ஜல்லிக்கட்டுப் போராட்டம் தேச விரோத அமைப்புகளால் கடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்

This entry is part 1 of 14 in the series 5 பெப்ருவரி 2017

  தமிழ்செல்வன்    ஜல்லிக்கட்டுப் போராட்டம்.   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான செய்திகளும் பிரச்சாரங்களும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவத்தொடங்கின. இந்தப்பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மாணவர்களையும் எட்டியது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரப் பாரம்பரியம் என்பதாக, தமிழ் மொழி பேசும் அனைவரின் பண்பாடாக, முன் நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒரு பெரெழுச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் மெரினா கடற்கரை, மதுரையில் தமுக்கம் மைதானம், கோவையில் வ.உ.சி பூங்கா என்று தமிழகத்தின் அனைத்து முக்கியமான நகரங்களிலும், இளைஞர்களும் மாணவர்களும் […]

ஜல்லிக்கட்டுப் போராட்டம்   ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்

This entry is part 2 of 14 in the series 5 பெப்ருவரி 2017

  தமிழ்செல்வன்   தொன்றுதொட்டு வரும் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம்   ஏறு தழுவுதல் என்கிற சங்ககாலம் தொட்டுத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, தமிழகத்தின் சில பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியமாகப் பொங்கல் திருவிழாக்காலங்களில் நடத்தப்படும் வீர விளையாட்டாகும். பெரும்பாலும் தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இவ்வீர விளையாட்டு, உண்மையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்திலேயே இருந்தது என்பதற்கான சான்று கிருஷ்ணரின் புகழ் பாடும் ஸ்ரீமத் பாகவதம் என்கிற நூலில் உள்ளது. கோசலை மன்னன் […]

தோழி கூற்றுப் பத்து

This entry is part 3 of 14 in the series 5 பெப்ருவரி 2017

இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்; அவள் எப்பொழுதும் தலைவியின் நலத்தையே விரும்பி அதற்காகச் செயல்படுபவளாக இருக்கிறாள். தலைவியின் பேச்சைவிட தோழியின் கூற்று, சற்று அழுத்தமும் துணிவும் தெளிவும், உறுதியும் கொண்டதாக நாம் உணர முடிகிறது. தோழி கூற்று பத்து—1 நீருறை […]

தொடுவானம் 156. தேர்வும் சோர்வும்

This entry is part 4 of 14 in the series 5 பெப்ருவரி 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 156. தேர்வும் சோர்வும் எழும்பூரில் ” பீப்பல்ஸ் லாட்ஜ் ” என்னும் தங்கும் விடுதியில் அறை எடுத்தோம். இதை மலையாளிகள் நடத்தினர். எதிரே ஒரு மலையாள உணவகம் உள்ளது. இந்தப் பகுதியில் வாடகை ஊர்த்திகளுக்கு பஞ்சம் இல்லை. சென்னை மருத்துவ மனைக்கு கால் மணி நேரத்தில் சென்றுவிடலாம். அன்று இரவில் எழும்பூர் புகாரியில் பிரியாணி உண்டோம். அங்கு அது சுவையாக இருக்கும். கடைத்தெருவில் சில பொருட்கள் வாங்கினோம். தேர்வுக்குத் தேவையானவற்றையெல்லாம் படித்து முடித்துவிட்டோம். […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 5 of 14 in the series 5 பெப்ருவரி 2017

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா [25]. மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு. மண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும், பாட்டு, மது ஒயின், பாடகி, முடிவா யின்றி ! [25] Ah, make the most of what we may yet spend, Before we too into the Dust descend; […]

சொல்லாமலே சொல்லப்பட்டால்

This entry is part 6 of 14 in the series 5 பெப்ருவரி 2017

அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே உருவாக்க முடியுமென்று விதைக்குத் தெரிவதில்லை மலரப் போகும் நாளை குறித்துக் கொண்டுதான் பிறக்கிறது மொட்டு ஆயுளுக்கும் தேவையான பிசினோடுதான் பிறக்கிறது சிலந்தி வேர்கள் தன் தேடலை வெளியே சொல்வதில்லை விஷப் பாம்புகள் அழகானவை ஏறவும் இறங்கவும் தெரிந்தால் போதும் மின்தூக்கிக்கு ஆடு புலியாட்டமாய் வாழ்க்கை ஆடும் ஒருநாள் புலியாகலாம் அழகைச் சொல்வது மட்டுமே பூவின் […]

நாகரிகம்

This entry is part 7 of 14 in the series 5 பெப்ருவரி 2017

இனியவன் ஒரு மன்னனை போல் கம்பீரமாய் நிற்கும் ஆற்றங்கரை “அரசமரம்” . அங்கே பூசணி க் கொடிகள் ,வாழை மரங்கள் இஞ்சி செடிகள்….. பஞ்ச ண்ணாவின் கைங்கர்யத்தில் விளைந்து கிடக்கும் யாருக்கும் உரிமையாக . தேக்கு மரங்களோ இரு கரையிலும் கண கச்சிதமாய் இடை வெளி விட்டு காவல் கக்கும் சிப்பாயாக. அரும்பு அத்தையின் வீட்டு எதிரேயுள்ள சறுக்கலில் துள்ளி ஓடும் கெண்டை மீன்கள் கெக்கலிக்கும். மதகடி பிரித்த வாய்க்கால் வழி ஓடி முப்போகம் கொழிக்கும் வளமான […]

ஜல்லிக்கட்டு

This entry is part 8 of 14 in the series 5 பெப்ருவரி 2017

மீனாட்சிசுந்தரமூர்த்தி. மலையருவி தாலாட்ட வழிதேடி கடும்பாறை பலகடந்து காடுவந்தான் தமிழன். வழிச்சோர்வு தீர்ந்திட கனியும் நிழலும் மரங்கள் தந்தன. தாயாகி அமுதூட்ட வந்ததுபசு கன்றோடு, உடன் வந்த காளை சுமந்தது அவனை முதுகில் உழுது,விதைக்க, போரடிக்க, வண்டியோட்ட என்று பாரதியின் கண்ணன் போல் எல்லாமாய் ஆனது. விழியோரம் ஈரம் எட்டிப் பார்க்க தெய்வமாய் தினம் வணங்கி நின்றான். ஓடிய காலம் சேர்ந்தாடிய கன்றோடு அவனை காளையாக்கியது. முல்லைச் சிரிப்பழகி முழுநீளச் சொல்லழகி எந்தன் காளையை அடக்கிடு மாலை […]

பொருனைக்கரை நாயகிகள். தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி

This entry is part 9 of 14 in the series 5 பெப்ருவரி 2017

எஸ். ஜயலக்ஷ்மி. இன்று ஆழ்வார் திருநகரி என்று வழங்கப்படும் குருகூர் பொரு்னையாற்றின் தென் கரையில் அமைந் துள்ளது. ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது தொலை வில்லி மங்கலம். இன்று இவ்வூர் இரட்டைத் திருப்பதி என்று வழங்கப் படுகிறது. நவதிருப்பதிகளு்ள் இத்தலமும் ஒன்று. தொலைவில்லிமங்கலப் பெருமான் குருகூரிலிருந்த நாயகியை (பராங்குச நாயகி) அவள் பெற்றோர்கள் தொலைவில்லி மங்கலத் திற்கு அழைத்துச் சென்றார்கள். நோக்கும் பக்கமெல்லாம் கரும் போடு செந்நெல்லும் தாமரையுமாக இருக்கும் அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அரவிந்தலோசனப் பெருமானை சேவித்தார்கள். […]

ஈரம்

This entry is part 10 of 14 in the series 5 பெப்ருவரி 2017

அருணா சுப்ரமணியன் வண்ண ஆடைகளை அணிவதாலோ பூச்சூடி பொட்டு வைப்பதாலோ வெளியிடங்களில் உலவுவதாலோ நட்புறவுகளோடு அளவளாவுவதாலோ மனதை இரும்பாக்கியதாலோ மறக்கப் பழகியதாலோ காய்ந்து விடுவதில்லை இருளில் இளம்விதவை நனைக்கும் இரு தலையணைகளின் ஈரம்!!!