[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை –24 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 50 & படம் : 51 [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland […]
மணி.கணேசன் அக்கால மகளிர் அறிவிலும்,உடலுழைப்பிலும் ஆணுக்கு நிகராகவே விளங்கி இருந்தனர்.பெண் மீதான உடைமைச்சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடும் பட்சத்தில் அவள் அவளது தாய்,தந்தை,உடன்பிறந்தோர் மற்றும் உற்றார், உறவினர்களால் அலர் தூற்றப்பட்டு இற்செறிப்பிற்கு ஆட்பட்டுத் தவித்துப் போனாள். நூழை_நுழையும் மடமகன் யார்கொல்?என்று அன்னை புழையும் அடைத்தாள் கதவு (59:2-4) இவ்வாறாக,கதவில் தென்படும் சிறுதுவாரத்தையும் மூடி கடுஞ்சொல் கூறி கடுங்காவலுக்கு உட்படுத்திட்டப் போதிலும் பெண்ணானவள் தமக்குரிய துணையைத் தாமே தேர்ந்து தன்னுடைய விருப்பத்தினைச் சுதந்திரமாக வெளியிடும் திறம் பெற்றிருந்தாள் என்பது […]
சுற்றங்களின் முன் அவமானச் சின்னமாக நிறுத்தப் படுகிறேன் ! கழுத்தில் இல்லாத தாலி பேச்சுப் பொருளாகிறது அவர்களுக்கு ! நமக்குள் நடந்த உடன் படிக்கைக்கு சாட்சி யார் ? இருவரும் அந்த நீலவானம் எழில் நிலவும் நான்கில் நின்றதோர் சாட்சி உண்டு எங்கும் நிறைந்தோன் மௌனியாகவே நிற்பவனாகிய கடவுள் காதலர்களுக்கு புரியும் இம்மூன்றோர் மொழி சுற்றி நிற்கும் தூயவருக்குப் புரியுமா? நகைப்பினூடே பரிசீலிக்கப் படுகிறது பெண் கற்பின் மேன்மை ! ஒருவனாக […]
சர்ச்சைகுரிய இசை, நாட்டிய விமரிசனக் கட்டுரைகளைத் தமிழ் இதழ்களிலும் ஆங்கில இதழ்களிலும் எழுதிச் சிலருடைய நட்பையும் பலருடைய பகைமையையும் சம்பாதித்துக்கொண்ட அமரர் சுப்புடு அவர்களின் அறிமுகம் 1997 இல் ஏற்பட்டது. அது கூட நேரடியான அறிமுகமன்று. கடிதம் வாயிலாகத்தான். அவரது கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியதற்கு அவர் மிகுந்த அன்புடன் பதில் எழுதியிருந்தார். மிகப் பிரபலமான பெரியவர் பதில் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நன்றி தெரிவித்த பதில் கடிதமாக மட்டுமின்றி, அவரும் சில […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 49.புனித அன்னையாகத் திகழ்ந்த ஏழை……… “அச்சம் தவிர் ஆண்மை தவறேல் ரெளத்திரம் பழகு சரித்திரத் தேர்ச்சி கொள்” அடடே வாங்க….வாங்க…என்ன பாரதியாரோட ஆத்திசூடியச் சொல்லிக்கிட்டே வர்ரீங்க..அதுவும் வீரத்தை ஊட்டக்கூடிய வரிகளாச் சொல்லிக்கிட்டு வர்றீங்க….ஒங்களுக்கு வீரம் பொங்குதா….சும்மா வந்துக்கிட்டிருந்த ஒங்களுக்கு எப்படீங்க இப்படி வீரம் வந்தது….என்னது சிலபேரோடப் […]
நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 30-04-2014 *அனுப்ப வேண்டிய முகவரி […]
நவம்பர் 6 2003 இதழ்: இஸ்லாத்தில் பிரிவினை- முகம்மது இஸ்மாயில்- ஒன்றாயிருந்த சமூகம் இன்று இரண்டாய்த் தோன்றுவதன் பல காரணங்களில் முக்கியமான காரணம் என்னவெனில் முஸ்லீம்களில் சி(ப)லர் அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்பதே ஆகும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203110610&edition_id=20031106&format=html ) திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்- எச். பீர் முகம்மது- இஸ்லாமிய சட்ட நடைமுறை (ஷீஆ) நவீனப் போக்குக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கிறது. குர்ஆனின் மொத்தமுள்ள ஆராயிரம் வசனங்களில் இருநூறு வசனங்கள் மட்டுமே சட்டரீதியான கண்ணோட்டம் உடையவை. […]
கர்ணனின் மரணத்திற்குப் பிறகு துரியோதனன் சல்லியனை கௌரவர்களின் படைக்குத் தலைமை ஏற்கச் செய்கிறான்.. இதுவரை நடைபெற்ற யுத்த காலங்களில் போரில் யுத்தம் செய்யும்பொழுது எதிர்த்துப் போட்டியிட முடியாமல் போகும் தருணங்களில் யுதிஷ்டிரர் ஓடி ஒளிந்து கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்பொழுது துணிகரமாக எதையாவது செய்து தன் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் சாதுர்யமாக சல்லியனின் தலைமையின் கீழ் இயங்கும் படையினை எதிர்க்கும்படிக் கட்டளையிடுகிறார். யுதிஷ்டிரர் இந்த முறை திறமையாகப் […]
வணக்கம் திண்ணை ஆசிரியர் எனது அடுத்து வரும் ஓவிய காட்சி, உங்கள் thinnai பதிவு செய்ய முடியுமா ? http://www.vasuhan.com நன்றி வாசுகன்
காலம்தோறும் கவிதையின் மொழிதல்முறை மாறிக்கொண்டே வருகிறது. அதே தருணத்தில் எளிமை, இறுக்கம், கச்சிதம் என கவிதையின் புறவடிவங்களிலும் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு மொழிதல்முறை பல கவிஞர்களால் மெல்லமெல்ல வளர்த்தெடுக்கப்பட்டு, அது அந்தக் காலத்துக்குரிய முறையாக உச்சம் பெற்று, கால ஓட்டத்தில் அது தேய்வழக்காக மாறிவிடும் தருணத்தில் மீண்டும் ஒரு புதிய மொழிதல்முறையோடு ஒரு புதிய தலைமுறை தோன்றுகிறது. தமிழ்க்கவிதையின் மொழிதல்முறையில் மாற்றங்கள் உருவான சமயங்களில் மிகச்சிறந்த ஆளுமைகளாக மலர்ந்தவர்கள் பாரதியார், ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிருமிள், […]