங்கள்ஒரு குடும்பம்போல் செயல்பட்டோம். டாக்டர் ராமசாமி வேலூரில் படிக்கவில்லை.. அவர் பாண்டியில் படித்தவர்.அடிக்கடி மருத்துவர்களின் வீடுகளில் விருந்துகள் நடந்தன. ஒரு நல்ல மருத்துவக் குழுவாக நாங்கள் செயல்பட்டோம். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா அனைவரையும் அணைத்துச் செல்லும் தலைவராகச் செயல்பட்டார். சுற்று வட்டார கிராமத்து […]

வாழ்க்கைப் பந்தயம்

This entry is part 3 of 11 in the series 3 டிசம்பர் 2017

தடை தாண்டும் ஓட்டமாய் வாழ்க்கைப் பந்தயம் கடந்த தடைகள் கணக்கில்லை துல்லியம் தொலைத்த விழிகளுக்கு துணைக்கு வந்தது கண்ணாடி ஒலிகளைத் தொலைத்த செவிகளுக்கு துணைக்கு வந்தன பொறிகள் ‘லப்டப்’பில் பிழையாம் ‘வால்வு’ வந்ததில் வாழ்க்கை வந்தது சில எலும்புகளின் வேலைக்கு எஃகுத் துண்டுகள் இனிப்போடும் கொதிப்போடும் இருந்தே போராட மருந்துகள் நீள்கின்றன தடைகள் தள்ளாடும் கால்களைக் கவ்வுகிறது பூமி புதைகிறேன் எரியப்பட்ட கல் மூழ்கிவிட்டது வட்ட வட்ட அலைகள் மறைந்துவிட்டது அசையாமல் கிடக்கிறது குளம் அமீதாம்மாள்

நீயே சிந்தித்துப்பார் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 4 of 11 in the series 3 டிசம்பர் 2017

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஓரிரு வார்த்தைகள் உள்ளன உனக்கு நான், நேரே சொல்லிவிட, நீ செய்யும் தகாத வினைகள் பற்றி ! நம் கண்களை மூடிச் செய்தால் கிடைக்கும், நல்ல வெகுமதிகள் என்று நீ சொல்லிக் கொண்டிருக்கும் பொய்களைப் பற்றித்தான் ! விரும்புவதைச் செய் நீ ! போக நினைக்கும் இடத்துக்கு ஏகு நீ ! ஆனால் நீயே சிந்தித்துப் பார் முதலில் ! ஏனெனில் நானிருக்கப் போவ தில்லை உன்னோடு ! நீ […]

மெனோபாஸ்

This entry is part 5 of 11 in the series 3 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் மெனோபாஸ் என்பது என்ன? மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம். இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை. மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது? இந்த காலக் கட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன.ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதால் இவை நிகழ்கின்றன. சில பெண்கள் எவ்வித அறிகுறியும் இன்றி மெனோபாஸ் […]

உறவு என்றொரு சொல்……

This entry is part 6 of 11 in the series 3 டிசம்பர் 2017

ஒரு பந்து போனால் இன்னொரு பந்து; ஒரு பம்பரம் போனால் இன்னோன்று. ஒரு சொப்பு போனால் இன்னொரு சொப்பு; ஒரு பொம்மை போனால் இன்னொன்று. குழந்தைகளைப்போல சில பெரியவர்களுக்கு உறவுகள்…… ஒரு கிச்சா போனால் இன்னொரு கிச்சா; ஒரு மச்சான் போனால் இன்னொரு மச்சான். மிச்ச சொச்ச உறவுகளும் கிடைக்கும் சந்தைகளும் உண்டு. நீத்தாருக்காக அழ நேரமில்லை. நினைவைத் தொழுவது நவீனத்துவமில்லை. முகநூல் பக்க ‘முக்கிய நிகழ்வுகள்’ பகுதியில் மூவேழுலகமும் காண ‘I am in a […]

நந்தினி

This entry is part 7 of 11 in the series 3 டிசம்பர் 2017

அருணா சுப்ரமணியன் புல்லின் மேல் படுத்துறங்கும் மின்னும் பனித்துளிகளை ரசித்தவாறு ஷீலாவின் வருகைக்காக கல்லூரி வாசலில் காத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. ஷீலா அவளின் உயிர் தோழி. பத்து வருடங்களுக்கும் மேலான நட்பு. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தனர். விடுமுறை நாட்களிலும் யாரவது ஒருவர் வீட்டில் சந்தித்து அரட்டை ஆட்டம் என இருப்பார்கள். நந்தினியின் பெற்றோர்கள் வெளியூர் செல்லும் நேரங்களில் ஷீலாவை இரவில் துணைக்கு அழைத்துக்கொள்வாள். அப்படியான இரவுகளில் இருவரும் விடிய விடிய கதை பேசிக்கொண்டிருப்பர்கள். இருவருக்கும் இடையில் எந்த […]

துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.

This entry is part 8 of 11 in the series 3 டிசம்பர் 2017

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை ! ஆதி அந்த மில்லா அகிலம் பற்றி ஓதி வருகிறார் இன்று ! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் பிரபஞ்சம் உருவாகுமா வெறுஞ் சூனியத்தி லிருந்து ? புள்ளியாய் முதலில் திணிவு இருந்தது பொய்யானது ! கருவை உருவாக்க எரிசக்தி எப்படித் தோன்றியது ? உள் வெடிப்பு தூண்டியதா புற வெடிப்பை ? பிரபஞ்சத் துக்கு முன்னிருந்தது புள்ளிக் […]