வளவ. துரையன் ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்” என்று மாணிக்க வாசகர் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடுகிறார். மண்ணுலகின் ஆடவர்களில் கண்ணப்பர் மிகச் சிறந்தவர் என்ற பொருளில், ”கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்” என சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுகிறார். திருஞான சம்பந்தரோ, ”வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன், மலராகு நயனம் காய் கணையினால் கிடந்[து] ஈசன் அடிகூடு காளத்தி மலையே” என்று கண்ணப்பரின் வழிபாட்டு முறயைப் போற்றுகிறார். முற்றும் துறந்த பட்டினத்து அடிகளோ, […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -9 யாழினி தேவிகாவின் அறையினுள் நுழைந்து, வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். புத்தகங்களின் மத்தியில் இடைச்சொருகலாய் சொருகப்பட்டிருந்தது அந்த நாட்குறிப்பு. அது அவள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அதன் மீது பதப்படுத்தப்பட்ட வெண் சாமந்தி மலர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் நிறம் மாறாமல் புதியதாய் அன்று மலரந்த மலரைப் போலவே இருந்தது. மெல்ல அந்த மலரை வருடினாள் யாழினி! அதனுள் இருந்து மெல்லிய இசையோடு நீஜெயிக்கப் பிறந்தவள் என்ற வாசகம் அழுத்தமாய் வந்தது. […]
-எஸ்ஸார்சி பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ.அவன் முத்ல் நாளே ஒரு நூறு ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் இரண்டு கரும்புகள் வாங்கி சைக்கிள் காரியரில் கட்டிக்கொண்டான்.சைக்கிள் எடுத்துக்கொண்டுபோய் கரும்பு வாங்கி வருவது அவனுக்கு நன்கு பழக்காமாகியிருந்தது.சைக்கிள் ஹாண்டில்பாரில் கருப்பங்கழிகளின் முனைப்பகுதியைத் தொங்கும்படி கட்டி சைக்கிள் காரியரில் கரும்பின் அடிப்பகுதியைக்கட்டிவிட்டால் போதும். நீங்கள் உங்கள் பாட்டுக்கு சைக்கிளை மிதித்துக்கொண்டு ஜம் ஜம்மென்று ராஜ பாட்டையில் போயிக்கொண்டே இருக்கலாம்.கரும்பின் சோலையை பத்திரமாக வளைத்துக்கட்டி எடுத்து […]
வே.ம.அருச்சுணன் கடாரப் பேரறிஞரே…..! இங்கே, மொழி,இனம்,சமயம்,எழுத்து வளர்ச்சியில் உச்சமுற இரவு பகல் உழைத்தாய் ஓய்வை மறந்தாய் உன்னால் தமிழ்ச் சமுதாயம் விழித்துக் கொண்டது உனது பேனா முனைதான் கடாரத் தமிழனை உலகுக்குக் காட்டியது……….! வரம் பெற்ற உன் எழுத்தால் தமிழர் மனம் குளிர்ந்தது தமிழன் வீரம் உலகுக்குத் தெரிந்தது மருத்துவத்தால் உயிர்கள் காத்தாய் எழுத்தால் தமிழர் மானம் காத்தாய் அடக்கமாய் ஆயிரம் செய்தாய் அறிவால் உண்மைகள் பல் தந்தாய்………! உனை நினைத்தால் வீரம் பொங்கும் பெருமையுடன் இங்கே […]
– சேயோன் யாழ்வேந்தன் சாவு செய்தி சொல்ல வந்தவன் செத்துப் போனான் ரெண்டு மைல் தொலைவில் பஸ் விட்டிறங்கியிருப்பான் மூச்சிரைக்க நடந்துவந்ததை வேடிக்கை பார்த்தேன் நம் வீட்டுக்குத்தான் ஏதோ இழவு செய்தி சொல்ல வருகிறானென்று அம்மா உறுதியாகச் சொன்னாள் அழுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த அவளை நோக்கி நடந்து வந்த அவன் கால்கள் பின்ன காம்பவுன்ட் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான் நெஞ்சைப் பிடித்தபடி சாவு செய்தி சொல்லாமலே செத்துப்போனான் கண்முன்னே செத்து விழுந்தவனைவிட அவன் நாவில் செத்துப்போனது யாருடைய சாவு […]
முனைவர் மு.பழனியப்பன் தமி்ழ்த் துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை கடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது இராமர் கட்டிய சேதுப்பாலம் ஆகும். வால்மீகி இராமாயணத்தில் இப்பாலம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. நாசா என்ற அமெரிக்க நிறுவனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பழங்காலத்தில் கடல்வழிப் பாலம் இருந்ததாக செயற்கைக்கோள் வரைபடத்தைச் சான்றாகக் காட்டுகின்றது. இசுலாமிய சமயத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆதாம் பாலம் என்றொரு […]
வே.சபாநாயகம். 1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல இலக்கிய சிற்றேடுகளுக்கு சந்தா கட்டி வரவழைக்கும் ஆர்வமுடையவனாக இருந்தேன். அதற்கு முன்னோடியாகத்தான் தீபமும், கணையாழியும் என் சேகரிப்பில் வந்தன. இவை இரண்டும்தான் எனக்கு இலக்கிய உலகின் நான் அறியாத சாளரங்களைத் திறந்து விட்டன. தீபம் […]
-கனவு திறவோன் (1) நீ இல்லை நான் எழுதிய ஒவ்வொரு கவிதையிலும் நீ இருக்கிறாய். ஆனால், நீ என்னிடம் இல்லை! இனி எழுதுவதற்கு என்னிடம் கவிதையும் இல்லை… (2) ஏன் இந்த வித்தியாசம்? பரிட்சையில் பதில் எழுதாவிட்டால் பெயிலாம்… என் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் நீ பாஸ் ஆகிக் கொண்டிருக்கிறாய் சாலையில் விதிகளைப் பின்பற்றாவிட்டால் விபத்து நடக்குமாம் உன் பாதையில் அடிதொற்றி நடக்கிறேன் பிறகு ஏன் வீழ்த்தப்பட்டேன்? அற்புத விளக்கை உரசினால் உடனே பூதம் வருமாம்… […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி இந்த சித்திரை மாதம் வந்தாலும் வந்தது, சென்னை வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியே தலை காட்ட முடியவில்லை. எங்காவது ஊட்டி, கொடைக்கானல் என்று நினைத்தவுடன் நம்மால் கிளம்ப முடிகிறதா? அப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கிளம்ப ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அதற்குள் கோடைகாலமே முடிந்து விடுகிறது. நான் இந்த மாதிரி புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஒரு நாள் அந்தப் பங்களாவிலிருந்து போன் வந்தது. உதவி மானேஜர் ரகுராமன் தான் பேசினார். “சார், வணக்கம். […]
சி. ஜெயபாரதன், கனடா அழகினைக் கண்டால், உளம்போய் அடிமை ஆகுதடி ! நிழலினைப் போல, தொடர்ந்து நெருங்க ஆசையடி ! கற்ற மறையெல்லாம் ஒருகணம் காற்றில் பறக்குதடி ! ஒற்றரைப் போல ஒளிந்தே உளவச் செல்லுதடி ! சுற்றுப் புறமெல்லாம் மறந்து சூனிய மாகுதடி ! முற்றுகை செய்யுதடி துணைக் கோளாய் முழு உணர் விழந்தபடி ! பட்டப் பகலிலும் கனவுகள் பளிச்சிடு கின்றதடி ! வட்டப் புள்ளி போல கோலமிட்டு வலம் வருகுதடி !