திரு க.விஜயராகவன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., Vragavan3@yahoo.com பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு குடும்பம் அல்லது குழு அல்லது தனிமனிதர் ஆகியோருக்கு உரியதாய் மரபு சார்ந்தும் புதுமை மிக்கதுமாய் மாறி மாறி வரும் தன்மையுடையது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தனக்குரிய வாழ்வியல் முறைக்கு கட்டுப்பட்டு நடக்கவும், மக்களிடம் உள்ள உறவு முறைகளைப் பலப்படுத்தவும், முன்னேற்றங்களை மதிக்கவும் பழக்க வழக்கங்கள் தோன்றின என்றே கூறலாம். இக்கருத்தை, […]
மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மதுரை மாநகரம் ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திருக்கூடல் எனும் பெயரில் திகழ்ந்துகொண்டுள்ளது. பாண்டிய நாட்டின் பதினெட்டுத் திவ்யதேசங்களில் அதுவும் ஒன்றாகும். ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ எனும் பெயரில் வழங்கும் மரபு ஒன்று உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். தொண்டை நாட்டுப் […]
தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலையாகிவிட்டது. வானம் மேகமூட்டமாக இருந்தது. பெரும் மழை வரப்போவதற்கு அறிகுறியாக காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. வானத்தில் இடி முழக்கமும், அவ்வப்பொழுது மின்னல் வெளிச்சமும் மழையின் வருகையை பறைச்சாற்றிக் கொண்டிருந்தன. அந்த தெருவிலேயே மிகப் புதுமையாக, கலைத்திறனுடன் விளங்கிய கட்டிடம் மிதிலாவிலாஸ்! அதன் மாடியில் படுக்கையறையில் மேஜையின் அருகில் நின்றபடி இளம் பெண்ணொருத்தி போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு சற்றுத் தொலைவில் வாசற்படியருகில் காற்றுக்கு படபடத்துக் கொண்டிருந்த திரைச்சீலையை கையால் […]
ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தைப் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே சிறப்புப் பெறுகிறது. ஆனால் திரைப்படங்களில் மட்டும் அதன் அழகியலுக்குள் போகாது கதையோடு நின்று விடுகிறோம். இதற்குக் காரணம் ‘திரை மொழி’யில் தேற்சியில்லாமைதான். படிக்கத் தெரியாதவன் ஒரு சஞ்சிகையை எடுத்து எப்படிப் படங்களை மட்டும் பார்த்து விட்டு வைத்து விடுகிறானோ, அப்படித்தான் ரசிக்கத் தெரியாதவன் சினிமாவில் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறான். […]