1 கண்ணில் ஒரு பிடி ஆகாயம் தூவி விட்டுக் காணாமல் புள்ளியாய் மறையும் ஒரு சின்னப் பறவை. 2 கோடானு கோடி நட்சத்திரத் திருவிழாவில் ஒரே ஒரு யாத்ரீகன் நிலா செல்லும். 3 நட்சத்திரங்களை ’எண்ணுவதை’ விட நிலாவை ’எண்ணுவது’ மேல். 4 என் கூட்டம் ‘நான்’ சுருங்கி. 5 மினுக்கென்று எரியும் இந்த தீபம் தான் இந்த இரவில் என் துணை. தீபம் அணையும் முன் தூங்கி விடவேண்டும். 6 காலி நாற்காலியில் காலியாய் உட்கார்ந்திருக்கும் […]
செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு (கட்டுரை -8) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி படைத்தது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ உருவாக்கியது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் அறிவிக்கும். ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில் எதிர் எதிரே […]
சில முகங்கள் வாடும் போது மனதை பிழிகிறது… பத்தாவது படிக்கும் போதே பெருவாரியான பள்ளிகளில் ஒரு ஃபார்ம் கொடுக்கப்பட்டு ஜாதி என்ன என்று கேட்கும் போது, பழைய உண்மை புதிதாய் புலப்படுகிறது… அன்றோரு நாள் சில ஜாதிகள் எல்லா நிலைகளிலும் பரவ, சமத்துவ உலகம் காண ஒரு அரிய கண்டுபிடிப்பு செய்தார்கள்…. அது தான் 99 = 42 என்று… என்ன செய்திருக்க வேண்டும், எல்லா கோவில் பிரகாரங்களில் இரவு பகல் பார்க்காமல், படிப்பு சம்பந்தமான கோச்சிங்குகளை […]
38. குத்துக்காலிட்டு தெருவாசலில் உட்கார்ந்திருந்த ஜெகதாம்பாள் வீட்டெதிரே கூண்டு வண்டி நிற்பதைக்கண்டு எழுந்தாள். பூட்டியிருந்த எருதுகள் சிறுநீர்கழிக்கும் சத்தம் கேட்டது. கிழக்கில் சூரியன் எதிர்வீட்டு மோட்டுவளையை அவதானித்தபடி இருந்ததால் வந்த வண்டியையும் அதிலிருந்து யார் இறங்குகிறார்களென்பதும் தெளிவாயில்லை. தரையில் ஊன்றிருந்த கையைஎடுத்து புருவத்திற்கு மேலே மடக்கிப்பிடித்து கண்களை குறுக்கிப்பார்த்தும் பிரயோசனமில்லை. – யாரு? குரலை நீட்டிக் கேட்டாள். வண்டியின் பின்புறம், ஏறுபலகையில் கால்வைத்து செல்வக்களையுடன் யாரோ இறங்குகிறார்கள் என்பதை மாத்திரம் விளங்கிக்கொண்டாள். ஒரு வேளை தண்டல்காரனாக இருக்குமோ. […]
மகாதீரா மாவீரனாக டப் செய்யப்பட்டபோது, லோக்கல் தியேட்டரில் என்பதால், பார்த்து, ஓரளவு இம்ப்ரெஸ் ஆனவன் என்கிற வகையில், காசுக்கு நட்டமில்லை என்கிற மினிமம் கியாரண்டி எதிர்பார்ப்புடன் பார்த்த படம். கூடவே கிரேசி மோகன் வசனம் ( Misplaced ), சந்தானம் ( just a pickle) இருந்ததால் கொஞ்சம் கூடுதல் ஆர்வம். கன்னட சுதீப் (பா) அதே பெயரில் வில்லன். தெலுங்கு நானி அதே பெயரில் கதை நாயகன். கலர்புல்லுக்கு சமந்தா பிந்துவாக. அப்புறம் கிராபிக்ஸ் ஈ.. […]
பிபிஸி ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற பார்வையாளர்களும் மார்ச் 2011இலிருந்து இதுவரை 9000 பேர்கள் சிரியா போராட்டத்தில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். போராட்டம் எப்படி ஆரம்பித்தது? சிரியா நாட்டின் தெற்கில் இருக்கும் நகரமான டேரா (Deraa)வில் 14 பள்ளிச்சிறுவர்கள் துனிசியாவிலும் எகிப்திலும் மக்களது கோஷமாக இருந்த ஒரு கோஷத்தை சுவரில் எழுதினார்கள். அரபி மொழியில்.”மக்கள் இந்த அரசு வீழவேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்ற பொருள். இதற்காக போலீஸ் இந்த சிறுவர்களை கைது செய்து அழைத்து சென்று சித்ரவதை செய்தது. […]
07 டிசம்பர் 1052 மிஹிராவாலி அமர்சிங் பேனிவால் இன்று மஹராஜ் என்னை அழைத்து இருக்கிறார். ஏதோ மிகவும் அவசியமாகவும் ரகசியமாகவும் பேச விரும்புகிறார் என்று அந்த ஒற்றன் சொல்லிப் போனான். எப்போதும் என்னிடம் செய்திகளை சுமந்து வரும் ஒற்றன் இல்லை இவன். மஹராஜ் முன்பு என்னிடம் எப்போதும் வழக்கமாக அனுப்பி வைக்கும் ஒற்றன் என்னுடைய தூரத்து உறவினன். அவனுடைய தகப்பனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனும் தன் தகப்பனைப் போலவே சற்று திக்கித் திக்கிப் பேசுவான். இந்த […]
எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் (பாகிஸ்தான் தினசரி) தலையங்கம். ஜூலை 3, 2012 இன்றைக்கு பாகிஸ்தானில் தலையாய விவாத தலைப்பு என்னவாக இருக்குமென்றால், அது நிச்சயமாக தீவிரவாதமாகத்தான் இருக்கும். இது மதரஸாக்களை நடத்தும் உலேமாக்களாக இருந்தாலும் சரி, தாராளவாத குடிமக்களாக இருந்தாலும் சரி, இதுதான் முக்கிய பேச்சாக இருக்கிறது. இதே முஸ்லீம் தீவிரவாதம்தான் உலகத்தின் மற்ற பகுதிகளிலும் தலையாய விவாதமாக இருக்கிறது. ஐரோப்பாவுக்கு செல்லும் முஸ்லீம்களும் அமெரிக்கா வாழ் முஸ்லீம்களும்சந்தேகத்தின் காரணமாக கைது செய்யப்படுகிறார்கள். ஆசியாவிலும் முஸ்லீம் பெரும்பான்மையும் […]
எழுதியவர்_’கோமதி’ ஒரு முக்கியமான வைபவத்திற்காக இரண்டு நாட்கள் நாங்கள் சென்னை போய் வந்தவுடன் என் மாமியார் ஒரே புலம்பல். மொலு மொலுவேன்று பொரிந்து தள்ளினார். “இங்கே பாரு சுசீலா, இப்படி முன்னே பின்னே பழக்கமில்லாத புது எடத்துல என்னத் தனியா விட்டுட்டு இனிமே எங்கேயும் போகாதே. உன்னால் கூடக் கூட்டிக்கொண்டு போகமுடியாவிட்டாலும் பரவாயில்லே, இங்கேயே யாராவது தெரிந்தவர்கள் வீட்டில் இருந்துக்கிறேன். என்னால் இங்கே தனியே இருக்கமுடியாதும்மா, ராத்திரி தூக்கமே வரலை. ரொம்ப பயமா போயிட்டுது. “காலைலே தலைவலி. […]
அவள் கல்வி கற்பதுவும் நான் கல்வி கற்கும் நிலையத்திலேயேதான். முதலில் அவளை ஒரு கறுப்புப் பெண்ணாக அறிந்து கொண்டேன். பின்பு அவளது நடத்தைகளை ஆராய்ந்து ‘சேட்டை’ப் பகுதியையும் சேர்த்துக் கொண்டேன். ஆகவே அவள் சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணாகவேயானாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. அதற்கு அநேக காரணங்கள் இருந்தன. அவளது கூந்தலுக்குச் செய்திருந்த அலங்கோலம்! அது எவ்விதத்திலும் என் மனதைக் கவரவில்லை. காதுகளில் தொங்கும் பெரிய காதணிகள்! அவற்றுக்கும் நான் விருப்பமில்லை. கூடாரத் துணியால் தைக்கப்பட்ட இறுக்கமான காற்சட்டையும் […]