பள்ளிக்கூட ஆசிரியர் ரத்தின சாமி தன்னுடைய பணி ஓய்வுக்கு பின், கிடைத்த பணத்தில் ஒரு மனை வாங்கி, வீடு கட்ட ஆரம்பித்த போது, அவருக்கு தெரியாது பக்கத்து மனைக்கு சொந்தக்காரன் தகராறு பேர்வழியான சுப்பண்ணன் என்று. அவன் ஒரு காண்டிராக்டர். அரசியல் செல்வாக்கு வேறு. அரசாங்க நிலத்தையும், ஏழைகளுடைய நிலத்தையும் அபகரிப்பதில் கைதேர்ந்தவன். அஸ்திவார வேலை எல்லாம் முடிந்து, கட்டிட வேலை தரை மட்டத்துக்கு மேல் வந்தாகி விட்டது. சர்வேயர், இன்ஜினியர் எல்லோரையும் வைத்து […]
கடந்த ஒரு வாரமாய் தயார் செய்த டெண்டர் டாக்குமெண்ட் பாபுவின் கையில் இருந்தது. சாலை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் அதை அவன் மாலை நான்கு மணிக்குள் டெண்டர் பெட்டியில் போட்டாக வேண்டும். அவசரம் என்பதால் ஆபீஸ் காரை கம்பெனியில் கொடுத்து இருந்தார்கள். வேகமாய் போய்க் கொண்டிருந்த அவர்கள் கார் ஒரு டிராபிக் ஜாமில் நின்று போக, அவனுக்கு கோபமாய் வந்தது. “ என்ன முருகா.. ஏன் இப்படி வண்டிங்க நிக்குது..” டிரைவரிடம் கேட்க, […]
” ரூமேட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் ” என்பதை நாம் ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் என்று கூறலாம். இது உடலின் சுய எதிர்ப்பு ( Autoimmune ) காரணத்தால் உண்டாகிறது. சுயஎதிர்ப்பு என்பது உடலின் எதிர்ப்புச் சக்தி உடலின் ஏதாவது ஒரு பாகத்தையே சுயமாக எதிர்ப்பதாகும். அப் பகுதியை உடலுக்கு கெடுதி தரக்கூடியது என்று தவறாக புரிந்துகொண்டு அதை எதிர்ப்பதாகும். இவ்வாறு உடலுக்குள் ஒரு பகுதியில் போராட்டம் நடப்பதால் அப்பகுதி வீங்கி வலியை உண்டுபண்ணுகிறது. இந்த […]
செ. நடேசன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சுற்றுச்சூழல்பற்றிய 15 கட்டுரைகளைத் தொகுத்து 64பக்கங்கள் கொண்ட ’மேகவெடிப்பு’ என்ற நூலாக பொள்ளாச்சி எதிர்வெளியீடு வெளியிட்டுள்ளது. 10 நாவல்கள், 15சிறுகதைத்தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்பு உட்பட 40 நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் சுற்றுச்சூழல் பற்றி மிகவும் அக்கறை கொண்டவர்.அவரது எல்லா எழுத்துக்களிலும் அடிநாதமாக இந்த அக்கறை இழையோடிக்கொண்டே இருப்பதை இவரது எழுத்துக்கள் எல்லாவற்றையும் படித்தவர்கள் அறிவார்கள். இந்த நூல் இந்தப்புவனத்தின்மீதும், மானுடத்தின்மீதும், நமதுஅடுத்த தலைமுறைக் குழந்தைகள்மீதும் கவலை கொண்டுள்ள நமது […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பாதிரியார் வழிபடக் காத்துள்ளார் பாடகக் குழுவினர் மண்டி யிட்டுள்ளார்; ஆத்மா நீங்கிச் செல்ல வேண்டும், அச்ச அமைதியில் வேதனை வலியுடன், பெருந்துயர் உற்றேன், களைப் படைந்த நானும் ! காத்ரீனா வுக்கு வாழ்வினி இல்லை ! ஒளிவீசும் விழிகள் வெளிப்படுமா எனக்கினி ? கூந்தல் நாடா எடுத்துக் கொடுக்கிறேன் வாங்கி வைத்துக் கொள் நினைவாக, உணர்ச்சி […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கற்களையும், புதர்களையும் தழுவியபடி சுழல்களாய் பாய்ந்து கொண்டிருந்த நதியின் வேகம்! அந்த பிரவாகத்தின் நடுவில் எங்கேயோ பெரிய கற்பாறையின் மீது மடியில் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பையன் படித்துக் கொண்டிருந்தான். இந்த உலகத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாதது போல் படிப்பதில் மூழ்கிய நிலையில் ஓவியம் போல் காட்சி தந்தான். நதிக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கயிற்று பாலத்தின் மீது அபிஜித்துடன் நின்றிருந்தாள் மைதிலி. “மைதிலி! […]