மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயக் கூட்டை விட்டு எழுந்து நிற்பது எது ? இனிய சோக மொடு, ஏங்கும் சுதியில் பாடுது இரங்கத் தக்க தனிப் பறவை ஒன்று ! அடர்ந்த நிழல்கள் ஊடே படர்ந்த மயக்கம் வசப்படுத்தும் ! நெருக்கிய இலைக் காடுகள் நடமாட்ட மின்றி புறக்கணிக் கப்படும் ! மௌனச் சூழ்வெளியில் பந்தல் கொடிக் கப்பால் தன்னந் தனியாய் யாரோ வந்து நிற்கிறார் ! […]
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்குப் பணிவு வணக்கம் வரும் சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ், கையேடு இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. வர இயலாதவர்கள் வாழ்த்து அனுப்பின் பெரிதும் மகிழ்வோம். இவற்றைத் தங்கள் இதழில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நனி நன்றியன் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைவர் தமிழிலக்கிய உலக மாநாடு பிரான்சு. இணையதள முகவரி http://tamlitworldconf.wordpress.com/
++++++++++++ என் கோமான் ++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]
வேலுச்சாமிக்கு கை நீட்டாமல் முடியாது. கை ஒடிந்து போனதுபோல் உணருவான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பை நிறைந்திருக்க வேண்டும். அல்லாத நாள் வெறும் நாள். வருஷத்தின் முன்னூற்றி அறுபத்தைந்து நாளும் ஆபீஸ் இருந்தாலும் சரி. அவன் போகத் தயார். ஆனால் பை நிறைய வேண்டும், அவ்வளவே. கையை விட்டால் கத்தையாய் எடுக்க வேண்டும். வீட்டுக்குப் போய்த்தான் பிரிப்பான். ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு என்று. அதுவரை வாங்கி வாங்கிச் செருகுவதுதான் ஜோலி. மேலாகக் […]
அன்புடையீர் தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்தவேண்டுமென்கிற முனைப்பில் சில எளிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மேற்குலகிற்கும் பிரெஞ்சு சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சிறுகதையைத் தேர்வு செய்து பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிட திட்டம். இதுவரை பாவண்ணன், பிரபஞ்சன் சிறுகதைகள் வந்துள்ளன. விரைவில். கி.ரா சிறுகதையொன்று வெளிவரவிருக்கிறது. நமது மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தனையும் மறக்கவியலாது. அவருடைய சிறுகதையொன்றும் விரைவில் இடம்பெறும். அன்னாரின் பாரீஸ¤க்குப்போ நாவல் குறித்து நண்பர் வி.எஸ் நாயக்கரின் ஆழமான விமர்சனம் அண்மையில் வெளிவந்து பல பிரெஞ்சு நண்பர்களின் பாராட்டுதலையும் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]
அடுத்த கணம் நோக்கி எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியவில்லை சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே எண்ணங்கள் காணாமல் போயின துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் மரண ஓலங்கள் அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன பயங்கரத்தைத் தவிர இங்கிருப்பது மனிதத்தன்மையில் கையேதுமற்ற […]
மிகப் பிரம்மாண்டமான அரங்கம். கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சபையின் நாயகன் 27 வயது இளைஞன். கருத்த நெடிய உருவம். ஒல்லியான தேகம். எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சாதாரணமான பேண்ட், சட்டை, கண்களில் ஒளி மின்ன, பரபரப்பான பார்வை, சபையில் அலைந்து யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது அவ்வப்போது. அரசு உயர் அதிகாரிகளும், சில விஞ்ஞானிகளும், வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று சபை களைகட்டத் தொடங்கியிருந்தது. மகனுக்கு எதற்காக […]
நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த நாட்களில் அப்படித்தான். எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் தஞ்சாவூர், திருநெல்வேலி, மாயவரம் போன்ற டவுன்கள் தான். வாஸ்தவம். சென்னை என்ற பெரு நகரம் ஹிராகுட்டுக்கும் எங்கள் அவரவரின் சொந்த கிராமம் அல்லது ஊருக்குமான இடையில் இருந்தது தான். அதைக் கடந்து தான் ஹிராகுட் வந்தோம். ஆனால் யார் சென்னையைக் கண்டது? எக்மோர் ஸ்டேஷன் தெரியும், செண்ட்ரல் […]
36. குதிரை லாயத்தை ஓட்டியிருந்தது சிறை. அருகிலேலேயே தொழுவமும், குதிரைகள் லாயமும் இருக்கவேண்டும். சிறைச்சாளரத்தின் வழியே உள்ளே விழுந்திருந்த ஒளித்துண்டில், விலங்குகளுக்காக இடப்பட்ட மட்டைக்கோரை, கமரிப்புல், அறுகம் புல், சாமை, கொள் தப்பித்த துகள்கள் மின்மினிப்பூச்சிகள்போல பறந்தன. குதிரைகளின் பொதுவான கனைப்பு, நகைப்பதுபோன்ற கனைப்பு, மூக்கின் சீறல், கால்களை இடம் மாற்றிவைக்கும் குளம்பொலி; பசுக்களின் சந்தோஷம் ‘ம்மா’, கதறல்; கன்றுகளின் கூவல்; எருதுகளின் உக்காரம்; அவற்றின் வாடை; துர்க்கந்தம் சர்வமும் சிறைக்குள் இவன் மிச்சம் வைத்த இடத்தை […]