29. – காலமேயிருந்து ஒருவாய் நீர் கூட அருந்தாமலிருந்தால் எப்படி. அரன்மணைக்குப்போகும் உத்தேசமில்லையா? – இல்லை. நந்தகோபால் பிள்ளை இல்லம். பிள்ளை கூடத்திலிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். ஊஞ்சல் அசைவுக்கு இடம்விட்டு வாசலையொட்டி தூணில் சாய்ந்திருந்தாள் கோவிந்தம்மாள்- அவர் பாரியாள். அதிகாலை வெயில் வீட்டில் பாதி வாசலை விழுங்கியிருந்தது. அண்டாவிலிருந்த தண்ணீரில் நீலவானத்தின் துண்டொன்று கிடந்தது. வாசலில் ஈரம் உலராத தரையில் நாற்றுபாவியதுபோல மரகதப்பச்சையில் பாசி. கூரையிலிருந்து ஊசலாடிய நூலாம்படையில் சிலந்தியொன்று ஊசலாடியது. அரசாங்கத்தின் பிரதானியென்றாலும் அவர்கள் இடையர்குலமென்பதால் […]
ஒரு ஊரில் மித்ரசர்மா என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் விடாமுயற்சியோடு அக்கினிஹோத்திரங்களைச் செய்துகொண்டு இருந்துவந்தான். தை மாதத்தில் ஒரு நாள். இளங்காற்று வீசியது. வானத்தை மேகங்கள் மறைத்தன. மழை சிறு தூறலாகப் பெய்தது. அந்த வேளையில் பசுதானம் கேட்பதற்காக அந்தப் பிராம்மணன் வேறொரு கிராமத்துக்குச் சென்றான். அங்கே வேறு ஒரு பிராம்மணனிடம், ‘’பிராம்மணா! வரும் அமாவாசையன்றைக்கு நான் யாகம் செய்யப் போகிறேன். அதற்கு ஒரு பசுவை எனக்குக் கொடு!’’ என்றான். சாஸ்திரம் சொல்லியபடி அவன் மித்ரசர்மாவுக்கு ஒரு […]
ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள் வரலாற்றில் ஹிட்லர் , முசோலினி, ஸ்டாலின், லெனின், காஸ்ட்ரோ, மாசேதுங் , அயோதல்லா கோமனி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலை நாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஓன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது. மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது. நான்கு , தொழிற்சங்கங்கள் போன்ற […]
அந்நிய ஆதிக்கத்தின் அடிமைத் தளையைக் களைய, வீறு கொண்டு எழுந்த இந்திய தேசத் தியாகிகளின் வரலாற்றில் , சுதந்திரப் போராளி திருமதி சுசேதா கிருபளானிக்கும் மிக முக்கிய இடமுண்டு! ஒரு இந்திய மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெரும் பேற்றையும் பெற்றவர் சுசேதா அவர்கள். வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.என்.மஜீம்தார் என்பவருக்கு 1906ஆம் ஆண்டு , ஹரியானா மாநிலம், அம்பாலா எனும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை அரசாங்க மருத்துவராகவும், தேசியவாதியாகவும் இருந்தவர். தில்லியிலுள்ள […]
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி -] அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ‘தோர்ன்கிளிவ் பார்க்’… ‘டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில் அமைந்திருந்த பகுதி. ‘ஷாப்பிங் மால்’ , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், ‘டொராண்டோ டவுண் டவு’னிற்கும் அருகில் அமைந்திருந்த […]
வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் {அன்பாதவன்} { மூன்றாம் பகுதி } ஆசிரியப் பணியில் மறக்கஇயலா சம்பவங்கள் —————? முப்பத்தெட்டாண்டு பணி குறித்து நிறையவே பேச வேண்டு ம். இடைநிலை ஆசிரியனா கப் பணியேற்ற எனக்கு உடனேயே பள்ளியில் இலக்கிய மன்றத் தலைவர் பொறுப்பும் ஆசிரியர் இயக்கப் பொறுப்பும் கிடைத்தன. ஆசிரியர் இயக்கத்தில் கொண்ட ஈடுபாடு மாநில இயக்கப் பொறுப்பாளர்கள் என்னை அறியவும் மதுரை, கோவை, சென்னை,ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாநில மாநாடுகளுக்கு மிதிவண்டியில் செல்லவும் வழிவகுத்தது. […]
நாம் துவங்கிய தருணமதில் திட்டம் ஏதும் தீட்டாமலே இச்சை கொண்டேன் உம்மீது ஆயினும் காதல் இல்லை உம்மீது என்பதே சத்தியம். உமக்குள்ளே ஊடுறுவி நுழைந்துவிட்டேன் இக்கணம். எம் மனமேடையிலிருந்து முற்றிலும் சரிந்தேவிட்டானவன். உம்மைத்தவிர யாதொன்றும் எம் சிந்தையுள் கொண்டிலேம். உம்மைப்பற்றிய எம்மொழியே எம்மை கலங்கச்செய்கிறது. பொய்மை ஏதுமில்லாத வாய்மையே அனைத்தும் உய்த்துணராத ஒப்புதலாகக் கொண்டு விலகி விடாதே ஆம், ஆம் நீர் எம்மோடே இருக்க, வேண்டி நிற்கிறேன் யான் துப்பு ஒன்றும் உமக்குத் தப்பாமல் தருகிறேன் உரைப்பேன் […]
(முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத […]
தற்போது ‘டொராண்டோ’ வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் ‘கனவுச்சிறை’ தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று – மே 17, 2012 – கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் […]
இப்போதெல்லாம் டிஜிட்டலில் எடுப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. வழக்கு எண்ணை ரெட் 1ல் எடுத்ததாக வேதம் புதிது கண்ணன் சொன்னார். பிலிம்மில் எடுப்பதில் 70 விழுக்காடு ரிசல்ட்தான் வரும் என்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 70க்கு 100 என்றால் கசக்குமா என்ன? கருப்பட்டியைக் கேட்பரீஸ் ரேப்பரில் கொடுத்த கதைதான். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ராட்டினம். தூத்துக்குடி களம். கயிறு விற்பனைக்கடையில் நாயகன். நாயகி துறைமுக அதிகாரியின் மகள். அவளது மாமா பப்ளிக் பிராசிகுயூட்டர். நாயகன் அண்ணன் உள்ளூர் கட்சித் […]