தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நிர்மலா எல்லா வார, மாதப் பத்திரிகைகளை வாங்கி வரச் செய்வாள். அதுதான் அவளுடைய பொழுதுபோக்கு. மதுரையிலிருந்து வெளிவரும் ஒரு மாதப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தவள் ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டாள். அதில் பரமஹம்சாவின் போட்டோ இருந்தது. பரமஹம்சா வருடத்திற்கு ஒருமுறையோ இரு முறையோ வருவான். வரும் பொழுதெல்லாம் அவளுக்கு தைரியமளிக்கும் வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் போவான். சந்திரனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வான். தம்பதிகளுக்கு […]
நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள், தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை விதைதுவிடுவதோடு அது விரைவாக எதிர்வினையையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. ‘தான்’ என்ற அகங்காரம் என்று இதைத்தான் சொல்கிறார்களோ? எது எப்படியோ, மாலதிக்கு எல்லா விசயங்களிலும் தானே முடிவெடுக்கும் வழமை ஊறிவிட்டது. கேள்வி கேட்கும் நிலையில் இருந்த அக்காவும் இன்று இல்லை, சின்னம்மாவிடம் பகிர்தல் மட்டுமே சாத்தியம். பரமு தன்னைவிட இளையவள். இந்த நிலையில் தான் செய்வது […]
இன்னிக்காச்சும் மருந்து வாங்கீட்டு வந்தியாடா சின்ராசு ? ஜுரத்தில் கிடந்த ஆத்தா ஈனமான குரலில், இத்தனை நேரம் மகனின் வரவுக்காகவே காத்திருந்தவளாக , மகன் வீட்டுக்குள்ளே நுழைந்து செருப்பைக் கழட்டும் சத்தம் காதில் கேட்டதும், கேட்கிறாள். அடச்சே….என்ன மோசமான தலஎளுத்து என்னுது…ஒரு சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து மாத்திரை வாங்கியாரக் கூட துட்டு இல்லாத சென்மம்…மானங்கெட்ட பொளப்பு பாக்கறேன்..பேரு பெத்த பேரு தாக நீலு லேதுன்னு….பேரு தான் வீட்டு புரோக்கர்.. தெருத் தெருவா அலைஞ்சு வீடு பாத்துத் தர […]
குன்றக்குடியில் கி பி எட்டாம் நூற்றாண்டில் முதலாம் பாண்டியன் அமைத்த ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு. அதன் பக்கவாட்டு மலைப்பகுதிக்குச் சென்றால் அங்கே சமணர்கள் அமைத்த படுகைகள் இருக்கின்றன.. அவற்றைப் பார்த்திருக்கின்றீர்களா. அடுத்தமுறை சென்றால் இவை இரண்டையும் தவற விடாதீர்கள். காரைக்குடியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது குன்றக்குடி. குன்றக்குடிக்கு எப்போது சென்றாலும் மலைமேலிருக்கும் சண்முகநாதனை வணங்கி வருவதுடன் அன்றைய ஆலயதரிசனம் முடிந்துவிடும். ஆனால் இந்த முறை சென்ற […]
* 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை இவ்வாண்டின் சிறந்த நாவலாசிரியருக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் “ இரங்கம்மாள் விருது “ பெற்ற “ தமிழ் மகனின் படைப்புலகம் “ : ஆய்வரங்கம் பங்கு பெறுவோர்: கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நித்திலன், சி.ஆர். ரவீந்திரன், எம்.கோபாலகிருஸ்ணன், இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு வருக… —————————————————————————————————————— *தமிழ் மகனின் நூல்கள்: 1.கவிதை […]
“பல்லேலக்கா பல்லேலக்கா , சேலத்துக்கா மாதிரிக்கா” என்று அதிரடி பாடலோடு தொடங்குகிறது படம்.ஹிஹி அதே மாதிரி பாட்டோட “துப்பாக்கி” சுடத்துவங்குகிறதுன்னு சொல்லவந்தேன் அநாவசியக்காட்சிகள் இல்லை,முக்கியமாக ஏகத்துக்கு ஆச்சரியம் Hero Worship இல்லை. Cliches இல்லை,Punch Dialogues இல்லை, திணிக்கப்பட்ட பாடல் காட்சிகளோ பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளோ இல்லை..என்ன இது விஜய் படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா என்று எனக்கே ஆச்சரியம். முருகதாஸுக்குத்தான் நன்றி சொல்லணும். ‘கில்லி’க்குப்பிறகு , சொல்லிக்கொள்ளுமாறு வெற்றி பெற்றது ‘போக்கிரி’ தவிர வேறு எந்தப்படமும் […]
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான் பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன் எமக்கென இருக்கிறது நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று – தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
சிலர் தங்கள் கடிதங்களில், “நீங்கள் எப்படி சார் ‘பிரம்மோபதேச’த்தையும் எழுதி விட்டு, ‘உன்னைப்போல் ஒருவ’னையும் எழுத முடிகிறது?” என்று கேட்டிருந்தனர். எல்லா மட்டத்திலும் (standards) உயர்த தரம்(levels) தாழ்ந்த தரம், வளர்ச்சி வீழ்ச்சி, ஆக்கம் அழிவு, என்ற இரண்டு பகுதிகள் உண்டு. எந்த மட்டத்திலிருந்தாலும், (இந்த மட்டங்களின் இடையே எவ்வளவு பேதங்களிருப்பினும்) வளர்ச்சி ஆக்கம் ஆகிய குணப்பண்புகள் உடைய உயர்ந்த தரம் அனைத்தும் ஒரினமாகும். அதே போல் வீழ்ச்சி அழிவு ஆகிய பண்புகள் படைத்த […]
(கட்டுரை 88) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா [ http://www.space.com/13180-titan-surprisingly-earth-surface-revealed-color.html ] சனிக்கோளின் சந்திரன்களில் பூதச் சவ்வுருண்டை போன்ற டிடான் பூமியை ஒத்தது ! தடம் வைத்தது ஹியூஜென்ஸ் தளவுளவி டிடானில் ! சூழ்வெளி வாயு, ஒளிந்திருக்கும் ஆழ்கடல் பனிச் சிகரம் கொண்டது ! சனிக்கோளின் மற்ற சந்திரன் என்செலாடஸில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்புலி போல் வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]