ஒரு விதையை விதையாகவும் பார்க்கலாம். ஒரு அடர் விருட்சத்தைத் தனக்குள் உறைய வைத்திருக்கும் உயிராகவும் பார்க்கலாம். இதில் ஷாநவாஸ் இரண்டாவது வகை. பரோட்டாவை ஒரு பதார்த்தமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அதில் ஊடேறிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வுகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதைத் தான் பேசுகின்றன. ஒரு ஞாயிறன்று பெய்த மழை கலைத்துப் போட்டதில் அந்த முதலாளி(தவ்கே)க்கும், தொழிலாளிக்கும் ஏற்படுகின்ற மன ஓட்டத்தையும், சுகாதார அதிகாரியிடம் பகிர முடியாத […]
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகாலத் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான எல்லீஸ் டங்கன் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அவர் சில ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார் என்னும் தகவல் கிடைத்தது. அவற்றில் தமிழ்நாட்டுக் கிராமங்களைப்பற்றிய சித்திரத்தை வழங்கும்வகையில் இருபது நிமிட அளவில் ஓடக்கூடிய ஒரு படமும் ஒன்று. உடனடியாக அந்தப் படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். ஒரு வயல்வெளிக்காட்சியிலிருந்து தொடங்குகிறது அந்தப் படம். அருமையான பின்னணி இசையுடன் ஒவ்வொரு காட்சியும் உயிர்த்துடிப்புடன் அழகாக இருக்கிறது. அதிகாலையில் உழவர்கள் ஏர்பூட்டி வயல்களில் […]
சேயோன் யாழ்வேந்தன் சொற்களின் சிற்பி சிற்பியின் உளிச்சிதறல்களில் புதுப்புது சொற்களைக் காண்கிறான் சொற்களின் வேடன் வேடனின் வித்தைகளில் புதுப்புது சொற்களைக் கண்டெடுக்கிறான் சொற்களின் கடவுள் கடவுளின் மொழியில் புதுப்புது சொற்களைச் சேர்க்கிறான் சொற்களின் புத்தன் புத்தனின் சொற்களில் புத்தனைத் தேடித் தோற்கிறான். seyonyazhvaendhan@gmail.com
இப்போது பிடிக்கிறது உன்னை ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப்பப்பெயருண்டு என் குடும்பத்திற்கு என்னால் பெயர்வர எண்ணியிருக்கும்போது என்னை உன்குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள் உண்மையில் நான் உன்குடும்பத்தைச்சேர்ந்தவனல்ல ஆதியில் என்குடும்பத்தின் பெயர் வேறு வரலாற்றுச்சதியில்; சகதியில் வந்ததுதான் உன்பெயர் உன்பெயரில் இயங்க ஒருபோதும் உடன்பாடில்லை அதுபோல் இன்னொருபெயரில் இயங்க எள்ளளவும் விருப்பமில்லை என்ன செய்வது? ஏதாவது ஒரு குடும்பத்தைச்சேர்ந்தவனாக இருக்கவேண்டுமே? எனவேதான் நான் உன் குடும்ப உறுப்பினன் […]
0 விருதுகளையும் வெகுஜன ரசிப்புகளையும் அள்ளிக் கொண்டிருக்கும் மலையாளப்படம்! ‘ நேரம்’ இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் படைப்பு. அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு ஐம்பது நாட்கள் கழித்து திரையரங்கில் பார்த்தேன். ஆரம்பம் வெகு சாதாரணம். ப்ப்பி லவ் என்கிற விசயத்தை ‘பன்னீர் புஷ்பங்கள் ‘ தொடங்கி, பாக்யராஜின் ‘ இன்று போய் நாளை வா ‘ வரை பல கட்டங்களில் துவைத்து காயப் போட்டு விட்டார்கள். அது இன்னமும் கிழியாமல் இன்றைய இயக்குனர்களிடம் போய் சேர்ந்திருப்பது […]
0 நான்கு குறும்படங்களை இணைத்து 132 நிமிட ஒட்டுச் சட்டையாக தந்திருக்கீறார் கார்த்திக் சுப்புராஜ்! வெரைட்டி இருந்தாலும் வயிறு ரொம்பவில்லை! 0 “ உனக்கும் எனக்கும் பிடிச்ச அவியல் “ என்றொரு தலைப்பு பாடலுடன் ஆரம்பிக்கிறது இந்தப் படம். முடிவில் உனக்கு பிடிக்கிறது. எனக்கு பிடிக்குமா என்றொரு யோசனையுடன் கலைகிறது ரசிகர் கூட்டம்! 1, ஸ்ருதி பேதம் – இயக்குனர் மோஹித் மெஹ்ரா. தாத்தாவுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவள் ராஜின் தாய். ராஜ், தன்னை விட ஒரு […]
[World’s Highest Butterfly Bridge in France] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா https://youtu.be/F6wLEiv491g பிரான்சில் ‘மில்லா நீள்வீதிப் பாலம் கட்டமைப்புப் பொறியியல் துறைநுணுக்கச் சாதனையாக உன்னத இடத்தைப் பெறுகிறது. நமது ஆராய்ச்சி, பொறித்துறை நுணுக்கங்களின் மகத்தான வல்லமையை அது எடுத்துக் காட்டுகிறது. அங்கே கட்டப்பட்டு, பிரென்ச் மக்கள் மெய்யாகப் பெருமைப்படும் அந்த மகத்தான சாதனை பிரான்சின் தீரச்செயலைப் பறைசாற்றுகிறது. நவீன வெற்றிமயமான பிரான்ஸ் தேசம், எதிர்காலத்துக்காகத் தன்னை இணைத்துக் கொள்ளும் […]
அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை அந்த ராஜ்ய சபை உறுப்பினர்களுக்குப் புதுமையாக இருந்திருக்கும். அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். காரணம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக மக்கள்தான் அதுவரை அறிந்திருப்பார்கள். திராவிட ஏடுகளைப் படித்தவர்கள் மட்டுமே அதுபற்றி அதிகம் தெரிந்திருப்பார்கள். பாமர மக்கள் அது பற்றி மேடைகளில்தான் கேட்டிருப்பார்கள். பலருக்கு அதன் உண்மையான பொருள் தெரிந்திருக்க வாயிப்பில்லை. திராவிடர் இயக்கத்திற்கு எதிரானவர்கள் அதை ஒரு மாயை என்று கூறினர். திராவிட நாடு என்பது இருந்ததில்லைதான். […]
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! PDF Document attached. http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 700க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்ம் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
அதைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். கால்சட்டை போட்டுக்கொண்டு கோலி விளையாடிய போது அவன் மொழியை உடைத்து விடவேண்டுமே என்ற வெறியைத்தேடினேன். தட்டாம்பூச்சி சிறகுகளை காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு கிர்ரென்று அது போடும் ஓசைக்குள் அர்த்தம் புரியாத நியாய வைசேஷிகத்தையும் பூர்வ உத்தர மீமாம்சங்களையும் தேடினேன் என்று சுருக்கம் விழுந்த வயதுகளில் நினைவுகளை சவைத்துத் துப்பும்போது தெரிந்து கொண்டேன். அவளிடம் என்ன இருந்தது என்று தெரியாமலேயே அவளிடம் இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன். வேறு வேறு கூட்டில் இருவருக்கும் ஆறேழு […]