எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன. இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு நூலும் வெளியிடப்படவிருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வதியும் இலங்கையர்களான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் லெ.முருகபூபதி ஆகியோரின் புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படைப்புகளே இந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகின்றன. ஜனவரி 8 ஆம் […]
உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே நல்ல தொரு மண விருந்து. சாப்பாட்டுப்பந்தியில்தான் சுவை மிகுந்த எத்தனை எத்தனைப்பதார்த்தங்கள். கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்தான். சாப்பிடுவோர் முகம் பார்த்து இலை பார்த்து ப்பரிமாறும் சமையல் சிப்பந்திகள். திருமண விருந்து முடிந்து இனம் புரியாத ஒரு நிறைவு எங்கிருந்தோ வந்து கள்ளமாய் மனதிற்குள்ளே ஆக்கிரமித்துக்கொண்டது. . இது மாதிரி எல்லாம் எப்போதேனும் […]
குழல்வேந்தன் அன்றைக்கு எங்க ஹாஸ்ட்டல்ல நடந்த அந்த சம்பவத்த நெனச்சா? அடேயப்பா! இப்போ அந்த அனுபவத்த நெனச்சாலும் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போகுதுடா சாமி. நாங்க உசுரு பொழச்சது அந்த ஏசுவோட கருணையாகவோ மரியன்னையோட அருளாகவோ சூசையப்பரோட விருப்பமாகவோத்தான் நிச்சயம் இருந்திருக்கணும் என்கிறது என்னோடமன சாட்சியின் ஒரு பகுதி. இப்படி சொல்லரதால என்னை யாரும் ஒரு கிறித்தவன் என்றோ ஆத்திகனென்றோ நாத்திகனென்றோ தயவு செஞ்சி முத்திரைக் கித்திரை குத்திப்புடாதிங்க. உங்க முத்திரைகளுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன். ஆமாங்க நாங்க […]
மழைக்கால அரண்மனை மதிலுள் நுழைந்த தீப்பந்த வரிசை இடது புறம் நீண்ட தூரம் சென்று வலது புறமாகத் திரும்பியது. தீப்பந்தங்கள் மீது ஈசல்கள் மோதி விழுந்தன. மேலே உதிரும் ஈசல் சிறகுகளைப் பொருட் படுத்தாமல் பின் வரும் ரதத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி விரைந்தனர் சேவகர் ஓட்டமும் நடையுமாய். அந்தப் புறத்தின் மேல் வாசற் கதவுகள் சத்ததுடன் திறக்க தீப்பந்தங்களுடன் பணிப் பெண்கள் மன்னரைத் தலைவணங்கிக் கும்பிட்டு வரவேற்றனர். மன்னர் கிரீடமும் பட்டு உத்தரீயமும் நகைகளும் அணிந்திருந்தார். […]
வைதீஸ்வரன் வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “” ஒரு தனி மனிதனின் பல் வேறு வகையான அனுபவங்களின் கலவையான தொகுப்பு . அதை வாசிக்கும் போது கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சூழலில் நிகழ்ந்த கலாசார நிகழ்வுகள்…இலக்கிய வெளிப்பாடுகள் நவீன நாடக முயற்சிகள் அரசியல் பிரச்னைகள் கருத்தியல் பற்றிய விவாதங்கள் இப்படி பல அம்சங்களைப் பற்றிய எதிரொலிகள் அபிப்ராயங்கள் விவரணகள் விமர்சனங்கள் இவை யாவும் சீரான சிந்தனை செறிவுடன் சொல்லப் பட்டிருக்கின்றன . […]
விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு எப்போதும் மனதிலே பயம் உண்டாகும். படித்தால், மனதில் என்னென்ன விதமான சங்கடங்கள் உருவாகுமோ. எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்ற பயம்! ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியாரைப் பற்றியே வந்து கொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தபடியால் அந்தச் சாதியாரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ் நடை, பிராமணர்கள் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது. மற்ற […]
நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும் சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின் காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம் அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள் ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன களைகளகற்றுமுன் வலிய […]
காகங்கள் என்னைப் போல் நிம்மதியற்றவையா? கறுப்புக் கேள்விகளாய்ப் பறந்து பறந்து கரைந்து கொண்டிருக்கும். சூரிய வேட்கையில் கரிந்ததாய் ஆகாயக் கந்தல்கள்களாய் அலைந்து கொண்டிருக்கும். ஒரு கணம் ‘குபுக்’கென்று உச்சிமரக் கிளையில் காய்த்தது போல் உட்காரும். அடுத்த கணம் ‘விசுக்’கென்று வெளியில் ஆகாயச் சில்லை அலகில் கொத்திப் பறக்கும். ஊர் மரத்தையும் வெறிச்சோட விடுவதில்லை. மரத்தின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவி வேறு மரம் போல் பார்க்கும். கத்திக் கத்தி மரத்தின் ’தவத்தைக்’ கலைக்கப் பார்க்கும். ஒரு […]
(Beginning My Studies) (1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட்விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு […]
பத்து நிமிடங்களில் ஒரு திரில்லரைச் சொல்ல முடியும் என்று நிருபித்திருக்கிறார் அனில். மூன்றே பாத்திரங்கள். இரண்டு ஆண், ஒரு பெண். இடையில் நுழையும் காதல். அதனால் ஏற்படும் மரணங்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரியாவுக்கு ஒரு செல்பேசி அழைப்பு. “என் பி கம்பென்¢யில் உன் ரிசூயுமைப் பார்த்தேன். உன்னை தேர்ந்தெடுத்து விட்டார்கள். உடனே வேலையில் சேர்ந்து விடு “ “ மை காட்.. தாங்க்யூ.. எங்கே வர வேண்டும் ?” “ இந்திரா நகர் எக்ஸ்டென்சனில் பூலுவப்பட்டி […]