இரா. கலையரசி, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசினர் கலைக்கல்லு]hp (தன்னாட்சி) , கும்பகோணம். முன்னுரை ் வானொலி, தொலைக்காட்சி, இதழ் என்று பல்லு]டகங்களிலும் நிகழ்ச்சியை வழங்கியவர் தென்கச்சியார். இவர் மக்களின் நல் வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகளைக் கூறியுள்ளார். இவற்றில் மக்களின் உடலுக்கு நலம் தரக்கூடிய , பயனுள்ள பல மருத்துவச் செய்திகளையும் வழங்கியுள்ளார் என்பது வியத்தற்குறியச் செய்தியாகும். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்’ என்பார்கள் . அதுபோல உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் மக்;களால் […]
புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துச் சென்று புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்தலில் என்ன நன்மையோ, தீமையோ ஆனால் நிறைய பெண் படைப்பாளிகளையும் அது உருவாக்கி இருக்கிறது. தங்களோடு எடுத்து வர முடியாத தாய் மண்ணை தொட்டுணர விரும்பும் ஆசை ஒவ்வொருவர் எழுத்திலும் வெளியாகிறது. பூவரசி காலாண்டிதழ் அந்த மக்களின் புலம் பெயர்தலுக்குக்கும் பின்னான வாழ்வை, போருக்குப் பின்னான ஈழத்தைப் பேசுகிறது. ஈழவாணியின் பூவரசி புனைவும் நிஜமும் என்ற இணையம் நடத்தி வருகிறார். அது இப்போது […]
பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ‘நாம் எல்லோரும் மிகவும் சிக்கலான, புரிந்து கொள்ள முடியாத இந்தப் பூகோளத்தில் புகுத்தப் பட்டிருக் கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒருசிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக் கொண்டால், சூழ்வெளிக்கு என்ன என்ன தீங்கெல்லாம் நாம் விளைவிக்கிறோமோ, அவை யாவும் நம்மீதே மீண்டும் விழுகின்றன என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது! ஏனென்றால் நாம் சூழ்மண்டலத்தின் இறுகிய […]
மாணவர்களின் பெயர், எந்த மாநிலம், அவர்களுடைய சொந்த முகவரி, தொலைபேசி எண்கள், எந்த பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கின்றனரா, வெளியில் தங்கியிருக்கின்றனரா, அப்படி வெளியில் தங்கும் மாணவர்கள் என்றால், அவர்களுடைய செயல்பாடுகள் என்னென்ன, அவர்கள், யார், யாரை சந்திக்கின்றனர், கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரிக்க உத்தரவு உள்ளது. விவரங்களுடன், மாணவர்களின் புகைப்படங்களும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கென புகைப்படம் எடுத்தால், மாணவர்கள் மத்தியில் பிரச்னை ஏற்படும் […]
எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு சுழலில் உழலும் போது வரும் தற்காலிகச் சலிப்பே எஞ்சியதே ஒழிய ஆன்மீகத்தில் நிலைப்பது அதைத் தொடர்வது வசப் படவே இல்லை. ஜென் பற்றி ஒரு புரிதல் நிகழும் என்று வாசித்தால் அவர்கள் என் விரலைப் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நாடு, வீடு என்று அனைத்தையும் ஆட்டிப் படைப்பது பொருளாதாரம் ஆகும். பொருள் ஆதாரத்தில் தான் நாடும், வீடும உலகமும் நிலை கொண்டுள்ளன. இப்பொருளாதாரத்திற்கு அடித்தளமாகத் திகழ்வதில் ஒன்று பணம். பணத்திற்கு காசு, நாணயம் என்று வேறுவேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இப்பணத்திற்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. பணம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் பண்டமாற்று வணிகமே நடந்துவந்தது. மக்கள் தங்களிடம் உள்ள […]
மலையாள மூலம் – ஆர். உன்னி ஆங்கில வழி தமிழில்- எஸ்ஸார்சி பெருங்கடற்கரையா, பாலைவனமா, களர்நிலமா, எங்கிருந்தால்தான் என்ன நடத்தல் மட்டுமே தனிச் சுகம்-தொரயூ அவனிடம் ஒரு சாவி ஒரு கிளிஞ்சல் பச்சையாய் இலையொன்று இருந்தது. அவர்களுக்குச்சோதனையில் அவனிடமிருந்து வெறெதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் அவனை மாறி மாறித்தான் சோதனை போட்டார்கள். அவனுடைய நரைத்த தலை முடி முகம் தொங்கும் தாடி, வாயொடு குதத்திறப்பு எல்லாமே சோதனைக்குள்ளானது. இதோ தெரிகிறதே காவல் நிலையம் அதன் உள்ளே இருக்கும் ஒரு […]
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்ப்பொருள் காண்பது அறிவு. .._ நீச்சல்குளம் அருகில் சென்றவள் உட்கார விரும்பவில்லை. சிறிது தூரமாவது நடக்க எண்ணினேன். நீச்சல் குளக் கூடாரத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றேன். பெரிய காடுபோல் உயர்ந்து வளர்ந்த மரங்கள் ! பச்சைக் கம்பளமாய்ப் புல்வெளி!. செம்பருத்திச் செடிகள் . அதன் பக்கத்திலேயே மல்லிகைப் பந்தல்! மல்லிகையின் மணம் மயக்கியது. இயற்கையின் எழில் எங்கும் கொட்டிக் கிடந்த்து. நடந்தது போதுமென குளத்திற்குத் திரும்பி ஓர் நாற்காலியில் […]
உலகத்தின் உயிர்ப்புக்களில் எழுப்பப் பட்டு விடுகின்ற போலிகளுக்கு நிஜங்கள் தோற்றுப் போகும் மனங்களெல்லாம் நிச்சயம் பிணம்தான். புத்தி மந்தமாகிப் போய் சோகமே உருவாகி எதுமேயின்றி வெறுமைக்குள் வறுமைப் படுத்தப் பட்டு கல்வியெல்லாம் அகற்றப்படும் அநத நாள் வருமே அது பற்றியதான பயம் எனக்கிருக்கிறது. “கொலைகள் மலிந்த காலம் வரும்” அப்போது இவ்வுலகம் மாறும். வாழ்வியலின் பிணைப்புக்குள் உருட்டப் பட்டு சின்னக் கைகளுக்குள் சிக்கி விடுகின்ற பொழுதுகள் பற்றியதான அச்சம் என்னை மேலும் அச்சப்படுத்துகிறது. அந்த நாள் வருடம் […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]