ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.

This entry is part 27 of 38 in the series 10 ஜூலை 2011

ராணி.. ************************** சேணம் பிடித்து பாயும் குதிரையின் பிடறி சிலிர்க்க தோல் பட்டியில் கால் மாட்டி எவ்வுகிறேன்.., முன்பின்னாக ஆடும் மரபொம்மைக் குதிரையில் கூட இல்லை.. திருவிழா ., தேரோட்டம்., புரவி எடுப்பு.. அணிவகுப்பு முடித்து அமைதியாய் உறைந்து அசைவு மறந்த ஐயனார் கோயில் மண் குதிரையில் ஆசையோடு அமர்ந்து.. ******************************************** பெண்ணாதிக்கம்.. ***************************** கருவறைக்குள் முடங்கிக் கிடந்த கோபமோ என்னவோ., கர்ப்பக்கிரகத்துள் அடக்கிப் போட்டாய்.. சில நூற்றாண்டுகளுக்கு முன் நிலவறையிலும்.. தீட்டென்றும் கற்பென்றும் கண் அறியா […]

பூமராங்

This entry is part 26 of 38 in the series 10 ஜூலை 2011

கறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான அட்டைக் கறுப்பு. அட்டை, கறுப்பு நிறமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. அது எனக்குத் தெரியாது. அவள் கறுப்பு நிறம். அவ்வளவுதான். அணுவளவேனும் வெளிச்சமற்ற ஓர் அமாவாசை இரவில் அவளைத் தனியே நிற்கவைத்து, ஊசித் தும்பிகளின் சிறகடிப்பினைப் போல அடிக்கடி அடித்துக் கொள்ளும் இமைகளை மூடிக் கொள்ளும்படியும், சிரிப்பில் மின்னும் வெள்ளைப் பற்களைக் காட்டக் கூடாதெனவும் கட்டளையிட்டால், […]

ஜென் – ஒரு புரிதல் பகுதி (1)

This entry is part 25 of 38 in the series 10 ஜூலை 2011

ஜென் (ZEN) என்பதற்கான இந்திய மொழிபெயர்ப்பு தியானம். சான் என்னும் சீனப் பதமே ஜென் என்னும் பெயருக்கான மூலம் என்று கருதப்படுகிறது. 25 நூற்றாண்டுகளுக்கு மேற் பழமையான ஜென் தத்துவம் தாவோயிசம் மற்றும் பௌத்ததின் சங்கமத்தில் உருவானதாகக் கருதப் படுகிறது. இந்தியத் தத்துவ மரபில் பொருத்திப் பார்க்கும் போது கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற மூன்றில் ஞான யோகத்தில் நாம் ஜென் மரபை அடையாளப் படுத்திக் கொள்ளலாம. வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் மதம் சம்பந்தப் […]

நினைவுகளின் தடத்தில் – (72)

This entry is part 24 of 38 in the series 10 ஜூலை 2011

அந்நாட்கள் மிகவும் சந்தோஷமாகவே கழிந்தன என்று தான் சொல்ல வேண்டும். சுட்டெரிக்கும் கடும் வெயில், எங்கோ தூரத்தில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வயிற்றுப் பாட்டுக்காக வாழ்கிறோம் என்பது போன்ற கவலைகள் இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. இப்போது அந்நாட்களைப் பற்றி நினைத்தாலும் சந்தோஷமாகக் கழிந்ததாகவே தோன்றுகிறது. திரும்ப நினைவில் அசை போடுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது. அலுவலகத்தில் கழியும் நேரத்தை எவராவது சந்தோஷமாக நினைவு கொள்வார்களா? அதாவது நேர்மையாக உழைத்து கிடைக்கும் அற்ப பணத்தில் வாழ்க்கை […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா

This entry is part 23 of 38 in the series 10 ஜூலை 2011

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனக்கு அஞ்சலில் இரண்டு பத்திரிகைகள் வந்தன. ஒன்று நான் சந்தா கட்டியது; மற்றது நான் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டது. முதலாவது இதழின் ஆசிரியர் நல்ல கவிஞர். தமிழில் புலமை மிக்கவர். தமிழ் மீது கொண்ட பற்றினால் ஒரு மரபிலக்கிய சிற்றிதழைப் பத்தாண்டுகளுக்கு மேலாக பொருள் இழப்புடன் நடத்தி வருபவர். அந்தக் காலத்து ‘செந்தமிழ்ச் செல்வி’ போல தரமான மரபுக் கவிதைளும், இலக்கியக் கட்டுரைகளும் கொண்ட பத்திரிகை அது. ஆனால் புதிய நவீனக் கூறுகள் […]

அபியும் அப்பாவும்

This entry is part 22 of 38 in the series 10 ஜூலை 2011

சிகரெட் பிடிப்பதில்லை மது அருந்தும் பழக்கம் இல்லை பிற கெட்ட பழக்கங்கள் இல்லை – இவன் வேண்டாம்   வெள்ளி செவ்வாய் தவறாது கோவிலுக்கு போவான் இறைவழி நடப்பதில் தான் விருப்பம் வம்புதும்புக்கு போய் பார்த்ததில்லை – இவன் வேண்டாம்   அரட்டை அடித்துக்கொண்டே இருப்பான் தன்னோடு இருப்பவரை மகிழவைப்பதில் வல்லவன் சிரித்து மயக்கும் கலையில் எம்டன் – இவன் வேண்டாம்   உம்மணாமூஞ்சியாய் இருப்பான் தேவையற்ற வார்த்தைகள் பேசமாட்டான் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான் […]

2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7

This entry is part 21 of 38 in the series 10 ஜூலை 2011

(கட்டுரை – 7) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம். தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy) இந்திய அணுசக்திப் பிதா […]

வட்டத்துக்குள் சதுரம்

This entry is part 20 of 38 in the series 10 ஜூலை 2011

சில சதுரங்கள் கூடி தம்மைக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க முனைந்தன சில சதுரங்கள் அதற்கு ஒத்துக்கொண்டன சில அவற்றை சற்றுத்தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன ஒரு சதுரம் நாம் எவ்வளவு தான் முயன்றாலும் வட்டத்தை உருவாக்க முடியாது என வாதிட்டது அதனை பல சதுரங்கள் கூடி நையப்புடைத்தன அந்தச்சதுரம் வளைந்து நெளிந்து கோணல்மாணலாகியது அதைப்புறந்தள்ளி விட்டு மற்ற சதுரங்கள் மீண்டும் தம் வேலையைத்துவங்கின எவ்வளவு முயன்றும் அவை தம்மைக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க இயலவேயில்லை தமது தோல்வியை […]

வலி

This entry is part 19 of 38 in the series 10 ஜூலை 2011

சமீலா யூசுப் அலி 2011.06.28 முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம் பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும் முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள். வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் […]

ஸ்வரதாளங்கள்..

This entry is part 18 of 38 in the series 10 ஜூலை 2011

காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்காலத்துளிகளில், மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன தட்டில்விழும் வட்ட நாணயங்கள்; ஸ்வரம் தப்பாமல் இறைஞ்சும் குரலுடன் இழைந்து.. அமைதிச்சாரல்