டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!

This entry is part 23 of 31 in the series 10 பெப்ருவரி 2013

<div style=”clear: both; text-align: center;”> <a href=”http://1.bp.blogspot.com/-tyZ1aEB0gec/URJJVF8giDI/AAAAAAAAGHE/1co4fvN3pNs/s1600/dondu-1.jpg” imageanchor=”1″ style=”margin-left:1em; margin-right:1em”><img border=”0″ height=”320″ width=”205″ src=”http://1.bp.blogspot.com/-tyZ1aEB0gec/URJJVF8giDI/AAAAAAAAGHE/1co4fvN3pNs/s400/dondu-1.jpg” /></a></div> நம்மோடு இணைய விவாதங்களில் பலமுறை கலந்து கொண்ட டோண்டு ராகவன் அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. அதிர்ச்சியான செய்தி. இந்த வயதிலும் பதிவுகள் எழுதுவதிலும அதற்கு பதில் தருவதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர். இவரிடம் எனக்கு பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் பழகுவதற்கு மிக இனிமையானவர். சென்னை மீனம்பாக்கத்தில் எனது தாத்தா ஹஜ் முடிந்து வந்தபோது […]

நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்

This entry is part 22 of 31 in the series 10 பெப்ருவரி 2013

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்நூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாரட்டுக்கள். தமிழில் தரவுத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருப்பின் இடைக்கிடை தலைப்புகளுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பது மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி […]

சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்

This entry is part 21 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை   சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியின் மூத்த இலக்கியங்கள் ஆகும். இதனுள் சங்ககாலத் தமிழரின் அறம், அன்பு, பண்பு, அறிவு போன்ற பல தரப்பட்ட சிந்தனை வளங்கள் பொதிந்து கிடக்கின்றன. தற்போது கிடைக்கும் கடைச்சங்க கால இலக்கியங்கள் ஆரியரின் வருகைக்கு அன்மையில் படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஆரியர் நாகரீகமும், தமிழர் நாகரீகமும் கலந்துப் படைக்கப் […]

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -3

This entry is part 20 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  சொல்லாமல் கொள்ளாமல் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் தான் போனேன்.  இருந்தாலும், போனபோது செல்லப்பா வீட்டில் இருந்தார் சந்தோஷமாக இருந்தது. அப்போதெல்லாம் அந்த மாதிரி முன்னாலேயே சொல்லி நேரம் குறித்து வாங்கிக்கொண்டு போவது எனபது தெரியாத காலம். அத்தோடு அவர் இருந்தது மட்டுமல்லாமல் அங்கேயே நான் போன தருணத்தில் இலங்கையிலிருந்து சிவராமூவும் அங்கு இருக்க நேர்ந்தது, என்ன சொல்ல.. எல்லாம் நேர்ந்து கொள்கிறதே. தருமு சிவராமுவின் கவிதைகளும் சொல்லும் நடையும் போன்ற தமிழ்மொழி, உரை நடை […]

தாகூரின் கீதப் பாமாலை – 51 நேசிப்பது உன்னை !

This entry is part 19 of 31 in the series 10 பெப்ருவரி 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   நேசிப்ப துன்னை,   நேசிப்ப துன்னை என்றென் அவலக் குரல் ஓசையாய் ஒலித்துக் கொண்டு உடைத்து வெளி வரும் பூமியின் மார்பி லிருந்தும் நீர் மயத்தி லிருந்தும் ! வானமோ நெஞ்சு வலிவோடு வாட்டம் அடையும் ! கனிவுடன் தெரியும் தொடுவான் கண்கள் போல் கண்ணீர் துளிகளால் ஈரமாகி மங்கலாகும் !   வேதனைப் பெரு மூச்சொன்று வெடித்து விடும் […]

குற்றமும் தண்டனையும் – எம். ஏ. சுசீலாவின் மொழிபெயர்ப்பு

This entry is part 18 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப் பின்பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது. தனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன. […]

வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (11)

This entry is part 17 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  இரமியத்திற்கப்பால் எந்த மெய்ஞானமோ அன்றி  விஞ்ஞானமோ  இல்லை. யானறிந்த ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ஏதோ சிறிய அளவிலேனும் ஒப்பனை செய்திருந்தனர்; மேலும் அந்தச் சொற்பமே  அவனை மந்தமாக இருப்பதிலிருந்தோ அல்லது பித்துக்குளித்தனத்திலிருந்தோ அன்றி தற்கொலையிலிருந்தோ காக்கிறது. எவரையும் அதிகாரம் செலுத்தாமலும், எவரிடமும் அடிபணியாமலும் இருபவர் எவரோ அவரே உண்மையில் பெரிய மனிதர்.   அவன் குற்றவாளிகளையும் தீர்க்கதரிசிகளையும் அழிப்பதாலேயே அவனையோர் சராசரியானவன் என்று எளிதாக நம்பிவிடமாட்டேன்.   இறுமாப்பெனும் பிணியுடனான காதற்பிணியே பொறுமையென்பது.   புழுக்கள் […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -5 மூன்று அங்க நாடகம்

This entry is part 16 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -5 மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of […]

பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா

This entry is part 15 of 31 in the series 10 பெப்ருவரி 2013

அன்புடையீா்! அருந்தமிழ்ப் பற்றுடையீா் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழாவையும் 16.02.2013 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணியிலிருந்து 20,30 மணிவரை கொண்டாடுகிறது. இடம் L’ Espace Associatif des Doucettes rue du Tiers Pot 95140 Garges les Gonesse (à côté de l’hôtel de ville) அனைவரும் உறவுகளுடனும் நண்பா்களுடனும் வருகைதந்து விழாவைச் சிறப்பிக்கவும் அழைத்து மகிழும் கம்பன் […]

துயர் விழுங்கிப் பறத்தல்

This entry is part 14 of 31 in the series 10 பெப்ருவரி 2013

    பறந்திடப் பல திசைகளிருந்தனவெனினும் அப் பேரண்டத்திடம் துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ சௌபாக்கியங்கள் நிறைந்த வழியொன்றைக் காட்டிடவெனவோ கரங்களெதுவுமிருக்கவில்லை   ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி ஒவ்வொரு பொழுதும் காற்று ரணமாய்க் கிழிக்கையில் மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல தன் சிறகுகளால் காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்   முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம் தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து தன் எல்லை மீறிய பொழுதொன்றில் மிதந்தலையும் தன் கீழுடலால் மிதித்திற்று உலகையோர் நாள்   பறவையின் மென்னுடலின் […]