“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++ இசை தனித்துவ மொழி +++++++++++ இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது அது உயிரூட்டும் உணர்வு ! இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது அதுவே அதன் நெஞ்சு ! […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஊழியம், உணவு, தங்குமிடம், உடுப்பு இவைதான் மனிதத் தேவைகள் – பைபிள் இல்லை.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமைப் பற்றி ஒருவர் போதிப்பதை விட்டுவிட்டு அதை ஒழிக்க முற்பட வேண்டும்.” […]
1.மச்சம் இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம் புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் புதிய விரல்களை நாடியவாறு… 2. பசி தச்சன் கை உளி செதுக்குவதும் பிச்சைப்பாத்திரத்தை நிரப்பக்கூடும் அன்னதானங்களால் ஆகாதவாறு ஒன்றாகவும் பலவாகவும் ஆகிய காதலே போல் அவரவர் பசியும் அவரவருக்கேயானதாக. 3.உயிர் வெல்லம்; அல்ல- வெண்கலம்; இன்னும்- வெங்காயம்; […]
லலிதா, அலுப்போடு கைப்பையை தூக்கி மேஜையில் போட்டு, “உஸ், அப்பாடா, என்ன வெயில்” எனச் சொன்னவாறு சேரில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையிலிருந்து கல்பனா, “என்ன, போன வேலையெல்லாம் முடிச்சாச்சா?” எனக் கேட்டாள். “ம், பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டேன்! பர்மிஷன் நேரம் முடியறத்துக்குள்ள ஆஃபீஸ் வரணுமேன்னு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்தேன், யாராச்சும் என்னைத் தேடினாங்களா?” என வினவினாள். “ஆட்டோவில் எப்படி ஓடி வந்தே?” என்று கிண்டலடித்த கல்பனா, ‘மானேஜர் இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கார், இன்னும் […]
‘கோவலன் கொலையுண்டான்’ செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க நிலவு பொழிந்தாலும் -தேச இருட்டுக்கு அஞ்சி காரைபெயர்ந்த குடிலுக்குள்-அவள் கந்தல் சாக்கிலே சுருண்டுகிடந்தாள். கண்முன் கணவனின் சடலமிருந்தும் அடையாளம் காட்டி அழமுடியாது உணர்வுகளைப் புதைத்திட்ட நேற்றைய அவலத்தில் நொறுங்கியிருந்தாள். * * * * * * * கண்ணகி தேவிக்கு கண்கள் சிவந்தன கூந்தல் அவிழ்ந்து’காற்றில் அலைந்தது முகத்தினில் ரௌத்திரம் தாண்டவம் […]
அந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன் குடும்பம் தன்னைக் கைவிட்ட கொடுமை; எங்கே போகப் போகிறோம் என்பது தெரியாத எதிர்கால இருள். பயம்; சோகம்! கொஞ்ச தூரத்தில்தான் அவளுடைய இடைநிலைப் பள்ளி இருந்தது. அங்கே இன்றைக்கு அவள் வகுப்புக்கு தமிழாசிரியர் ட்யூஷன் வகுப்பு நடத்துகிறார். அந்த சாக்கில்தான் செல்வி […]
* வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு ஒற்றைக் காலில் நி ற் கி ற து.. நீ சுருள் பிரிக்கும் உன் கைத் தூண்டில் முனையில் ஒரு எழுத்து நெளிகிறதே மீன் பிடிக்கவா..? தூ..! கொக்கை விரட்டு கொக்கை விரட்டு..
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால் உருவாக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த உண்மையின் பின்புலத்தில் பார்க்கும்போது குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்கு உள்ள பெரும்பங்கு புலனாகும். சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள் இல்லாத நிலை ஒரு பக்கம். அதே […]
சேதுபதி சேதுகபிலன் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன. மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிறது. சென்னை நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ந. சேஷாத்திரி அவர்கள் தன் தாயார் ஸ்ரீ பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை […]
தினம் தினம் தேடப்படும் நினைவுகளின் வழியே ஊடுருவிசெல்லும் பார்வைகள் அவளுடயதாகின் நேரங்கள் பார்வைக்கு சற்று அப்பாற்பட்டவையாக தோன்றுகின்றன. கரையும் நேரங்களின் கடைசி துளியின் ஓரத்தில் தேடப்படும் அவளின் முகங்கள் ஓவியதீட்டை போலவே இருக்கின்றன கனவா எனும் சொல்லை கூட யோசிக்க நேரமில்லாமல் அவளை பார்கிறேன் மெய்மறப்பது என்பது இதுதானோ., அவள் அருகில் இருப்பதாக பெறப்படும் கற்பனையே அன்றி இது வேறு என்னவாக இருக்ககூடும். இருப்பினும் பார்வைகள் அடிக்கடி அவளை நோக்கியே செல்லும் இது விசித்திரமான நோயாக இருக்க கூடாதென்பதற்காகவே […]