பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2

This entry is part 34 of 34 in the series 17 ஜூலை 2011

(Ice Age, Sea-Floor Rise & Fall) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கலியுகம் விழிக்கும் முன்னே பதினெட் டாயிரம் ஆண்டுக்கு முன் பனியுகம் தவழ்ந்தது! கடல் நீர் சுண்டி, தமிழகத் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் கூந்தலை விரித்தது! சூழ்ந்திடும் பரிதிக் கணப்பில் படிப்படியாய், பனிப் பாறை உருகிடும் ! நீர் மட்டம் உயர நிலத்தின் நீட்சி மூழ்கும்! கடல் மடி நிரம்பி முடிவில் புதை பூமியாய் சமாதி யானது, குமரிக் கண்டம்! […]

கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

This entry is part 22 of 34 in the series 17 ஜூலை 2011

ஓடுகளாய்.  ஒரு சந்திப்புக்குப் பின்னான நம்பிக்கைகள் பொய்க்காதிருந்திருக்கலாம். தூசு தட்டித் தேடி எடுக்கப்பட்ட கோப்புகளில் இருந்து பெய்யும் எண்ணத் தூறல்களில் நனையாது இருந்து இருக்கலாம். எங்கோ அகதியாய் விட்டு வந்த நிலக்கோப்புகளை பராமரித்துப் பொடியாய் அடுக்காதிருந்திருக்கலாம். பழையனவற்றில் நனைவதும், மூழ்குவதும் தவிர்க்கயியலா போதுகளில் திசைவிட்டு திசை நகர்ந்து குடியிருப்பை அமைக்கும் சிலந்தியை காணுவதும் தவிர்க்கப்பட்டிருந்திருக்கலாம். இதுதான் என தீர்மானித்தபின் உயிர்வாழ்வதும் மரணிப்பதும் ஓட்டுக்குள்ளே அடுக்கப்பட்ட ஓடுகளாய் சரியும்வரை. வேர் பாய முடியாத செடிகள்..:- ********************************************** நெருப்புப்பொறி பறக்க […]

அன்னையே…!

This entry is part 21 of 34 in the series 17 ஜூலை 2011

உயரமான ஒரு சொல்லை எழுதினேன் அது – “சிகரமா”னது… நீளமான சொல்லை வரைந்தேன் – உடனே “நதி”யானது… வெப்பமான சொல்லொன்று எழுத “சூரியனா”ய் உதித்தது… ஈரமான சொல்லொன்று எழுத “மழை” பொழிந்தது… அன்பாக ஒரு சொல் எழுத “நீ”யானாய்… நீ உடன் வந்தாய் – இனியும் நான் யாதெழுத…? என் முன் நீ அன்பொழுக…! இனி நீயே கதையெழுது… வாழ்க்கை நதியோட….!

பழமொழிகளில் திருமணம்

This entry is part 20 of 34 in the series 17 ஜூலை 2011

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com திருமணம் தனி மனிதனை சமூகத்தில் மதிப்புள்ளவனாக ஆக்குகிறது. சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்புக்குத் திருமண உறவு ஒரு காரணமாக அமைகின்றது எனலா. ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைவதும், திருப்புமுனையை ஏற்படுத்துவதும் திருமணமே ஆகும். இத்திருமணத்தைப் பற்றிய பழமொழிகள் பல வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பழமொழிகள் பண்டைக் காலத்தில் நிகழ்ந்த திருமணப் பழக்கவழக்கங்களை எடுத்துரைக்கின்றன. திருமணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நமது முன்னோர்கள் பழமொழிகளாக்க் கூறினர். […]

செல்லம்மாவின் கதை

This entry is part 23 of 34 in the series 17 ஜூலை 2011

– தயா நெத்தசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நாங்கள் அவரை நெருங்கினோம். ‘அம்மா’ என்று அழைத்த உடனேயே அவரது வாடியிருந்த முகத்தில் தோன்றிய பிரகாசம், இன்னும் நினைவிலிருக்கிறது. எனினும், அடுத்த கணமே மழை மேகம் சூழ்ந்த வானம் போல அவரது வதனம் இருண்டது. அவரிடம் சொல்வதற்கு ஏதோ இருக்கிறது. எங்களால் அவரைத் தாண்டிச் செல்ல இயலாது. “அம்மா, வியாபாரம் எப்படியிருக்கிறது?” எனது பயணத் தோழன் கேட்ட கேள்விக்கு, அவர் வெறுமனே புன்னகைத்தார். எனினும் அடுத்த […]

வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை

This entry is part 19 of 34 in the series 17 ஜூலை 2011

ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக நகரங்களை உருவாக்குபவன் என்வீதிவழியே வந்து என்னை தட்டி எழுப்பிச் சென்றான். கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்து இரவின் கதையை எழுத பிறையின் ஒளியை முத்தமிட்டு அதிசயித்து பார்க்கும் கண்கள் மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது. தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர அவன் கூக்குரலிட்டான். நிரம்பிய கண்ணீரில் ஒளுவெடுத்து புனிதப்படும் உள்ளங்கைகளும் நெடுவெளி மணற்காட்டில் தய்யம் செய்யும் விரல்களும் அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில் அவனின் அபயக்குரல் தொடர்ந்தது. லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும் உடைபட்டு […]

உருமாறும் கனவுகள்…

This entry is part 18 of 34 in the series 17 ஜூலை 2011

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌ க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது நாள்காட்டியில் தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள். க‌ருத்த‌ரித்துப் பின் பின்ன‌ல் சட்டைக‌ளோடு சுற்றும் ராட்டின‌ப் பூக்க‌ள் எம் தொட்டிலில் அடுத்த வீட்டுக் குழ‌ந்தை நான் வைத்த பெயரோடு. ச‌ரியில்லாத சுழ‌ற்சியால் த‌டுமாறும் மாத‌விடாய் உதிர‌ப்போக்கு ம‌ருந்து வைத்திய‌ர் சுழ‌லாத‌ உட‌ல் உபாதையென‌ ஒற்றைக்க‌வலை‌. க‌ட‌வுள்… வ‌ர‌ம்… வேண்டுத‌ல்…எல்லாமே நான்… நீ… நம்பிக்கை… மறுதலிப்பு!!! ஹேமா(சுவிஸ்)

எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்

This entry is part 17 of 34 in the series 17 ஜூலை 2011

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது புத்தகப் பதிப்புகள் புற்றீசல் போல் புறப்பட்டு வாசகர்களைத் திணற அடிக்கின்றன. பரம்பரை வணிக வெளியீட்டாளர்களுக்குச் சவால் விடுவதைப் போன்று இன்றைய புதிய பதிப்பாளர்கள் அச்சு நேர்த்தியிலும் கட்டமைப்பிலும் ஆங்கில நூல்களுக்கு இணையாகப் பதிப்பித்து சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்கள் போக, கணினிப் பயன்பாடு வசப்பட்டதனால் கிராமங்களில் கூட, அரும்பு விடும் படைப்பாளிகள் தாங்கள் எழுதிப் பார்த்த கன்னிப் படைப்புகளை – அதிகமும் கவிதைகளே – 40, 50 சேர்ந்தவுடன் […]

கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி)

This entry is part 16 of 34 in the series 17 ஜூலை 2011

நாகரத்தினம் கிருஷ்ணா ஹாமில்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர். ராயல் ஏர் •போர்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் விமானப் படைபிரிவில் மூத்த ராணுவ அதிகாரியுங்கூட. சம்பவம் நடந்த அன்று அதாவது 1941ம் ஆண்டு மே மாதம் 10ந்தேதி இரவு டர்ன்ஹௌஸ்லிருந்த அவரது அலுவலகத்திற்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. ஜெர்மானிய விமானப்படைக்குச் சொந்தமான மெஸெர்ஷ்மிட் 110 ரக விமானமொன்று இரவு பத்துமணி எட்டு நிமிட அளவில் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான நார்தம்பர்லேண்ட் கடற்கரைப் பகுதியில் காணநேர்ந்ததாக தகவல் தெரிவிக்கிறார்கள். […]

காத்திருக்கிறேன்

This entry is part 15 of 34 in the series 17 ஜூலை 2011

என்றாவது வரும் மழைக்காக அன்றாடம் காத்திருப்பது நிரந்தரமானது வாழத் தவிக்கும் மரத்திற்கு ஞாபக வேர்கள் நீரைத் தேடுவதற்கும் திராணியற்று முடங்கிப்போக வேண்டியதாகிறது உங்களது உறவின் வெளிச்சத்தில் வளர்ந்த எனது நட்பின் கிளைகள் இலையுதிர் காலத்தை சந்திக்கிறது கடந்த காலங்களில் பதித்த தடங்களை தடவிப் பார்க்கவும்., தொலைந்துபோன நட்பின் சிறகுகளை தேடிப் பார்க்கவும் வாழ்க்கை வானில் கவிழ்ந்த சோக இருளைத் துடைக்க மனப்பகிர்வு மின்னலை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வருமென காத்திருக்கிறேன் காலம் காட்டிய திசையில் காற்றெனப் பறந்த உங்களின் […]