ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி http://www.biography.com/people/marie-curie-9263538/videos [Biography] http://www.youtube.com/watch?v=3KmJsKuJws4 [Biography] http://www.youtube.com/watch?v=P9MxLAvzEAg [Marie Curie Movie] (1867 – 1934) சி. ஜெயபாரதன்,B.E.(Hons), P.Eng.(Nuclear) Canada “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி ! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது […]
எம்.எம். மன்ஸுர் – மாவனெல்ல 2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது. இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் […]
– கே.எஸ்.சுதாகர் – திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும். கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான். ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளிகள். நான் தொழிற்சாலையில் அதி முக்கிய ஒரு சடப்பொருள் – கட்டில். “என்ன நடந்தது சுந்தர்? என்ன நடந்தது?” விழுந்து கிடந்தபடியே ராமநாதன் கத்தினான். “ஏதோ ‘றோ மில்லு’க்குள்ளை வெடிச்சிருக்க வேணும்!” இன்னமும் […]
செம்மல் இளங்கோவன் ராயிக்களி கம்புக்களி நாந்திங்க வேணுமின்னு ராப்பகலா கண்முழிச்சு திருகுக்கல்ல திருப்பித் திருப்பி பருப்பரச்சா பாவிமக பொடவைஎல்லாம் பொத்தலோடு ராவெல்லாந் தூங்காம மகன் எனக்கு கத சொல்வா விட்ட கொட்டாயி வத்திப் போயி அசந்திருப்பா வீல்னு கத்தி வெடுக்னு முழிச்சிருவேன் அள்ளி என்னை அணைச்சுக்கிட்டு அப்புறமும் முழுச்சிருப்பா நான்தூங்க உழைப்பெல்லாம் கொட்டிப்புட்டு களைப்போடு கண்ணயர்வா-ஆனாலும் வுடமாட்டேன் மணிக்கணக்கா கத கேப்பேன் இருந்தாலும் அலுக்காம கத சொல்வா ஒரு நாலு கத சொல்லாம சொகமில்லாம படுத்திருந்தா… சோலப்பாட்டிக்கு […]
காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால் அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால் முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது. சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால் பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது மானின் விழிகளைக்கேட்கலாமென்றால் அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடைக்கிறது உன் மனத்தைக் கேட்கலாமென்றால் அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கிறது – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
கணினியில் தமிழ் பரப்புவதை கடந்த 13 ஆண்டுகளாகச் செய்து வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது ஆண்டு விழாவை துபாய் பெண்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. தமிழர் பாரம்பரியத்தோடு மன்றத்தின் உறுப்பினர்கள் வேட்டி அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை மிகக் குறித்த நேரத்தில் துவங்கினர். அமைப்பின் பொருளாளர் ஃபாரூக் அலியாரின் திரைப்பாடலோடு தொடர்ந்த நிகழ்வில் நிவேதிதா குழுவினரின் நவீன மேற்கத்திய அமைப்பில் உருவான சல்சா மற்றும் டான்கோ கலவை நடனமும் […]
“விவசாயிகள் போராட்டமா? வளர்ச்சிக்கு எதிரானதது”, என்றொரு கண்ணோட்டம் திறந்த வீட்டிற்குள் சுண்டெலி புகுதல் போல மெதுவாக நம் மனதுகளில் ஏற்படத் துவங்கியுள்ளது. அவ்வெண்ணம், ‘எது வளர்ச்சி?’ என்ற புரிதலுக்குள் நம் சிந்தனை செல்லாதிருப்பதன் விளைவாக ஏற்படுவது. நாகரிகம் உருவானதற்கு முன்பு உருவானது மனித இனம். அவ்வினம், வெற்றிகரமாக அடுத்த நூற்றாண்டிற்குள் ஆரோக்கியமாக காலடி எடுத்து வைக்க மிகவும் தேவையான ஒன்று விவசாயமும், உணவும். நாகரிகம் என்பது, மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்தவே. ஒருவனுக்கு உணவே இல்லை என்ற நிலை […]
எஸ்.எம்.ஏ.ராம் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. ஒரு வழி மூடினால் இன்னொன்று திறந்து கொள்ளும் என்று அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபணமாகிவிட்டது. எஞ்சியிருப்பவை வெளிச்சத்துக்கும் காற்றுக்குமான சிறு சிறு துளைகள் மட்டுமே. அதனால் தானோ என்னமோ இன்னும் சுவாசம் மட்டும் நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருக்கிறது..
இரா ஜெயானந்தன் மன்னர் அச்சுதப்பா நாய்க்கர் வயிற்று வலியால் அவதிப்படும் செய்தி, தஞ்சை மாநாகரெங்கும் ஒரே செய்தியாகப் பேசப்பட்டது. மக்களும் துயரத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். ராஜ வைத்தியர்கள், பல்வேறு மூலிகைச் சாறுகளால். தினமும் வெவ்வேறு வகையான வைத்தியங்களை செய்து வந்தனர். தஞ்சையின் அனைத்துக் கோவில்களில் இருந்தும், பிரசாதங்கள் வந்த வண்ணம் இருந்தன். முக்கியமாக பெரியக் கோவில் , புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசாதங்கள், மன்னனுக்கு அளிக்கப்பட்டது. அரசாங்க கோப்புகள் முடங்கி கிடந்தன. வேற்று நாட்டு […]
ஏ.நஸ்புள்ளாஹ் மழை மனசு நேற்று முழுவதும் சூரியன் சூடேற்றிப் போடவே குளிரான பழைய நாள் பற்றியதான வண்ணத்துப் பூச்சி மனசு படபடப்பாயிருந்தது சில நேரங்களில் மழை நாட்களில் சும்மா வாய்க்கு வந்தபடி காலத்தை திட்டி திர்த்தது பற்றி இப்போது உடம்பு அம்மணமாக வெட்கப்பட்டுக் கொள்கிறது யன்னலருகே நின்று குளிரான பல நாட்களில் காலைப் பனியை மிக அழகாக ரசித்ததுண்டு மனசு பூரித்துப்போக விழுந்து கிடக்கும் ஒரு சூரியன் நாளைக்கூட விரும்பும்படியான ஒப்புதல் அளிக்கவில்லை மனசு. […]