சீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன் பல வகைகளில் மாறியுள்ள போதிலும், இன்னும் பல இடங்களில் பழமைத் தன்மைகள் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதை நாம் காண முடிகிறது. எங்களது முதல் நாள் பயணத்தை நாங்கள் பகோடா என்று அழைக்கப்படும் உயர் கோபுர அமைப்புடன் கூடிய புத்த மடமான பெரிய காட்டு வாத்து பகோடாவிலிருந்து ஆரம்பித்தோம். அதன் ஏழு மாடிக் கோபுரம் உயர்ந்து நிற்பதை உள்ளே நுழையும் முன்னரே காண முடிந்தது. தா யன் […]
கோசின்ரா 1 இந்த உலகம் உன்னைப்போல நட்பாயிருக்கும் போது காலத்தின் நிலத்தில் விதையாக இருந்தேன் இந்த உலகம் உன்னை போல புன்னைகைக்கும் போது சில கரங்கள் நீருற்றின இந்த உலகம் உன்னை போல பேசத்தொடங்கும் போது நான் வளர்ந்தேன் இந்த உலகம் உன்னைப்போல பருவங்களை மாற்றிகொண்ட போது பூக்க தொடங்கியிருந்தேன் காய்களும் கனிகளுமாய் மாறினேன் இந்த உலகம் உன்னை போன்று மாறத்தொடங்கிய போது வேகமாக காற்றடித்தது பழங்கள் உதிர்ந்தன இலைகள் உதிர்ந்தன என்னவானது இந்த உலகம் ஏன் […]
இலக்கியா தேன்மொழி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த மொபைல் ஃபோன் சிணுங்கியது. வாலாட்டியபடி அறையின் ஓரமாக தனது கால்மேல் தலைவைத்து வெறுமனே அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, புசுபுசு, ஜானி, அதிர்ந்து எழுந்து, ஒரே தாவாக மேஜை மீதேறி, மொபைலை கொஞ்சமாய் முகர்ந்து பார்த்தது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸாப்பில் வினய் ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான். சிந்துஜா ஃபோனை படுக்கையில் வீழி […]
குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம். பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்தோம். புகைவண்டி நிலையத்தில் நிறைய பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டங் கூட்டமாக பிளாட்பாரத்தில் காணப்பட்டனர். புகைவண்டி வந்ததும் அதில் பிரயாணம் செய்யும் பயணிகளைப் பார்ப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு. வண்டி வந்ததும் முண்டியடித்துக்கொண்டுதான் ஏறினேன். நல்லவேளையாக உட்கார இடம் கிடைத்தது. நள்ளிரவு வரை தூக்கம் வரவில்லை. நாவலைக் கையில் எடுத்து வைத்திருந்தேன். அனால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. […]
மனித இயங்குதலில் முதுகெலும்பு விரைவுகளில் வாகனங்கள் இவை மையமாய்க் கொள்ளும் சங்கிலி மூன்று ராட்சதக் கண்ணிகளில் காலத் தொடர்ச்சி நினைவு அடுக்குகளில் மூன்றாம் பிறையாய் சில பசுமை விரியும் காடுகள் மண்ணுள் விரையும் வேர்கள் எதன் கண்ணிகளும் ஆகா அவை உயிர்ப்பின் சுதந்திர வடிவங்கள் பிணைத்து நெருக்கி வழி நடத்தும் உறவு பணியிடச் சங்கிலிகள் அதிர்ச்சிப் புதிராய் அவ்வப்போது விலக மின்னி மறையும் விரியும் நீள் பெருவழி பாதுகாப்பு தளை […]
பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை சிருங்காரம் சார்ந்ததாக இல்லை. சிருங்காரத்தை ஒதுக்கி விட்டால், நவரசங்களின் பாவங்களை தம் நடனத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அந்த நடனம் தனக்கு மறுத்துக்கொள்வதாகும். யாமினிக்காக பேராசிரியர் தயாரித்துக் கொடுக்கும் பாடாந்திரம் ( repertoire) பெரும்பாலும் ஆண், பெண் தெய்வங்களின் குணங்களை அல்லது தெய்வச் செயல்களை விதந்து போற்றுவனவாக இருக்கும். […]
மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் தள்ளாடிக்கொண்டிருந்தது சென்னையின் கடலோரச் சாலை. ஈஸ்ட் கோஸ்ட் ரோடென்று அழைக்கப்படும் இது சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கிறது. திருவிடந்தையை அடுத்து சற்றேரக்குறைய 500 மீட்டர் தூரத்தில் சாலையை விட்டுப்பிரியும், கவனிப்பாரின்றி நாதியற்றுக் கிடக்கும் ஒரு மண் சாலை, இப்போது அனேகம் போலீஸ் தலைகளும், சாலையோரம் ஆங்காங்கே தேங்கி நின்று கும்பல் கும்பலாய் வேடிக்கை பார்க்கும் அக்கம்பக்கத்து பொதுஜனமும், இவையெல்லாக் கலேபரத்தையும் சாலையிலிருந்தபடியே சுற்றுலாவில் கிடைத்த உபரி சுவாரஸ்யமாய் கார் பஸ்களிலிருந்தபடியே பார்த்துச்செல்லும் பட்டாளங்களுமாய் […]
நாளைக் காலை பத்து மணிக்கு நானும் மனைவி சாய்ராவுன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் பயணமாக வேண்டும். 20 கிலோ எடையில் நான்கு பெட்டிகள் எங்கள் உடமைகளைப் பொத்திக்கொண்டு கூடத்திற்கு வந்துவிட்டன. கையில் இழுத்துச் செல்ல இரண்டு சிறிய பெட்டிகளும் அவைகளுக்குத் துணையாக வந்து உட்கார்ந்து கொண்டன. என்னுடைய கணினிப் பையும் சாய்ராவின் கைப்பையும் அந்த மேசையில் தயாராக இருக்கின்றன. எல்லாப் பெட்டிகளும் எப்போது எங்களை இழுத்திச் செல்லப் போயிறாய் என்று கேட்பதுபோல் இருக்கிறது. இப்போது இரவு […]
சேயோன் யாழ்வேந்தன் அடிவாங்கியே புனிதராகிவிட்டீர் அடித்தவனை பாவியாக்கி! ஒரு கன்னத்தில் அறைந்தவனை மேலும் பாவியாக்க யாம் விரும்பவில்லை பிதாவே! வண்டி இழுத்து வந்த குதிரை வாய்ப்பூட்டோடு வாசலிலே நிற்கிறது பாவிகளை உம்மிடம் சுமந்து வரும் பாரம் அழுத்துகிறது பரம பிதாவே உண்மையிலேயே வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு எப்போது இளைப்பாறுதல் தரப்போகிறீர்? -சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)
இடுப்பு வலி என்பது நம் அனைவருக்கும் எப்போதாவது உண்டாவது இயல்பு. பெரும்பாலும் அதிக தூரம் நடப்பது, மாடிப் படிகள் ஏறுவது, கடினமான வேலை, பாரமான பொருளைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பு வலி உண்டாகிறது. இது போன்ற வலி சற்று ஓய்வேடுத்ததும் அல்லது மருந்து உட்கொண்டதும் தானாக குறைந்துவிடும். இதை ” மெக்கேனிக்கல் ” அல்லது செயல்பாட்டு வலி எனலாம். ஒரு செயல்பாடு காரணமாக உண்டாகும் வலி இது. ஆனால் ஓய்வெடுத்தும், அல்லது மருந்து உட்கொண்டும் […]