அந்த சமூகமன்றத்தின் சாதாரண உறுப்பினன் நான் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவனின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மூவாயிரம் திரட்டி முதியோர் இல்லத்திற்கு தரும் ஏற்பாடுகள் நடந்தன நினைவு நாள் அன்று தலைவர் நிதியளித்தார் பெற்றுக்கொண்டார் இல்ல நிர்வாகி நிகழ்ச்சி முடிந்தது அந்த நிர்வாகியை நெஞ்சோடு அணைத்து நிழற்படம் எடுத்தேன் ‘முதியோர் இல்ல நிதியளிப்பு விழாவில் நானும் அதன் நிர்வாகியும்’ என்ற வாசகத்துடன் நிழற்படத்தைப் பதிவிட்டேன் முகநூலில் அந்த நிதிதிரட்டில் எள்மூக்கு கூட என் பங்கில்லை ‘கொடை வாழ்க’ ‘கொற்றம் […]
முனைவா் பெ.கி. கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியா் தமிழ்த்துறை இசுலாமியக் கல்லூரி(தன்னாட்சி) வாணியம்பாடி 635 752 Pkgovindaraj1974@gmail.com ஆய்வுச்சாரம் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீா், தீ, ஆகாயம், காற்று ஆகியவை இயற்கை எனலாம். பெரியாழ்வார் மகள் கோதை நாச்சியார் திருமாலையை இயற்கையாய் கண்டு காதலித்து கரம்பிடித்தாள். “மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள்” என்று கோதையின் பாவைப் பாடலின் தொடக்கமே இயற்கையின் நலம் செறிந்த அழகுக் காட்சியை முன்வைக்கிறது. தன்னையொத்த பெண்களையெல்லாம் பாடலால் தட்டியெழுப்பும் சுடா்க்கொடி, விடியலின் பொலிவைப் பல கோணங்களில் […]
முனைவர் த. அமுதாகௌரவ விரிவுரையாளர்தமிழ்த்துறைமுத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி)வேலூர் – 2 damudha1976@gmail.com முன்னுரைசமூகத்தில் நிலவும் அவலங்களை அப்படியே படம்பிடித்துப் பாடுவதும் கவிதைதான். இருக்கும் இழிநிலை இல்லாமல் போவதற்குச் சரியான தீர்வுரைத்தும் மக்களைத் தட்;டியெழுப்பிப் பாடுவதும் கவிதைதான். கவிதை கவிஞனின் உள்ளத்திலிருந்து தன்னுணர்ச்சி வெளிப்பாடாக வரலாம். அவன் சார்ந்த சூழலின் தாக்கத்தால் வரலாம். நல்லன போற்றியும் அல்லன தூற்றியும் சமுதாயச் சிக்கல்களின் படப்பிடிப்பாகவும் மலரலாம். பொதுமக்களுடைய உள்ளங்களைக் கவர்ந்து அவர்களுடைய உணர்வுகளைத் தட்டி எழுப்பி அநீதிகளை இனங்கண்டு அவற்றை […]
இந்தியாவில் வாழ்ந்த (84-87) காலத்தில், காசி எனப்படும் வாரணாசிக்கு செல்வதற்கு எத்தனித்தேன். முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது அதுவும் ஒரு பகல், இரண்டு இரவுகள் மட்டுமே. காசி பற்றிய முதல் தெரிந்துகொண்டது, எழுவைதீவில் 5 -6 வயதான எனது இளம் பருவத்தில். எனது தந்தை , கங்கை நீர் என இந்தியாவில் இருந்து போத்தலில் கொண்டுவந்தபோது, அம்மாவால் அதில் சில துளிகளை எனது தலையில் வைக்கப்பட்டது. ஊரில் பலர் அந்த நீரை கையால் […]
நினைவுகளால் வருடி வருடிஇந்த தருணங்களை நான்உருட்டித்தள்ளுகிறேன்.அது எந்த வருடம்?எந்த தேதி?அது மட்டும் மங்கல் மூட்டம்.அவள் இதழ்கள்பிரியும்போது தான் தெரிந்ததுஇந்த பிரபஞ்சப்பிழம்புக்குஒரு வாசல் உண்டென்று. அவள் இமைகள் படபடத்த போது தான்தெரிந்ததுஇந்த வெறும் வறட்டுக்கடிகாரத் துடிப்புகளுக்குவண்ணங்கள் உண்டு என்றும்சிறகுகள் கொண்டு அவைஇந்தக்கடல்களை எல்லாம்வாரி இறைத்து விடும் என்றும். அது என்னபட்டும் படாத பார்வை என் மீது?அவள் மேகங்களை தூவி விடுவது போல்அல்லவா இருக்கிறது! சொர்க்கவாசல் பார்க்கப்போகிறேன்என்றுபெருமாள் கோயில்களில் அலை மோதும்.அம்மா கூட போவேன்அந்த அந்த சவ்வு மிட்டாய்க்குச்சிக்கும்கையில் சுற்றி […]
ஏன் இன்றைய செயல்களை வெறுக்குமென் தனிமை பழங்கால நினைவுகளை ஆரத் தழுவிக் கொள்வதேன்? **** நான் நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. மூச்சு முட்டும். மேடை மேல் ஏறிப் பேச மாட்டேன். வாய் குழறும். பரிசுகள் கிடைத்ததில்லை. மார்க்கெட்டிங் வராதென்று காலேஜிலேயே பி.காம்தான். நெருங்கிய நண்பர்கள் உண்டு. ஆனால் குழு என்றால் விரோதியாகி விடுவேன் என்கிறார்கள் நீங்கள் என்னை யாரையும் வானளாவப் புகழ்ந்தோ, பரிசுகள் வாங்கியோ , பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவுடனோ பார்த்திருக்க முடியாது. நான் நீரிலிருந்து தள்ளி வைக்கப்பட வேண்டிய மீன். அல்லது இறகுகளை […]
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு) கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் சொல்வதா? தோன்றிய கதையினால் அழகு பிறந்ததா…? அல்லது அழகியலைச் சொல்வதற்காக கதையை உருவாக்கினாரா? என்னதான் கலாரசனையோடு, காதல் மொழியை, காம உணர்வுகளை விவரித்தாலும்…. ஒழுக்க சீலங்களை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்திற்கும் அழியா கலாசார சம்பிரதாயங்களை இகழ்வதில்லை. மனித மேன்மைக்கு உதவும் நல்லியல்புகளைப் புறந்தள்ளுவதில்லை. மனித உணர்ச்சிகளின்பாற்பட்ட தடுமாற்றங்களுக்காக, அடிப்படை […]
கடல்புத்திரன் அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் சோலைத் தன்மைக் கொன்டது.குடியிருப்புகள் நெருக்கமான இடங்களில்,வளவுகளும் சுருங்கியதில் பனை மரங்களைக் குறைத்து அழகையும் குறைத்து விட்டுருக்கிறார்கள்.வெட்டி துலா, வீட்டு கூரைகளிற்கு பயன்படுத்தி, பதிலுக்கு தென்னை நடப்பட்டிருக்கின்றன.தென்னை வழவழப்பான யாருமே ஏறக்கூடியது.பனை சொர சொரப்பென ….நெஞ்சுக்கும் மட்டை வைத்தே கயிறுப் போட்டு வலு அவதானமாக ஏற வேண்டியவை.தோலை எல்லாம் சீராய்த்து கிழித்து விடும் பயங்கரமிருந்ததால், ஓலை […]
திருமங்கை ஆழ்வார் இந்திரியங்களால் தான்படும் பாட்டை எண்ணி வருந்துகிறார். இதிலிருந்து விடுபட திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவி அப்பனைச் சரணடை கிறார். ஆநிரைகளை மேய்த்தவன் தன் இந்திரியங்களையும் அடக்கியாள வகை செய்வான் என்று நினைத்திருக்கலாம் பார்ப்பான் அகத்திலே பால்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாயின் பால்பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே என்று திருமூலர் சொல்வதுபோல் ஆநிரைகளை மேய்த்து […]