அறிவிப்பு மும்பை தமிழ் அமைப்புகள் பம்பாய் தமிழ் சங்கத்துடன் இணைந்து சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா . அனைவரும் வருக. மும்பை தமிழ் அமைப்புகள் சார்பாக புதியமாதவி
சென்ற வாரம் கிறிஸ்துவம் ஐரோப்பாவில் கோலோச்சிக்கொண்டிருந்த மத்திம காலத்தில் புனிதர்கள் என்று அறியப்பட்டவர்களின் டெம்போரல் லோப் வலிப்பு எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கியது, அது எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது, அவர்களை மற்ற கிறிஸ்துவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்த்தோம். இந்த புனிதர்கள் தங்களுக்கு இயேசு காட்சியளித்தார் என்பதையும், மேரி காட்சியளித்தார் என்பதையும் உலகுக்கு சொன்னதும் அது எவ்வாறு கிறிஸ்துவத்தை வலுப்படுத்தியது என்பதையும் அறிந்தோம். ஒரு சமூகத்தின் உள்ளே இருக்கும் பாதிப்புகள், சூழ்நிலைகள் இப்படிப்பட்ட டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள்களையும் […]
கொடியில் காயப்போட்ட பட்டுச்சேலையாய் விட்டத்தில் தொங்கி கொண்டிருந்தாள் பவானி குறிப்பெதும் இல்லாததால் கூறுபோட்டது ஊரு காதல் தோல்வி தீராத தீட்டுவயிற்று வலி அம்மா கடுமையான எச்சு வயிற்றில் வாங்கி கொண்டாள் இன்னம் இஷ்டத்துக்கு ஒரு வாரம் கழித்து தன் சாவுக்கு காரணமில்லை குறிப்புடன் விஷம் குடித்து மரித்தான் மாரி அப்போதும் அப்பனையும் ஆத்தாளையும் காப்பாற்ற இப்படி எழுதியிருக்கான் வேறு ஏதோ தப்பு தண்டாவென வாய்கள் மென்றன புரளிக்கு பதிலளிக்க ஆளில்லை யென்றால் மனசாட்சிகள் அடகுவைக்கப்பட்டு வாய்கள் இறந்தவர்களை […]
“சேகர்.. உங்க அப்பா இப்போ எப்படி இருக்காரு?” “நாளைக்கு அவசரமா அறுவை சிகிச்சை செய்யணுமாம்.. அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது.. அதுக்குத்தான் அலையறேன்..” “என்ன இரத்தம் தேவை?” “ஓ-பாசிடிவ்..” “அப்படியா.. இரு.. இன்னும் ஐந்தே நிமிஷத்திலே உனக்கு கிடைக்கச் செய்யறேன்” “ஐந்து நிமிஷத்திலையா.. நான் நேத்துலேந்து அலையறேன்..” “சோசியல் பிலட்-ன்னு பேஸ்புக்ல ஒரு பயன்பாடு இருக்கு. அதில் நமக்குத் தேவையான இரத்த வகையைச் சேர்ந்தவரை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம்..” “அப்ப உடனடியா செய்து, இரத்த தானத்துக்கு ஏற்பாடு செய்தா.. […]
எனது எழுத்துக்களை கொலை செய்வதற்குஆயுதங்களோடு எப்போதும் துரத்தி வருகின்றனர். அல்லது தற்கொலை செய்வதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து வைக்கின்றனர்.எலிப்பொறி வைத்து பிடித்துவிட்டால் எழுத்துக்கள் எலிகளாய் செத்துக் கிடக்கும் என நம்புகின்றனர். தீவிர எழுத்தின் இறுதி லட்சியமென்பதே சினிமாவுக்கு கதை பாட்டு எழுதவும்,பிரபல இதழ்களில் பத்தி எழுதவும், வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்று அரட்டை செய்யவும், சொகுசாக உட்கார்ந்து பிளாக்கிலும்,பேஸ்புக்கில் எழுதுவதும் என்பதாகிவிட்ட சூழலில் எழுத்து சந்தர்ப்பவசமாக சிலரது வாழ்வின் இருப்பையே தகர்த்திருக்கிறது. பெரும்பானமை, சிறுபான்மை என்றெல்லாம் அடிப்படைவாதத்திற்கு முகமில்லை […]
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் -ஹெச்.ஜி.ரசூல் கன்னியாகுமரிமாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் 2012 பிப்ரவரி 10,11 வெள்ளி , சனி நாட்களில் முஸ்லிம் கலைக்கலூரியில் நடைபெறுகிறது. முதல்நாள் துவக்க விழாவிற்கு முதல்வர் முனைவர் எ.அப்துல் ரஹீம் தலைமையேற்க தமிழ்த்துறைத்தலைவர் பேரா. என் ஹைருன்னிஸா வரவேற்புரை நல்குகிறார்.ஹாஜி எஸ் செய்யது முகமது முன்னிலை வகிக்க ஆங்கிலத்துறை முனைவர் […]
நண்பா! என் வாழ்க்கையைத் தனியே பிரித்துவிட முடியாதபடி எப்படி நீ என் ஒவ்வொரு நாளிலும் பின்னிப் பிணைந்திருக்கிறாய்! உன்னைச் சேர்த்துச் சொல்லாத ஒரு நிகழ்வைக்கூட என்னால் சொல்லிவிட முடியாது. இப்போது வெறும் ஞாபகங்களாக மட்டுமே போய்விட்ட உன்னை எப்படி மீட்டெடுப்பது? கல்லால் சிலை வடித்தால் உடைந்து போகலாம். இரும்போ துருப்பிடிக்கும் மரமோ உலுத்துவிடும் எல்லாம் எப்படியோ மறைந்துபோகும். எதைக்கொண்டு செய்தால் நிரந்தரமாய் அதில் நீ உறைவாய்? என்னிடமோ வார்த்தைகள் மட்டுமே உள்ளன கொஞ்சமாய். அவைகொண்டு எழுதினால் கவிதையாய் […]
எப்பொழுதாவது என்னில் உறைந்த சில பொழுதுகளை பாசியென அடர்ந்திருகி விட்ட சில நியாபகங்களை சாத்தானாய் மெல்ல என் உடல் பற்றி வெளியேற அவள் தம் பிழிகளின் வியே தூபம் காட்டிக் கொண்டிருப்பாள் நிசி நேர ஓர் புகை மூட்ட கனவைப் போன்றும் கனவுத் தூதுவனொருவனின் பாஷையறியா காதோர சில முனுமுனுப்புகளைப் போன்றும் தன் அங்க அசைவுகள் வழியே விளங்காதொரு பிம்பங்களற்ற மாய தோற்றங்களை இலகுவாய் என் சுற்றிக் கட்டி முடித்திருப்பாள் காமம் பெருகி கனவுகளில் வடிந்த வியர்வையில் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எந்தப் பக்கம் வெற்றி அடையுது என்பது எமது குறிநோக்க மில்லை ! ஏதாவது ஒரு பக்கம் ஜெயிக்கத்தான் போகுது ! சமீபத்தில் நாங்கள் தயாரித்த வானப்போர் ஊர்திக்கு பெருத்த வரவேற்பு ஜப்பானில் கிடைத்திருக்கிறது ! முதல் பயிற்சித் தாக்குதலில் முழுக் கோட்டையும் தகர்ந்து போனது ! அத்தோடு அங்கு ஒளிந்துள்ள 300 படையினர் செத்து மாண்டார்.” பெர்னாட் ஷா (ஆன்ரூ […]
. இந்திய அரசியல் வரலாற்றில், சுப்ரமணிய சுவாமியைபோல், மனோ தைரியமும்,முறை தவறிய, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலையும், சட்டத்தின் உதவியூடன், குற்றவாளிக்கூண்டில், ஏற்றி, உயர்நீதி மன்றம் முதல்-உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடும், ஒரே அரசியல்வாதியாக , இவர்தான் தெரிகின்றார். அவரது அரசியல் கொள்கைகள் கோமளித்தனமாக இருக்கலாம்.அவர்,அரசியலுக்கு ஆற்றிய பங்கு, குறைவாக இருக்கலாம். அவர் தொகுதிக்கு செயத பணிகள் நிறைவேறாமல் இருக்கலாம்.இதைவிட , இன்றைய தேவை, நமது வரிப்பணத்தை ஏப்பம்விடாமல் பார்த்துக் கொள்ள நமக்கு ஒரு துணைவேண்டும். அவரது, […]