செ.சிபிவெங்கட்ராமன் மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு. உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் பாரதியார். உள்ளத்தின் உண்மையொளியே அறமாகும். மனத்தினும் பாவத்தை நினையாது யாருக்கும் எவ்வுயிர்க்கும் கேடு நினையாது, இரங்கும் தயவும், கொலை, பொய், வஞ்சகம் விடுவதுமே அறமாகும். இன்றைய உலகின் இன்றியமையாத தேவையாக இவ்வறம் உள்ளது குறிப்பிடத்தக்கது. பழந்தமிழரின் அக வாழ்வானாலும் சரி, புற வாழ்வானாலும் சரி […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது ! இதில் 39 கவிதைகள் உள்ளன. இக்கவிதை இயல்புகள் : 1. வளமான சொல்லாட்சி 2. எண்ணிலாப் படிமங்கள் 3. புத்தம் புதிய சிந்தனைகள் 4. புரிதலைக் கடுமையாக்கும் இடைவெளிகள் 5. வெளிப்பாட்டில் பரிமாண வேறுபாடு எனலாம். ‘ நாட்டுப்புறப் பாடகி ‘ பிரிவுத் துயரைக் கருவாகக் கொண்டது. இதில் சொற்கள் அழகையே இறக்கைகளாகக் கொண்டு வாசகன் மனத்தில் பறந்தலைந்து ரீங்கரிக்கின்றன. ஒரு வார்த்தைக்குள் ஒளித்துக்கொண்டேன் நமது […]
கனவு திறவோன் நான் தூங்கும் பகல்களில் நீ கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல… நான் வாசிக்கும் பதிவுகளை நீ அழித்துக் கொண்டிருப்பதைப் போல… நான் தியானிக்கும் வேளைகளில் நீ பெரியாருக்கு துதி பாடுவது போல… நான் சாப்பிடும் காலையில் நீ நோன்பு பிறை தேடுவது போல… நான் உழைக்கும் நேரங்களில் நீ ஓய்ந்திருப்பது போல… நான் நெருங்கும் இரவுகளில் நீ வீட்டுக்குத் தூரமாய் விலகியிருப்பதைப் போல… எனக்கும் உனக்கும் அமாவாசை பவுர்ணமி உறவு எப்படியிருந்தாலும் தூரத்தில் தெரியும் […]
எஸ்ஸார்சி அவன் வீட்டுத்தோட்டம் சின்னது அதனில் வேலி ஓரமாக நான்கு தேக்கு மரங்கள் இருந்தன.தருமங்குடிக்கு பக்கமாகத்தான் முதுகுன்றம்.. அந்த முதுகுன்றத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை. அந்த சந்தையில் வாங்கிய தேக்கங்கன்றுகள்தான் அவை. மஞ்சள் வண்ண தலைப்பாகை கட்டிய சைக்கிள் காரனிடம்.அய்ந்து கன்றுகள் வாங்கினான்.ஈர சாக்கில் சுற்றப்பட்டு சைக்கிள் காரியரில் அவை மொத்தமாக சயனித்து இருந்தன அவன் . வீட்டு த்தோட்டத்தில் வேலி ஓரம் நட்ட அத்தனையும் பிழைத்தன. வளர்ந்தன. வானம் தொட்டன.ஒன்று மட்டும் ஓங்காமல் ந்ரேல் என்று […]
சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு புதிய தடங்கள் மண் மூடிப் போகச் செய்தது தற்செயலான கரவொலிகள் கூட அசலான கலைஞனின் ஆன்மாவைக் கட்டிப் போட்டது கலையுலகும் இயங்குலகும் செக்கைச் சுற்றிய வட்டத்தில் வெவ்வேறு புள்ளிகளில் தினமும் ஒரு புதிய பக்கத்தில் ஒரு புதிய சொல் கவிஞனுக்கே சாத்தியம்
சுப்ரபாரதிமணியன் திரைப்பட விழாக்கள் அதன் கவர்ச்சியையும் இயல்பையும் இழந்து கொண்டிருக்கின்றன. உள்ளங்கையில் குறுந்தகடுகள் குவிகையில் திரைப்பட விழாக்களுக்குச் செல்வது அவசியமற்றது, தேவையில்லாதது என்று தோன்றினாலும் திரைப்பட விழாக்களில் அதிகமாகிக் கொண்டிருக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாகக் கூடிக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் 5 ஆயிரம் பிரதிநிகள் கூடுவர். இப்போது திருவனந்தபுரத்தில் நடைபெறும் கேரள சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு 10 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்கிறார்கள். இவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.11 திரையரங்குகளில் சர்வதேசப் […]
சிறகு இரவிச்சந்திரன் 0 வெகு நாட்களுக்குப் பிறகு, தமிழில் அசத்தலான விஞ்ஞானப் படம் விறுவிறுப்பான கதையுடன் வந்திருக்கிறது. 2065ல் ஒரு விஞ்ஞானியால் உருவாக்கப்படும் கால யந்திரம், இன்றைய நாளில் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களை நகைச்சுவையாக சொல்கிறது படம். சுய தொழிலில் முன்னேற நினைத்து தோல்வியுறும் இளங்கோ. அவனது நண்பன் புலிச்சித்தர் ஜோதிடர் ஆறுமுகம். இளங்கோவின் காதலி அனு. இவர்களைத் துரத்தும் ரவுடி குழந்தைவேலு. காலயந்திரத்தில் கடந்த காலம் போய் சில மாறுதல்களை அவர்கள் அறியாமலேயே […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஊஞ்லின் மீது அமர்ந்திருந்தாள் யாழினி. சுற்றிலும் பரந்து விரிந்திருந்த மணற் பரப்பு. இரண்டு ஊஞ்சல்கள் ஒரு சருக்கு மரம், ஒரு சாரியில் வைக்கப்பட்டிருந்ததென்னை மரம், அந்த தென்னை மரங்களை கடந்து சதுரமாய் ஒரு புல்வெளி. அதற்கு பார்டர் அமைத்ததைப் போல குரோட்டன்ஸ் செடிகள் ஒரு சீராய் வெட்டிவிடப் பட்டிருந்தது. தத்தி தத்தி வந்துக்கொண்டிருந்தாள் குட்டி யாழினி! வாழ்க்கை எத்தனை தூரிதமாய் கடந்து விடுகிறது. ஊரை விட்டு வந்து 3வருடங்களுக்கு மேல் ஆயிற்று. குழந்தை,அம்மா […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் விடுப்பவை ! பிரபஞ்சம் எங்கும் பூதச் சக்தியுள்ள காந்த தளங்கள் உருவாகிப் பாதிக்கும் ! அசுரக் காந்த முள்ள பயங்கர விண்மீன்கள் சூழ்ந்தவை ! காந்த விண்மீன் பூமியை நெருங்கின் மாந்தரின் உடல்மூலக் கூறுகளைச் சிதைத்து முடமாக்கி விடும் ! உயிரினத் துக்குச் சீர்கேடு உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்த பின் வறிய விண்மீனாகி சிறிய தாகிப் பரிதிபோல் […]