டாக்டர் ஜி. ஜான்சன் 61. வேலூர் நோக்கி…. நான் வேலூர் சென்றதில்லை. அண்ணனுக்கு கடிதம் எழுதினேன். அவர் என்னுடன் நேர்முகத் தேர்வுக்கு வருவதாக பதில் தந்தார்.இந்த நேர்முகத் தேர்வு ஒரு வகையில் வினோதமானது. மூன்று நாட்கள் நடைபெறும். அதன் முடிவு மூன்றாம் நாள் மாலை அங்கேயே அறிவிக்கப்படும். மொத்தம் நூற்று இருபது பேர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பாதிப் பேர்களான அறுபது பேர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். அவர்களில் முப்பத்தைந்து ஆண்களும் இருபத்தைந்து பெண்களும் இருப்பார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் அன்றே […]
போன பிறவியில் நாயாய் நரியாய் சிங்கமாய் புலியாய் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. இந்தப் பிறவியில் இருக்காதே ஒரு காக்கையாய் நரியாய் பச்சோந்தியாய் கருநாகமாய் புழுவாய் – சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)
வழக்கறிஞர் கோ. மன்றவாணன் அண்மையில் பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் தோ்வு நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்துச் சுவர்களில் வரிசை வரிசையாக ஏறி நின்று மாணவர்களுக்கு விடைத்துணுக்குகள் வழங்கி உள்ளனர். அப்படி வழங்கியவா்கள் அந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பா்கள்தாம். அந்தக் காட்சியை ஊடகங்கள் ஒளிபரப்பின. நாளிதழ்கள் வெளியிட்டன. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது ஏதோ உயர்ந்தோங்கிய கட்டடத்துக்குப் பூச்சு வேலை நடைபெறுகிறது என எண்ணத் தோன்றும். இன்னும் […]
சிறகு இரவிச்சந்திரன் 0 சபாபதிக்கு கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும். மெலிதான சந்தன நிற ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும், வெள்ளை வெளேரென்ற வேட்டியும் அவரது அடையாளங்கள். ஒரு கோடிஸ்வரனுக்கு உண்டான தகுதியும் அவருக்கு இருந்தது. அவரது முயற்சியில் பல நிறுவனங்கள் தழைத்தன. அதனால் பல உயிர்கள் பிழைத்தன. அவரது ஆளுமையில் பல ஆலைகளும் சில சேலைகளும் அடக்கம். புதிய டொயட்டோ காரில் அவர் இப்போதெல்லாம் வலம் வருகிறார். கிழக்குக் கடற்கரைச்சாலைதான் அவருக்கு பிடித்தமான ரோந்து போகும் […]
ஆத்ம கீதங்கள் –22 ஆடவனுக்கு வேண்டியவை -2 [தொடர்ச்சி] [A Man’s Requirements] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உனது குரலால் என்னை நேசி, எனக்குத் திடீர் மயக்கம் அளிக்க; சிவக்கும் முகத்தோ டென்னை நேசி முணுக்கும் உணர்ச்சிக் கனப்பால் ! சிந்திக்கும் ஆன்மாவால் என்னை நேசி, காதற் பெருமூச்சு பிளக்க வேண்டும்; செம்மையாய் வாழும் உன் சிந்தனையில் பிறப்பையும், இறப்பையும் பின்னி நேசி ! உலகு உனக்கு […]
ஒரு வரலாற்றை முடித்துவிட்டு முற்றுப்புள்ளி அழுகிறது ‘எழுநூறு கோடியின் எழுச்சிமிகு தலைவன்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது உலகம் ஒரு சூரியனை ஒளித்துவிட்டது கிரகணம் தொலைநோக்குத் தலைவனை தொண்டனை தொலைத்து விட்டோம் நீ உறக்கம் தொலைத்த இரவுகளையும் சேர்த்தால் இருநூறு உன் ஆயுள் முகவரி தந்த உன் முகம் பார்க்கும் இறுதி நாள் கடந்து கொண்டிருக்கிறது சிங்கைத் தீவை இன்று கண்ணீர் சூழ்ந்திருக்கிறது மண்ணோடு மக்களையும் செதுக்கிய தலைவ! இனி எங்கள் சிங்கைக் கொடியே உன் சிரித்த முகம் அமீதாம்மாள்
சுப்ரபாரதிமணியன் அமைதி .. அமைதி .. கோர்ட் நடக்கிறது சுப்ரபாரதிமணியன் நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் மீது சாட்டப்பட்ட குற்றத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். குற்றம்: சாக்கடைசுத்தம் செய்யும்தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக. எப்படித்தூண்டினார் : அவர் மேடையில் பாடல்கள் பாடியது மூலமாக.உணர்ச்சிப் பாடல்கள்மூலமாக. இவ்வுலகம் வாழ வழியில்லாதது . சாகத்தான் லாயக்கு என்றக் கருத்தைச் சொன்னதால். அவருக்கு வருமானம்; குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது. அவர் கைது செய்யப்பட்ட நாளில் சொல்லிக்கொடுத்து: வண்ணத்துப்பூச்சிகள் பற்றி. வழக்கமான வழக்கறிஞர்கள் […]
Online Reservation: http://bit.ly/1xKDtpG Online Reservation: http://bit.ly/1xKDtpG RSVP for tickets by Wednesday, 1 April 2015. Collection of tickets will be at MediaCorp Reception on 4 April 2015 at 4pm. Please note: Basement Car park lots are subject to availability and car park charges will apply. Infants are strictly not allowed. No eating […]
முனைவர் எச். முகம்மது சலீம், சிங்கப்பூர் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமிடையே உருவான ஆக்கபூர்வமான அரச தந்திர உறவுகளின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நிகழ்ந்துவருகின்றன. இருநாட்டு அரச தந்திர உறவின் பன்முகத்தன்மையினை பிரதிபலிப்பதுபோல இருநாட்டு இலக்கியப்படைப்பாளிகளின் பங்களிப்பும் இந்நிகழ்வுகளில் கவனம் பெற்றன. இதன் தொடர்பில் கடந்த பெப்ருவரி 14-22 தேதிகளில் புது டில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகச் சந்தை 2015ல் சிங்கப்பூர் நூற்கள் சில வெளியீடு கண்டன. இந்நிகழ்வில் சிங்கப்பூர் தமிழிலக்கியப் படைப்பாளிகளின் சார்பில் மூத்த […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ” பட்டாம்பூச்சிகளின் சாபம் ” என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் திருச்சிக் கவிஞரின் கவிதைகள் அழகான மொழி நடையில் அமைந்தவை. இவரது கவிதைகள் பற்றி இவர் தன் முன்னுரையில் தரும் விளக்கம் ஒன்றைக் காணலாம். ” வெளிப்புற அத்துகளால் உந்தப்பட்ட சமூகம் ஒன்றில் துடிக்கும் கட்டுப்படாத பிரக்ஞை ஒன்று தன் உணர்வுகளாலேயே எப்படி வன்மையாய்த் தாக்கப்படுகிறது என்பதன் மொழிக் குறியீடாகவும் உள்ளன என் கவிதைகள் ” மேலும் ” உணர்வின் புறச்சுற்றுக் சுவர்களில் மோதி […]