புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் காதலின் சுகத்தை அப்போதுதான் அனுபவித்தேன். நான் ஆமையைக் காதலித்தேன் அவசரப்படாமல் அருகில் வந்தது. தேரில் பவனிவரும் மதுரை மீனாட்சியைப் போல அதன் ஒடுகளே சிம்மாசனமாய் கம்பீரமாக அசைந்து நடந்தேன். கடல் அலைகளில் பாய்மரக்கப்பலாய் பவனி வந்தேன். நேற்று கோபியர் கூட்டத்தில் நானும் நுழைந்தேன். அப்பத்தைப் பங்குவைத்த பூனையின் கதையாய் காதலைக் கூட கண்ணா.. நீ […]
ருத்ரா தீக்கொளுந்து போல தேயிலைக்கொளுந்து துளிர் பிடிச்சு நிற்கையிலே அங்கே ஓம் மனசுக்குள்ளே துடுக்குத்தனமாய் உடுக்கடிக்கும் என் உள் மனசு கேக்கலையா சொல்லு புள்ளே பூவாயி. கேக்கத்தவங்கெடந்து என் நெஞ்சுக்குள்ள தேடிக்கிட்டு கெடக்கேனே தெரியலையா? ஊர்க்காட்டு சாஸ்தாவும் ஊமையாக நிக்கிறாரு. தாம்ரவர்ணி ஆத்துக்குள்ளே ஆவி நிழல் தேடுறேன் அல விரிச்ச முந்தான அமுக்கதடி என்னுயிரை. அம்பாந்த்ர சாலயிலே அண்ணாந்து கெடக்குறாக வண்டி மறிச்ச அம்மன்களும் கோடாங்கி அடிச்சி நாளு குறிக்கப் போனேனே கோடாங்கிக்காரன் கோடாலிய தலமேல போட்டாப்ல […]
அது ஒரு மழைக்காலம், சாதாரண மழை என்றால் பரவாயில்லை, வானத்திற்கு பூமியின் மேல் என்ன கோவமோ என்று தெரியவில்லை, மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். தண்ணீர் தவிர வேறெதுவும் இல்லை. வீதியெங்கும், வீட்டின் வெளியேயும், சிலர் வீட்டிற்குள்ளும், நிறம் தான் வேறுபட்டதே ஒழிய, எங்கும் தண்ணீர் தான். மண்ணின் நிறததிற்கு ஏற்ப தண்ணீரின் நிறம் மாறுபட்டும், நல்ல தண்ணீர் எது, சாக்கடை தண்ணீர் எதுவென்று தெரியாமல் தெருவெங்கும் எங்கும் ஒரே […]
(1) ஒரு மீன் செத்து மிதக்கும். குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை. (2) ஒன்றும் குறைந்து போவதில்லை. படிகள் இறங்கிச் செல்லும் குளத்திற்கு உதவ. (3) குளத்தில் போட்ட கல். பாவம்; நீந்தியிருந்தால் மீனாகியிருக்கலாம். (4) நீர் நிறைந்து தெளியும் குளம் கண்ணாடியா? சூரியனை எறிந்து பார் தெரியும். (5) ஊர்க் குளம் காணோம். அடுக்கு மாடி வீடுகள் குடித்திருக்கும். […]
ஜென் ஊஞ்சல் காலி ஊஞ்சல் காற்றில் ஆடுகிறது முன்னும் பின்னும் சத்தமிடாதீர்கள் அவன் கல்லறையிலாவது நிம்மதியாக உறங்கட்டும் ஆயுளில் ஒரு முறையாவது ஆணியில் அறையப்படுகிறோம் விரிசலடைந்த சுவரில் ஆணி இறங்குகிறது கையை காயப்படுத்தி கிளிஞ்சல்கள் பொறுக்கும் முன்பு கடலைப் பாருங்கள் யாருமற்ற அறையில் காற்று புரட்டுகிறது புத்தகங்களின் பக்கங்களை எப்படி குடை பிடித்தாலும் நிழல் நனைகிறது கடக்க கடக்க தொலைவு குறைகிறது நடக்க நடக்க கால்கள் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மாலதி மைத்ரியின்(1968) முதல் கவிதைத் தொகுப்பு ‘சங்கராபரணி’ இதில் 50 கவிதைகள் உள்ளன. புதிய சிந்தனைகள் வழி அழகான படிமங்கள் உருவாக்குதல், மொழியை லாவகமாகக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கவை. எனினும் இருண்மையும் அமைந்துள்ளது. கருப்பொருள் தேர்வில் வித்தியாசம் காணப்படுகிறது. ‘தெய்வ உடல்’ வித்தியாசமான– நான் அறிந்தவரை எந்தப் பெண் கவிஞரும் கையாளாத கருப்பொருள்.– பூப்பெய்திய ஒரு பெண் தனியே படுத்துறங்கும் முதல்நாள் அனுபவம் இதில் […]
இராஜா வரதராஜா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர் – 613 005. நாம் வாழும் இவ்யுகமே ஒரு விளம்பர யுகமாகும். எங்கு நோக்கினாலும் கேட்டாலும் விளம்பரங்களைத் தான் காண முடிகின்றது. தனி மனிதன் ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விளம்பரச் சூழலுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது என்பது மறுக்க – மறைக்க முடியாத உண்மையாகும். இதழ்களில் விளம்பரங்கள்: விளம்பரங்கள் இல்லையென்றால் இதழ்களை நடத்த முடியாத சூழ்நிலையைக் காலந்தோறும் இதழ்கள் பல நின்று போனதை வைத்துத் […]
ப.லெட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை ஈ.வெ.ரா பெரியார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி படைப்பாளர்கள் தற்கால நிகழ்வுகளோடு ஒட்டித் தம் பதிவுகளைப் படைப்புக்களில் பதிய வைக்கின்றனர். இதன் காரணமாக படைப்புகள் உயிர்த்தன்மையுடன் திகழ்கின்றன. கவிஞர் மேத்தா வானம்பாடி இயக்க காலக் கவிஞராவார். தொடர்ந்து புதுக்கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தமிழ்ச்சமுதாயம் பற்றிய பல விமர்சனங்களைத் தந்து தமிழ்ச்சமுதாயத்தின் இக்கட்டுக்களை, ஏற்ற இறக்கங்களை மதிப்பிட்டு அது சரியான வழியில் நடைபோட ஆக்கமும் ஊக்கமும் மிக்கக் கவிதைகளை படைத்தளித்து வருகின்றார். […]
தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது […]
செய்யாறு தி.தா.நாராயணன் கஸ்தூரி அக்கா சீரியஸாக கிடக்கிறாள் என்று செய்தி வந்தபோது, அந்த செய்தி எங்கள் தெருவில் என்னைத் தவிர ஒருத்தரிடமும் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவள் இந்தத் தெருவில்தான் பிறந்து, ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து, பின்பு வாழ்க்கைப்பட்டு போனவள். அவளுடைய சமவயது நண்பர்கள், நண்பிகள், மூத்தவர்கள், என்னைப் போன்று ஐந்தாறு வயது இளையவர்கள், உறவுக்காரர்கள், என்று எல்லோரும் இன்னமும் இந்தத் தெருவில்தான் வசிக்கிறோம்.. தகவல் கொண்டுவந்த ஆள் இன்னமும் எங்கள் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான் […]