மாநகரத்து மைய்யமாய்ப்பார்த்து அந்த பிரம்மாண்ட மண்டபத்தைத்தான் இயக்கத்துக்காரர்கள் த்தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு எண்பது வயது நிறைந்தமைக்கு ஒரு விழா ஏற்பாடு. அவர் என்றால் அது யார் என்று கேட்பீர்கள். நான் பெயர் சொல்வதாயில்லை அந்த அவர்.தான் அது . ‘ எனக்கு எண்பது நிறைவுக்கு வருகிறது ஒரு விழா எல்லாம் ஏற்பாடு செய்யுங்கள்’ அவரா கேட்டார் என்றால் அதுதான் இல்லவே இல்லை. பின் எதற்கு இந்த விழா. அவர் சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்துக்குச் சொந்தக் கட்டிடம் எழுப்பும் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தனியாக, அறியாமல் நீ தடாகத்தில் அமர்ந்து காரண மின்றித் ஒவ்வொன் றாய்க் தாமரை இதழைக் கொய்து எடுத்தாய் ! சில வேளை, அந்தோ நீ செய்ய மறந்தாய் ! அப்போது நான் தாமரைப் பூ பறித்து உன் பாதம் சமர்ப்பித்தேன் காலைப் பொழுதில் ஏது காரண மின்றி ! அவ்விடம் விட்டு நான் அகன்ற பின் அதை எடுத்துக் கொண்டாய் அறியாமலே நீ ! […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
நேற்கொழு தாசன் இலை உதிர்த்திய காற்றில் பரவிக்கொண்டிருந்தது கிளையின் ஓலம், நுண்ணிய அந்த ஓசையால் உருகி வழியதொடங்கியது உணர்வுகள்…… வர்ணிப்புகளை எல்லாம் தோற்கடிக்கும் எரிமலைகுழம்பாய். அடங்காதவொரு பசியுடன் உறங்கிய மனமிருகம் _அந்த பேரிரைச்சலால் வெகுண்டு உன்னத்தொடங்கியது மனச்சாட்சியை, நாக்கின் வறட்சி மீது படிந்த மனச்சாட்சியின் அதிர்வுகள் ஓய்ந்துபோக மறுத்து ஆரோகண சுதியடைந்தன…….. மௌன விரிதலொன்றினை உருவாக்கி இடம்மாறிக்கொண்டது ஓலம் …………. எங்கோ தூசிஅடர்ந்த மூலையொன்றில் வௌவால் சிறகடிக்கும் ஓசை படரத்தொடங்கியது ————————– ஆக்கம் நேற்கொழு தாசன் வல்வை
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை E. Mail: Malar.sethu@gmail.com இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர். இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார். […]
எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது கோயில் கோபுரங்களில் குருவிகள் இல்லை கைபேசிக்கான கோபுரங்கள் ஏகப்பட்டவை வந்து விட்டன எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது சிறுவர்கள் தெருவில் விளையாடுவதில்லை கணிப்பொறி தொலைக்காட்சி திரைகளின் முன்னே சிறுவர்கள் எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது வரப்புக்களின் இடையே பயிர்கள் இல்லை வீட்டுமனைக்கான விளம்பரப் பலகைகள் எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது நட்பு உறவுக்குள் கைமாத்து கொடுப்பதில்லை அடகுக் கடைகளில் வரிசையில் மக்கள் எங்கள் ஊர் […]
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை மனிதனின் பயணம் இருட்டறையில் நுழைந்து ,கருவாய் வளர்ந்து , வெளிச்சத்திற்கு வந்து, உலக வாழ்க்கையில் பல பருவங்களைக் கடந்து இறுதியில் மீண்டும் மண்ணுக்குள் இருட்டறையில் புகவும் பயணம் முடிகின்றது. குழந்தைப் பருவம் தாயின் அரவணைப்பிலும் மற்ற பெரியோர்களின் அன்பிலும் பாதுகாப்பாக வளர்கின்றது.. இறகு முளைக்கவும் பறந்து செல்லும் பறவையைப் போல் கற்ற பின் உழைக்கத் தொடங்கி தனக்கென்று ஒரு குடும்ப வளையத்தில் புகுந்து கொள்கின்றான். அன்பு வட்டமாயினும் […]
நட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில் சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது […]
தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு வேளை கதையே தாவித் தாவி தலைகீழாகத் தொங்குவதால் வைத்திருப்பாய்ங்களோ? காசிராமன் என்கிற வவ்வால் ( அறிமுகம் ராகுல் ) கேபிள் டிவி கனெக்ஷன் கொடுக்கும் பையன். குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள். இவன் மட்டும் படிக்காத மேதை. அப்பா அனந்தராமனின் ( நரேன் ) பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகும் கேரக்டர், வயசுப்பொண்ணு சௌம்யா ( உத்ரா உன்னி ) மேல் இண்ட்ரஸ்ட் ஆகிறான். நடுவில் திடீரென்று தாவி, சென்னை வருகிறான். ஏன்? […]