பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா (Revised -2)

This entry is part 20 of 30 in the series 22 ஜனவரி 2012

  Dr. Homi J. Bhabha (1909 – 1966) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா   “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்” தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] “விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன!  அதுபோல் இந்தியாவும் விஞ்ஞானம், பொறித்துறை இவற்றை விருத்தி செய்தே செல்வீக […]

இறந்து கிடக்கும் ஊர்

This entry is part 19 of 30 in the series 22 ஜனவரி 2012

பெருங் கோட்டைச் சுவர் தாண்டி உள் நுழையத் தேரோடும் தார் சாலையின் இருமருங்கும் புது வீடுகள்.. முப்பது ஆண்டுகளுக்கு முன்பான ஊர் நெஞ்சுள் விரிகிறது.. நிரம்பித் தழும்பும் பெருமாகுளம் இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப் போகும் சிறுவர் கூட்டம்.. குளம் களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்.. கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக் களைப்பாறும் வேளிமலை விறகு வெட்டிகள் ஓயாதப் பறவைகளின் குரல் சவக் கோட்டை மேல்ப் பறக்கும் பருந்துக் கூட்டம்.. மாலையில் நாற் தெருவும் குழந்தைகள் இளைஞர்கள் விளையாட்டு […]

புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)

This entry is part 18 of 30 in the series 22 ஜனவரி 2012

அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம். எதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள். “கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல். “இந்தப் புத்தகம் கமலாவுக்கு நல்லா அறிவியல் கத்துத் தரும்ன்னு நினைக்கிறேன்” என்று மற்றொரு குரல். “வைரமுத்து எழுதிய புத்தகம் இருக்கிறதா?” “சுஜாதா எழுதிய புத்தகம் இருக்கிறதா?” சுற்றிலும் ஆண் பெண் குழந்தைகள் பலரும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும், தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களையும் தேடி அலைந்து வாங்கிக் கொண்டு இருந்தனர். அதற்கிடையில், […]

சந்திரலேகா அல்லது நடனம்..

This entry is part 17 of 30 in the series 22 ஜனவரி 2012

தன் கோப்பையின் தேநீரை அவள் துளித்துளியாய்ப் பருகிக் கொண்டிருந்தாள். யாருடன் அருந்துவது., யாருக்குப் பகிர்வது., யாருடையதை எடுத்துக் கொள்வது எனத் தீர்மானித்தபடியே. சூடாகத் தேநீரும் பாலும் கலக்கும் போது ஆவிகள் நடனமிடுவது பிடிக்கும் அவளுக்கு. இயல்பாய் இருக்கும் அவள் நடனத்தைப் போல மெல்ல மேலெழும்பி மணம் பரப்புகின்றன அவை. இனிப்புக் கட்டிகளை விருப்பத்தின் பேரிலேயே இணைத்துக் கொள்கிறாள். ஸ்பூனால் கலக்கும்போது “யந்திர”த்தில் இருந்து எழும் அதிர்வுகளையும் ஓசைகளையும் ஒத்திருந்தது அது. ஒத்திசைவுகளோடு கலக்கப்பட்ட ஒரு தேநீரை அவள் […]

உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்

This entry is part 16 of 30 in the series 22 ஜனவரி 2012

நண்பர் இந்திரனும் நானும் வழக்கம்போல தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, “நான் சந்தித்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளை நூல் வடிவத்தில் கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது நாகி உங்களால் ஒரு முன்னுரையைத் எழுதித் தர முடியுமா? எனக் கேட்டிருந்தார். மூத்த படைப்பாளிகளில் ஒருவர் முன்னுரை கேட்பது அசாதரண நிகழ்வே. ஆனால் எழுத்தாள நண்பரின் பண்பை அறிந்தவர்களுக்கு அதில் வியக்க ஒன்றுமில்லை. எனது சொந்த அனுபவங்கள் அவரை படைப்பாளியாக மட்டுமல்ல பழகுவதற்கு இனியவர், பண்பாளர் என்றே உணர்த்தியிருக்கின்றன. இக்கட்டுரைகள் […]

மூன்று நாய்கள்

This entry is part 15 of 30 in the series 22 ஜனவரி 2012

உயிர்மை இதழின் கேள்வி மத அடிப்படைவாதம் இலக்கியப் பிரதிகளை கண்காணிக்கும்போது அது தமிழில் சிறுபான்மையின மக்களின் இலக்கிய வளர்ச்சியைத் தடுக்கிறதா அல்லது அதுவே மீறலுக்கான உத்வேகத்துடன் கூடிய இலக்கிய மறுமலர்ச்சியைஏற்படுத்துகிறதா.. பதில் தன்னைத்தவிர பிறவற்றை அழித்தொழிப்பது அடிப்படைவாதத்தின் முக்கியக் கூறு.இது மத அடிப்படைவாதமாக மாறும்போது தனது மதத்திற்கு எதிராக தாம் கருதுபவை அனைத்தையும் அழித்தொழிக்க எத்தனிக்கிறது. இது பிற மதங்களின் கருத்துரிமை,மதத்திற்குள்ளே நிகழ்த்தப்படும் ஜனநாயக உரையாடல்,மத அமைப்புக்குள்ளே வாழும் விளிம்புநிலை மக்களின் விடுதலை என எதுவாகவும் இருக்கலாம் […]

சோ – தர்பார்

This entry is part 14 of 30 in the series 22 ஜனவரி 2012

துக்ளக் ஆண்டு விழாவில், சோ பேசிய போது, தான் ஒரு தூரத்து பார்வையாளன் என்று கூறிக்கொண்டார். அவரது பார்வையில், திமுக வை அடியோடு அழித்துவிட வேண்டும் எனவும், ஜெயலலிதா தான், இந்தியாவின் பிரதமருக்கு ,தகுதியானவர்.அவரது ஆட்சி, மோடி ஆட்சியை விட , சாலச்சிறந்ததாக் விளங்கும் என்ற அவரது தீர்க்கதரிசனத்தை வைததார். அவரது பார்வையில் ஒரு வன்மம் காணப்பட்டது. தான், எந்த கட்சியையும் சாராதவன் என்றும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு, பிஜெபியை தூக்கிக் கொண்டாடினார். மம்தா பனார்ஜி அவரது கண்ணில் […]

ஒரு நாள் மாலை அளவளாவல் (2)

This entry is part 13 of 30 in the series 22 ஜனவரி 2012

ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற உங்களால்….. வெ.சா: எழுதினது மாத்திரம் இல்லை. நடக்கிறது எதுவுமே அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல் கிறேன். அவ்வளவு தான். ராஜே: உங்களை யாரும் சிறுகதை எழுதுங்க என்று கேட்கவில்லையா? நாங்கள் கேட்கிறோம் ஒரு சிறு […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புராதனக் காதல் புது வடிவங்களில் ! (கவிதை -57)

This entry is part 12 of 30 in the series 22 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சிக்கலான அரவங்கள் செம்மையான சொற்கள் அல்ல புரியாத வற்றைப் பிடித்து உரிய தாக்குவேன் ! கிளைகளில் துவங்கிக் கீழே இறங்கி வேர்களிலும் தீப்பற்றி வெந்தழிகிறது ! பூரா மரமும் புகைந்து சாம்பலாச்சு ! *கிதர் பசுமை மனிதன் பற்றிய கதைகளும் கிதரே கூறிய கதைகளும் மீண்டும் தெரிய வந்தன ! மறைந்து போய் விட்ட புராதனக் கதைகள் என்று நினைக்கப் பட்டவை ! […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 3)

This entry is part 11 of 30 in the series 22 ஜனவரி 2012

எழில் இனப் பெருக்கம் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னைப் பார் கண்ணாடியில் முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]