மூக்கு

This entry is part 18 of 26 in the series 17 மார்ச் 2013

ர்யுனொசெகெ அகுடாகோவா [1918] மொழிபெயர்ப்பு வைதீஸ்வரன் “”ஸென்ச்சீ நைய்கு [ Zenchi Naigu ] மூக்கு” என்று மட்டும் சொன்னால் போதும். இகி நொநொ [Ike-no-no ] கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று.. அவர் பெயர் zen தத்துவப் பொருளை சுட்டுவதாக இருக்கலாம்; அவர் பத்து குருமார்களில் ஒருவராக க்யோடோவின் அரசாங்க அரண்மனையின் சிறப்பு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம்….ஆனாலும் அவரைப் பற்றி யார் பேசினாலும் அது அவர் மூக்கைப் பற்றியதாகத் தான் […]

யாதுமாகி நின்றாய்….. !

This entry is part 17 of 26 in the series 17 மார்ச் 2013

  மலைகளின் இளவரசி கொடைக்கானல். தமிழகத்தில் தேனிலவுத் தம்பதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயற்கை வரம். கோக்கர்ஸ் வாக், கொடைச்சாலையின் தென் புறம், செங்குத்தான சரிவுகளின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள், 1கி.மீ தொலைவுள்ள குறுகிய நடைபாதையின் இரு புறமும் இயற்கை அன்னையின் இன்ப ஊற்று உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். பனி மூட்டம் இல்லாத நாட்களில் தென்புறம் டால்பினின் மூக்கு, பாம்பர் பள்ளத்தாக்கு பெரியகுளம் மற்றும் மதுரை நகரின் பறவைக்கண் காட்சி, என அனைத்தும் இன்னொரு உலகிற்கே இட்டுச்செல்லும்.   ”அனாமிகா, என்னம்மா.. […]

வாலிகையும் நுரையும் – (15)

This entry is part 16 of 26 in the series 17 மார்ச் 2013

  இனம் மற்றும் நாடு மற்றும் சுயம் ஆகியவற்றைக்காட்டிலும் ஓர் முழமேனும் உயர்ந்து நிற்பீரானால் நீவிர் உண்மையிலேயே கடவுளைப் போன்றவராகிறீர்.   ஒருவேளை யாம் நீராக இருக்க நேர்ந்தால் தாழ்ந்த அலையினூடேயுள்ள அம்புதியிடம் தவறு காண மாட்டேன். தகுதிவாய்ந்த தலைவனைக் கொண்டதொரு தரமான கப்பலிது;  கோளாறில் உள்ளது உமது உந்தி மட்டுமே.   அடைய முடியாத எந்த ஒன்றிற்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோமோ அதுவே, நமக்கு ஏற்கனவே கிடைத்த ஒன்றைக் காட்டிலும் உயிரைப் போன்ற உன்னதமானதாக தோற்றமளிக்கும். […]

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)

This entry is part 15 of 26 in the series 17 மார்ச் 2013

  இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்தில் அந்தக் கட்டத்தை நினைத்துப் பார்த்தால், அப்படியெல்லாம் “ஒருத்தர் இடம் கொடுத்தால் எதையும் எழுதிவிடுவதா?” என்று கேட்டாரே செல்லப்பா, அந்த மனநிலையைக் கொடுத்ததே அவரும் அவரது எழுத்து பத்திரிகையும் தான். அதற்கும் மேல், எங்கள் மனம் நடமாடிய அந்தச் சின்ன இலக்கிய சூழலில் இதைத் தானே நான் கற்றுக்கொண்டேன். எழுத்து, இலக்கிய வட்டம், அதைத்தொடர்ந்து தேவசித்திர பாரதியின் ஞானரதம் எல்லாம் என்னிடம், மனம் விட்டு எந்தத் தடையும் உணராது பேசும் எழுதும் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3

This entry is part 14 of 26 in the series 17 மார்ச் 2013

    ராதிகா எதுவுமே சொல்லாமல் முகததைத் திருப்பிக்கொண்டு விருட்டென்று நகர்ந்ததும், விடுவிடுவென்று தன்னறையை நோக்கி நகர்ந்ததும் தனலட்சுமிக்கும் தீனதயாளனுக்கும் அளவற்ற திகைப்பை அளித்தன.  இருவரும் ஒருவரை யொருவர் விழி மலர்த்திப் பார்த்துக்கொண்டார்கள்.  இவளுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு?’என்கிற கேள்விதான் இருவர் பார்வைகளிலும் குதித்துக்கொண்டிருந்தது.       அடுத்து ராதிகா செய்தது இருவருள்ளும் சற்றே திகிலைக் கிளர்த்தியது.  அறைக் கதவைப் படீரென்று அறைந்து சாத்தியதும், சாத்தியதில் காட்டிய விரைவும், உடனே தாழ்ப்பாளையும் போட்டுக்கொண்டதும் இருவர் புருவங்களையும் உயர்த்தின.   […]

மஞ்சள் விழிகள்

This entry is part 13 of 26 in the series 17 மார்ச் 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் பங்கஜம் எல்லாருக்கும் தெரிந்தவள் . அவளைக் கண்டாலே போதும், ” பங்காஜாம் சூடா மறிலா! ” என்று மலாய்க்கார ஊழியர்கள் கேலி செய்வதுண்டு. தாதியர்களும், இதர பணியாளர்களும் அவளை விடுவதில்லை. ஏன்? நான்மட்டுமென்ன? ” வந்துவிட்டாயா பங்கஜம்? ” என்றுதானே ஒவ்வொருமுறையும் அவளைக் கிண்டல் செய்துள்ளேன்? குளுவாங் அரசுப் பொது மருத்துவமனைக்கு வாரத்தில் இருமுறையாவது பங்கஜத்தைப் பார்க்கலாம்.அவள் நிறத்தில் சாம்பல்.கருப்பு என்றும் கூற முடியாது. மாநிறம் என்றும் கூற இயலாது. கிளி போன்ற […]

நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1

This entry is part 11 of 26 in the series 17 மார்ச் 2013

  -தாரமங்கலம் வளவன் “ குரு தட்சணை கொடுக்கிறதுக்கு பதிலா இந்த ஏழைப் பெண்ணை வர தட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்களா ”  கல்யாணி கேட்ட இந்த நேரிடையான கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தானம் தடுமாறினான்.   சந்தானம் பிரபல பிண்ணணி பாடகர் வெங்கட்டின் ஒரே மகன். சந்தானமும் பாடுவான். சில திரைப் பாடல்களை அவனும் பாடியுள்ளான். அவ்வளவு பிரபலம் என்று சொல்ல முடியாது. அதில் அவனுக்கு வருத்தம் தான். அப்பாவின் பெயரினால் தான் தனக்கு […]

சுத்தம் தந்த சொத்து..!

This entry is part 10 of 26 in the series 17 மார்ச் 2013

வெய்யில் சுளீரென்று முகத்தில் பட்டதும் தான் விழிப்பு வந்தது கருப்பாயிக்கு. வயது அம்பது ஆயிருச்சு. என்ன ஆயி என்னா …?  இன்னிக்கும் வேலைக்கிப் போயி சம்பாதிச்சால் தான் தான் வீட்டில் உலை பொங்குங்குற நிலைமை.  இதுல பெத்த மவள் வெள்ளையம்மாளும் அவள் பெத்த மவன் முருகனும்  பாரமாகத் தான் தோன்றினார்கள் கருப்பாயிக்கு . ஒருத்தி ஓடா உழைச்சு குடும்பமே குந்தித் திங்கணுமுன்னா எப்படி முடியும்? அலுப்புடன் நினைத்துக் கொண்டவள் போர்வையை விலக்கினாள். வாசல் திண்ணையில் படுத்திருந்தவளின் உடல் […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1

This entry is part 9 of 26 in the series 17 மார்ச் 2013

  மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   […]

மூன்று அரிய பொக்கிஷங்கள்

This entry is part 8 of 26 in the series 17 மார்ச் 2013

ஒரு காலத்தில் ஒரு ஏழை விதவை தன் இரு மகன்களுடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். அவளது மூத்த மகன் மிகவும் புத்திசாலி. சம்பாதிக்கும் வழி தெரிந்தவன். அதனால் தாய் விரும்பும் மகனாக இருந்தான். சுற்றி உள்ளவர்களும் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் தந்தனர். ஆனால் அவளது இளைய மகன் மிகவும் எளியவன். நேர்நோக்கு கொண்டவன். எப்படிச் சம்பாதிப்பது என்று தெரியாத இளைஞன். அவனை எதற்கும் லாயக்கற்றவன் என்று தாய் அழைக்கும் அளவிற்கு எதுவும் தெரியாத அப்பாவியாக இருந்தான். […]