அரச மாளிகை ஊக்க மருத்துவர்

This entry is part 35 of 46 in the series 19 ஜூன் 2011

ஒருவர் திடீரென உங்களின் முன்னால் வந்து நின்று, உங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் வெறும் பார்வையாலேயே உங்களிடம் இன்னின்ன வியாதிகள் இருக்கிறதெனச் சொல்லி, அதற்காக சில குளிகைகளைத் தந்து விழுங்கச் சொன்னால் உடனே அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது விரட்டியடிப்பீர்களா? இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவரை அரச மாளிகைக்கு அழைத்துக் கொள்வார்.   விடயத்துக்கு வருவோம். எமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மக்களது பணத்தைக் கொண்டு ‘விளையாட்டு மருத்துவப் […]

இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….

This entry is part 34 of 46 in the series 19 ஜூன் 2011

தேர்தலில் மிக பெரிய வெற்றிக்கு பின், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும், மற்ற இடதுசாரி, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி,  மற்றும் பல கட்சிகளும் இணைந்து, தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறிய இலங்கையின் மீதான பொருளாதார தடை, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன ஒழிப்பையும் (ethnic cleansing), இனபடுகொலைகளையும் (genocide) 60 ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்த்திவரும் இலங்கை அரசை கண்டித்தும், இவற்றையே தனது கொள்கைகளாக கொண்டு தமிழக மீனவர்களையும் கொல்ல துணிந்துவிட்ட சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளுக்கும்/கட்சிகளுக்கும் எதிராகவும் […]

கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”

This entry is part 33 of 46 in the series 19 ஜூன் 2011

அன்னை தெரேசா நூற்றாண்டு விழா கடந்த  28 -05 -2011 சனிக்கிழமை பிற்பகல் கம்பன்    கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா” பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கோனேஸ் நகரில்  வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்தியன் வங்கி அதிகாரி திருமிகு இராஜன் , திருமதி உஷா இராஜன் இணையர் மங்கல  விளக்கேற்றி இனிதே விழாவைத் தொடங்கி வைத்தனர். மகளிரணி துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் இறை வணக்கம் பாட, செல்வி அனுஷ்யா தமிழ் வேந்தன் தமிழ்த்தாய்  வாழ்த்தைத்  தன்இனிய குரலில்  […]

ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்

This entry is part 32 of 46 in the series 19 ஜூன் 2011

தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களை நள்ளிரவில் போலீசார் விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது பலவிதமான சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.   முதலில் வன்முறை எதுவும் நிகழவில்லை என்று சாதித்த போலிஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் தொலைக்காட்சியின் நேரடி சாட்சியமாகப் போலீசாரின் முரட்டுத்தனமான நடத்தையையும், வன்முறையாக அவர்கள் மக்களை அப்புறப்படுத்தியதையும் இடைவிடாது பார்க்க நேரிட்டதால் வேறு வழியின்றி மைதானத்தில் இருந்தவர்களை அகற்றுவதற்காகக் குறைந்தபட்ச வன்முறை பிரயோக்கிப்பட்டதாகச் சொல்லத் தொடங்கினார்கள். […]

முதுகில் பதிந்த முகம்

This entry is part 31 of 46 in the series 19 ஜூன் 2011

பால்கனியில் தொற்றியபடி கண்மறையும் வரை கையாட்டி உள்வந்து படுக்கை விரிப்புகளை உதறிச் செருகும்கணம் இரவு ஊடலில் திரும்பிப் படுக்க முதுகில் பதிந்த முகம் மீசையொடு குறுகுறுக்க வண்டியில் செல்லும் உன் முதுகில் என் மூக்குத்தியின் கீறல் சற்றே காந்தலோடு.

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா

This entry is part 30 of 46 in the series 19 ஜூன் 2011

கவிஞர் சிற்பி பவள விழா குழு கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர். அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி பவள விழா மலர் ஒன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட உள்ளது. அம்மலரில் தங்களின் வாழ்த்துச் செய்தி மேலான படைப்பு ஒன்று வெளிவர தங்களது கட்டுரை/கவிதை/நினைவுக்குறிப்பு மற்றும் தங்களிடம் இருக்கும் கவிஞர்  பற்றிய அரிய செய்திகள்/ […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5

This entry is part 29 of 46 in the series 19 ஜூன் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நீ ஓர் அமைதியான உலகைக் காணப் போவதில்லை, மனித இனத்தின் மனத்திலிருந்து தேசப் பற்றை விடுவிக்கும் வரை.”   ஜார்ஜ் பெர்னாட் ஷா (On Patriotism)             நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி :   ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் […]

தனித்திருப்பதன் காலம்

This entry is part 28 of 46 in the series 19 ஜூன் 2011

இப்பொழுதைய இந்த தனிமை நிமடங்களை எச்சரிக்கை மிகுந்த தருணமாக மாற்றியமைக்கிறது காலம் .   தனித்திருப்பது ஒன்றும் ஆபாயகரமனது அல்ல கால சிந்தனை முறையை அதனதன் நிறைவை நிகழ செய்யும் ஒன்றினை எப்பொழுதும் செய்ய விட்டதில்லை காலம் .   சுயங்கள் பின்னப்பட்டிருக்கும் முடிச்சுகளை தனிமையின் ஏதோ ஒரு நொடிகளும் அதன் காலமும் விடுவிக்க காத்திருக்கிறது .   காலத்தின் இயக்கம் நடைபெறாத ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துகிறது வெற்றிடத்தின் விசை பரவல் .   அதன் நொடிகளின் […]

உறவுகள்

This entry is part 27 of 46 in the series 19 ஜூன் 2011

லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது  சைகையால் அவனைப் போய் சாப்பிடுமாறு கூறினாள். அம்மா பேசும் விதத்திலிருந்து அவள்  அவனுடைய அக்காவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். காயத்ரி பம்பாயில் இருக்கிறாள். இரண்டு நாளைக்கு ஒருதடவை அம்மாவுடன் பேசா விட்டால் காயத்ரிக்கு தலை வெடித்து விடும். அப்படியாவது முக்கியமான விஷயம் பாழாய்ப் போகிறதா என்றால் அதுவும் இல்லை. ஊர் வம்பு , சொந்தக்காரர்களைப் பற்றி புகார் […]