‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.

This entry is part 13 of 32 in the series 3 பிப்ரவரி 2013

டி.கே.சி கடிதங்கள் எல்லாம் கலை அந்தஸ்து பெற்றவை. ஒரே ஹாஸ்யமும், உல்லாசமும், உணர்ச்சியுமாயிருக்கும். படிக்கத் தெவிட்டாத இலக்கிய ரத்தினங்கள் அவை. டி.கே.சி கடிதம் எழுதுவதைக் கைக்கொண்ட பின்தான் கடித இலக்கியம் என்ற ஒன்று தமிழ்நாட்டில் பிறந்தது. ஒவ்வொரு கடிதமும் நேருக்கு நேர் நின்று பேசும். உடல் நிலை மோசமாயிருப்பது கேட்டு வருந்தி எழுதி இருந்தேன். அடுத்த தபாலில் கீழ்க்கண்ட பதில் வந்தது: “என் உடலைப் பற்றித் தாங்கள் கவலை கொள்வதாகத் தெரிகிறது. அது வேண்டாம். உடம்பு சரியாகத்தான் […]

தீர்வு

This entry is part 12 of 32 in the series 3 பிப்ரவரி 2013

எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. இல்லையில்லை, அப்படியொன்று இருப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்கள். நானாகத்தான் அந்தப் பிரச்சினை க்குத் தீர்வு காண முடியும் என்கிறார்கள். சிலர் தீர்வு கண்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். சிலபேர் அழுது ஆகாத்தியம் செய்கிறார்கள். எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இதில் இவர்கள் ஏன் இவ்வளவு குறியாக இருக்கிறார்கள்? ‘தீர்வுக்குக் கண்டிப்பாகச் செலவாகும். பணம் அனுப்புகிறோம்’ என்கிறார்கள். ‘வேண்டாம், வேண்டாம்’ என்று அவர்களிடம் மன்றாட வேண்டியிருக்கிறது. அப்படியும் சிலர் ரொம்ப சாமர்த்தியமாக என்னைப் பார்த்துவிட்டுப் […]

சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்

This entry is part 11 of 32 in the series 3 பிப்ரவரி 2013

அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. […]

நிழற்படங்கள்

This entry is part 9 of 32 in the series 3 பிப்ரவரி 2013

நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் ‘என்னடா இது?’ என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். ‘பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?’ என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன். சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43

This entry is part 8 of 32 in the series 3 பிப்ரவரி 2013

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. நினைப்பதெல்லாம் நடப்பதில்லை நினைக்காமல் இருப்பதுமில்லை மனித மனத்தின் ஊஞ்சலாட்டம் இருப்பது ஒரு மனம். ஆனால் கேட்பது பல குரல்கள் செய் என்று சொல்லும் மனத்தை இழுத்துப் பிடித்து பின்னே இழுக்கின்றது. இன்னொரு மனம் ஆமாம் நமக்கு ஒரு மனம்தானே இருக்கின்றது ! யானையைக் கூட அடக்கி விடலாம் ஆனால் இந்த மனத்தை அடக்க நமக்கு வலிமை இல்லையே! வாழ்க்கை பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. எல்லாம் எழுத்தில் கொண்டு […]

எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை

This entry is part 7 of 32 in the series 3 பிப்ரவரி 2013

“படத்தில் வரும் காட்சிகள் இதுவரை நடந்தவை பற்றியோ , அவை சம்பந்தமான நிகழ்ச்சிகள்/நபர்கள் பற்றியதோ அல்ல, முழுக்க முழுக்க கற்பனையே” என்று ஆரம்ப எழுத்துகள் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு இந்தப்படத்தின் முதல் எச்சரிக்கை அதிர்வையே தருகிறது. ஆக்ஷன் ஃபிலிம் எடுக்கிறதுன்னா இனிமேல் இதுக்குமேலே எடுத்தாதான் உண்டு. அருமையான நடிக/கையர் தேர்வு,அதற்கான களமும், அவர்களின் மொழியும் எல்லாமுமாகச்சேர்ந்து ஒரு விஷுவல் ட்ரீட் தமிழனுக்கு..எங்க ஊர்க்காரன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்துருக்கான்யா .என்று மெச்சிக்கொள்ள ஒரு படம். படத்தை மெதுவாகத்தள்ளிக்கொண்டும் , […]

வானிலை அறிவிப்பு

This entry is part 6 of 32 in the series 3 பிப்ரவரி 2013

சென்னை ஆழ்வார்பேட்டையில் மையம் கொண்டிருந்த புயல் சற்றே வலுவடைந்து மும்பையை நோக்கி சென்றது… இதற்கு விஸ்வரூபம் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ஓரிரு தினங்களில் தமிழகத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. குமரி எஸ். நீலகண்டன்

மன்னிப்பு

This entry is part 5 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இந்த ஆண்டு டில்லித்தலைநகரில்குடியரசுதின கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வான கொடியேற்றும் தருணம். அங்கே கொடிவணக்கப்பாடல் பாடுவதற்கான குழு ஒன்றில் குரலிசைக்காகத்தான் அவள் தேர்வானாள். இந்தப்பெரு நாடே பாரதத்தாயுக்கு ச்செய்யும் ஆகப்பெரிய மரியாதையே இந்த கொடியேற்று விழா. ஆண்டுக்கு இருமுறை இது கம்பீரமாய் இந்த தேசத்தின் தலை நகரில் நிகழ்த்தப்படுகிறது .வெளி நாட்டுக்காரர்கள் அனேகம் வந்து மொத்த இந்தியாவை அளந்து விட்டு செல்வதற்கான நேரம் இது. பரந்து விரிந்து கிடக்கும் பாரதத்து புண்ணிய பூமி . பேசும் மொழிகள் எத்தனையோ. […]

கல் மனிதர்கள்

This entry is part 4 of 32 in the series 3 பிப்ரவரி 2013

( கொரியக்கதை) பயணம் செய்பவர்கள் பயணக் களைப்பால் வழியில் சற்றே இளைப்பாறுவதுண்டல்லவா?  கொரிய நாட்டில் சயன்போ என்பவன் இது போன்று பயணம் சென்ற போது, ஒரு மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றான். அவன் தன்னுடைய நகரிலிருந்து, பக்கத்திலிருந்த மற்றொரு நகருக்கு முப்பது கட்டு பட்டு நூல்களை கொண்டு சேர்க்க பயணப்பட்டான்.  அது வெப்பம் மிக்க கோடையில் ஒரு நாள்.  வெகு தூர பயணத்திற்குப் பிறகு, களைப்பாற முடிவு செய்தான் சுயன்போ. வசதியான ஒரு இடத்தைக் கண்டு பிடிக்க […]

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2

This entry is part 3 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இப்போது இரண்டு தலைமுறைக்காலம் கடந்த பிறகும் கூட நினைத்துப் பார்க்கும்போது, மிக வேதனையாகத் தான் இருக்கிறது.  இன்று அது பற்றிப் படித்து அறிந்து கொள்கிறவர்களுக்கு அது புரியப் போவதில்லை. பண்டிதர்கள் போகட்டும். பிரபலமாகிவிட்ட வெகுஜன எழுத்தாளர்கள் போகட்டும். அவர்களுக்கு  இருக்கக் கூடும் எரிச்சலும் பகைமை உணர்வும் இருக்கும் தான். எதிர்பார்க்க வேண்டியதும் கூடத் தான்.  இருக்காது  என்று  நினைப்பது அறியாமை.  ஆனால் யார் யார்  எல்லாம் செல்லப்பாவுடன் தோளோடு தோள் உரசி நிற்கக் கூடும் என்று நாம் […]