இன்னும் சூரியன் முகம் காட்டவில்லை. கதவு தட்டப்படும். கதவைத் திறக்க கண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை குனிந்து நிற்கும். நேற்றிரவு நிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா? அடையும் பறவைகளில் ஏதேனும் ஒன்று வரவில்லையா? எதிர் வீட்டு மாடியில் தனித்து விடப்பட்ட தொண்டு கிழவர் ‘தொண தொண’வென்று சதா இரவெல்லாம் பேசித் தொலைத்தாரா? வாழ்வின் கவலைகள் இப்படித் தேங்காய்க் குலையாய்க் கனக்குமென்று தெரியவில்லையென்றா? […]
ஒடுக்கப்பட்ட இனத்திற்கே உண்டான மூர்க்கம், இடுங்கித் துளைக்கும் அவள் கண்களில் வழிந்தது. கரேல் என்று அண்டங்காக்கையின் கருப்பில் அவள் தேகம். சாராசரிக்கும் குள்ளமான, வினயம் பிடித்தவள் என்று பிறர் சாடும் ஒல்லி குச்சி உடம்புக்காரி. சுருண்டு அடர்ந்த கார்கூந்தல், தேங்காய் எண்ணெயின் வாசமே இல்லாமல் பரட்டையாகி யிருந்தது. அவள் முகத்தில் பசியின் அடையாளம் சோர்வாய்ப் படர்ந்திருந்தது.வறண்டிருந்த பூமியின் சுடு மண்ணுக்குள் பாதங்கள் புதைய வெம்மையின் தகிக்கும் தணல் பாதங்களைத் தாக்கியபோதும், பழக்கமோ அல்லது உரம் ஏறிய மனதின் […]
அன்பு நண்பர்களே, எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. — ஓயாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிற இந்த உலகத்தில் ஏதேதோ நடந்து கொண்டுதானிருக்கிறது. அடடா.. இப்படியும்கூட நடக்குமா? அறிவியல் வெகு தூரம் முன்னேறிவிட்ட இந்த காலகட்டத்தில்கூட இப்படியெல்லாம் நடக்கிறதா? இது எந்த அளவிற்கு […]
சிறுகதை, நாவல் வடிவங்களைக் கையாளும் பெருமாள் முருகன் (1966) தந்துள்ள மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் ‘நீர் மிதக்கும் கண்கள்’. இதில் 52 கவிதைகள் உள்ளன. இவற்றுள் சில காலச்சுவடு, தீராநதி, கவிதாசரண், குதிரைவீரன் பயணம், உயிர்மை, உலகத்தமிழ் . காம் ஆகிய இதழ்களில் பிரசுரமானவைஃ வாழ்க்கை அனுபவங்கள் மொழியில் கிடந்து ஊறிக் கவிகைளாய் வெளிவந்துள்ளன. வுpத்தியாசமான கருப்பொருட்கள் பாடு பொருளாகியுள்ளன. புதிய சிந்தனை, கோட்பாட்டுத்தாக்கம் எனக் கவிதைப் பரப்பு விரிகிறது. ‘அப்பாவின் வேலி’ வித்தியாசமானது ; பாசயிழைகள் […]
க.சுதாகர் டாக்ஸி டிரைவர் , திரு.ஆனந்த் ராகவ் பல இதழ்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு.. பல கதைகள் என்பதால் வேறு சுவை, வேறு தளங்கள் என்றாலும் அடியோடும் மனித உணர்வுகள், உறவுகளின் இழைகளை அவர் நன்கறிந்திருக்கிறார். கதை என்ற பெயரில் அவர் இழைகளை மேலும் சிக்கலாக்கவில்லை. மாறாக இயற்கையாக அவை பின்னிக்கொள்வதை வெகு இயல்பாக, உறுத்தாத வண்ணம் நம்மை அனுபவிக்க விடுகிறார். இரு சாரைப்பாம்புகள் இணைந்து நெளிவதை தொலைவிலிருந்து வியப்பது போன்ற உணர்வு. அபத்த உணர்வுகள், அனுமானங்களை […]
சு. முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி – 01 நூல் அறிமுகம் பக்தியை ஊட்டும் நூலாகத் தோன்றிய தூது இலக்கியம் பின்னர் சிற்றின்பச் சுவையைக் கொடுக்கும் தூது இலக்கியமாக மாறியது. பக்தி இலக்கியங்களில் நாயகன் நாயகி பாவம் என்ற நிலையிலிருந்து மாறி. கி.பி 16-ம் நூற்றாண்டில் சிற்றின்பச் சுவையைப் புலவர்கள் கலந்தார்கள். இந்தக் காதல் சுவை காலப்போக்கில் காமச் சுவைiயாக மாறத் தொடங்கியதால் தூது விடும் பொருள்கள் அஃறிணையிலிருந்து […]
இரு பகைவர்களும் போருக்கு ஆயத்தமாகி விட்டனர்.இந்த நிலையிலும் துருபதனின் அறிவுரைப் படி அவருடைய புரோகிதரை கௌரவர்களின் சபைக்கு தூது அனுப்பினான். தூது தோல்வியில் முடிந்தது.ஊசி முனை அளவு நிலத்தைக் கூட துரியோதனன் பாண்டவர்களுக்கு அளிக்க முன்வரவில்லை. போர் தவிர்க்க முடியாமல் போகும்பொழுது அப்படி ஒரு போரில் பீமனையும் அர்ஜுனனையும் எதிர்ப்பது தோல்வியில் முடியும் என்பது திருதராட்டிரனுக்கு நன்கு தெரிந்திருந்தது.. எனவே திருதராட்டினன் சஞ்சயனை தூதுவனாக அனுப்பி பாண்டவர்களை பகைமை பாராட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்ள சொல்கிறான். […]
இலங்கையின் கலை இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘அகரம்’ கலை இலக்கிய ஊடக நிலையத்தினால் புதிய தலைமுறை கலைஞர்களை ,படைப்பாளிகளை உருவாக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக திரைப்பட பாடலாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிகவிரைவில் கொழும்பில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இப் பயிற்சிப்பட்டறையில் திரைப்படத்தில் பாடல் எழுதும் நுட்பங்களையும் தன் அனுபவங்களையும் பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் வழங்க இருக்கின்றார். இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தென்னிந்திய சினிமாவில் கால்பதிப்பதற்கான […]
தயரதன் மதலையாய்த் தாரணிவருவேன் என்று தந்த வரத்தின்படி எம்பெருமான் இராமபிரானாக அவதரித்தார். அவர் ”மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ?” என்று சிற்றன்னையிடம் உரைத்து தம்பியுடனும் சீதையுடனும் வனம் புகுந்தார். அங்கு வந்த சூர்ப்பனகை தகாத சொற்கள் பேச அவள் இளைய பெருமாளால் தண்டிக்கப்பட்டாள். அவள் சென்று இலங்கை வேந்தனிடம் முறையிட அவன் சீதா பிராட்டி மீது ஆசை கொண்டான். இதைத் “தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்” என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுவார். மேலும் அவ்வாறு […]
அறைக்குள் நுழைந்த வில்லி முகத்தில் சுத்தமாக வருத்தத்தை மட்டுமே காண முடிந்தது. அவரைக் கண்டதும் லோ, “என்னாச்சு..” என்று பதறிப் போய் கேட்டார். “முட்டாள் மாதிரி நிக்காதே, விசயத்தை சொல்..” வில்லி எண்களைச் சொன்னார். “விளையாடறியா..” என்று சொல்லிவிட்டு, புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டு, இதைத் தூர எறிந்து விட்டு வேகமாக கதவைத் திறந்து கொண்டு கோபத்தோடு சென்றார். ஜாக்கி அப்படியே உட்கார்ந்து விட்டான். இந்த அனுபவம் புதிதில்லை. இருந்தாலும் எடுத்த முயற்சியெல்லாம் தோல்வியாகிறதே என்ற ஆதங்கம் இருக்கவேச் […]