யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 11

This entry is part 1 of 19 in the series 20 நவம்பர் 2016

பி.ஆர்.ஹரன்   இக்கட்டுரைத் தொடரின் சென்ற பகுதியில் WRRC மற்றும் CUPA அமைப்புகளைப் பற்றியும், அவற்றுக்கு அன்னிய நாடுகளிலிருந்து வரும் நிதியுதவி பற்றியும் சில சந்தேகங்களைத் தெரிவித்திருந்தோம். அந்தக் கட்டுரை அவர்கள் கவனத்திற்குச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்வமைப்புகள் இணைந்து, அக்கட்டுரையைச் சுட்டிக்காட்டி, அதில் தெரிவிக்கப்பட்டிருந்த சந்தேகங்களுக்குப் பின்வரும் மறுப்பைத் தங்களுடைய இணையதளத்திலும், முகநூல் பக்கங்களிலும் வெளியிட்டுள்ளன. (https://drive.google.com/file/d/0B9uaghHfTnnnTFRHYkxKU1I3a0U/view )   WRRC / CUPA அமைப்புகளின் மறுப்பு   அந்த அமைப்புகள் கொடுத்த மறுப்பறிக்கையின் தமிழாக்கம் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.

This entry is part 2 of 19 in the series 20 நவம்பர் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://slideplayer.com/slide/1374764/ பெருநிறை விண்மீன்கள் பிறப்பு இன்னும் மர்மமாகத் தெரிகிறது நமக்கு. காரணம் இந்த விண்மீன்கள் தீவிரமாய்த் திண்ணிய வாயுத் தூசிகள் ஈடுபாடு கொண்டவை.  இந்த ஒளிபுகாச் சூழ்புறம் [Opaque Envelope] நவீனத் தொலை நோக்கிகள் மூலம் ஆயும் நேரடி நோக்குதலுக்கும் கடினமாய் உள்ளது.  சொல்லப் போனால்,  இவ்வகை விண்மீன்கள் பிறக்கும் தாலாட்டு ஊஞ்சல் மட்டும் நமக்குத் தெரிகிறதே தவிர, அந்த விண்மீன்கள் தென்படு வதில்லை. ரால்ஃப் கியூப்பர் [ […]

சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்

This entry is part 3 of 19 in the series 20 நவம்பர் 2016

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வல்லவருக்கு வல்லவராய் நல்லவருக்கு நல்லவராய் எல்லாவிடங்களுக்கும் போக குறுக்குவழி தெரிந்தவர் அவர்; (ஆனாலும் கால்கள் கடுக்கின்றனவென்றே சதா புலம்பிக்கொண்டிருப்பார் அது அவர் சொல்லிமுடியாச்சொந்தக்கதை சோகக்கதைகளில் ஒன்று) குறுக்குவழியில் சென்று சேமித்த நேரத்தை ஆனானப்பட்ட மேதைகளைப் பழிப்பதில் செலவழிப்பார். நாடு கெட்டுப்போச்சு என்பார் நாடென்பதை வாலாட்டும் நாயாக பாவிப்பார். குரலற்றவர்களின் குரல் நான் என்பார் ’அறிவற்றவர்களின் அறிவுநான்’ என்ற அகங்காரம் தொனிக்க. தானா ரீனா வந்தால் தங்கம் கொட்டும் என்பார் (இவருடைய கஜானாவில் சேர்ந்தால் […]

இரைந்து கிடக்கும் பாதைகள்

This entry is part 4 of 19 in the series 20 நவம்பர் 2016

தூரத்துக் காட்டுக்குயிலின் மெல்லிசையில் மல்லாந்து உறங்குகிற‌ அடர்ந்த கானகத்தில் சிக்கிக் கொண்டோம்… மரங்களிலும், பாறைகளிலும், கொடிகளிலும் மறைந்துவிட்டன கானகத்தின் பாதைகள்… முன்னெப்போதோ சென்ற‌ பாதையின் சாயல் கானகம் முழுவதும் இரைந்து கிடக்கின்றன… சுடர்மிகு ஒளியை உருவாக்குபவன் இடைத்துணியை உருவி கண்களை கட்டினான்… புலன்களின் கடலின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் பழக்கமெனும் வழிகாட்டிக்குத்தான் இரைந்து கிடக்கும் பாதைகளின் மீது, எத்தனை நினைவாற்றல்?.. – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை- நவ : 23.

This entry is part 5 of 19 in the series 20 நவம்பர் 2016

ப.கண்ணன்சேகர் பாவேந்தர் பாராட்டும் பாநயக் கவிஞர் பூவேந்தும் பொன்மண புலமையில் இளைஞர் மரபுவழி கவிதைகள் மலர்த்திய தென்றல் மாறாத தனித்தமிழில் மயங்கிய கொண்டல் கல்லாடன் புனைப்பெயரில் கனித்தமிழ் விரதா.. சொல்லாடல் எழுத்தாலே சுடரொளிக்கும் சுரதா உள்ளமது வெண்மையில் உயர்ந்திடும் பாலகம் இல்லமது எந்நாளும் ஏடுநிறை நூலகம் தேன்மழை துறைமுகம் சிரிப்பின்நிழல் எனும்பேரு தீட்டினார் காவியங்கள் செதமிழில் பலநூறு ஆடிஅடங்கும் வாழ்க்கையடா அரங்கினிலே நாளும் அன்றுமுதல் திரையினில் அழியாதக் கோலம் பெரியார் கலைவாணர் பாராட்டைப் பெற்றவர் பெரும்புகழ் நாமக்கல்லார் […]

பெருநிலா

This entry is part 6 of 19 in the series 20 நவம்பர் 2016

அருணா சுப்ரமணியன் என் மீது பெருங்கோபம் இந்த வெண்ணிலவுக்கு … நான் நிலவை பற்றி எழுதுவதில்லை என்று.. முழுமதி ஒன்று எந்தன் மடிமீது தவழ்ந்திருக்க தேய்ந்தும் வளர்ந்தும் மறையும் பிறைமதி உவப்பதில்லை என்றேன்…. எவ்வாறாகினும் என்னைக் கவர வெகுவாய் அலங்கரித்து கிட்ட வந்த பெருநிலா தோற்று திரும்பி போனது உன் பால்முகம் கண்டு……

தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?

This entry is part 7 of 19 in the series 20 நவம்பர் 2016

முகிலன் இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத் துறைகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளே நிலவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் பல்வேறு துறைகளிலும் சீரற்ற கருவிகளைக் கொடுத்தே ஊழியர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படுமாறு வற்புறுத்துகின்றனர். சான்றாக அரசுப்போக்குவரத்துக் கழகங்களை எடுத்துக்கொள்ளலாம். பத்தாண்டுகளுக்கு மேலான வாகனங்களை வைத்துக்கொண்டு, அவற்றையும் சரிவரப் பராமரிக்காமல் கால அட்டவணைகளைக் கண்மூடித்தனமாக அமைத்துக்கொண்டு செயல்படத் தூண்டுகின்றனர். அதனால் ஏற்படும் விபத்துகள் ஏராளம். எங்கு பார்த்தாலும் அரசுப்பேருந்து மோதி விபத்து என்றுதான் செய்திகளில் பார்க்கின்றோம். இந்த […]

யாருக்கு வேண்டும் cashless economy

This entry is part 8 of 19 in the series 20 நவம்பர் 2016

சிறு தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது மிகவும் கடினம்.அவர்களின் சேமிப்பே சீட்டு கட்டுவது தான்.அதனை வங்கிகள் ஏற்று கொள்ளுமா,அல்லது சீட்டு ஏலம் நடத்துமா மாதம் 1000 முதல் லட்சம் ரூபாய் வரை சீட்டு உண்டு.சீட்டை தள்ளி எடுப்பவர்களுக்கு கிடைக்கும் பணம் தொழில் துவங்க,வீடு கட்ட கிடைக்கும் கடனுக்கு ஒப்பாகும்.எடுத்துக்காட்டாக 30 பேர்,20 பேர் மாதம் 10000 சீட்டு காட்டுகிறார்கள் என்பதை எடுத்து கொள்வோம். மொத்த value 3 லட்சம் .முதல் மாதம் சீட்டு எடுப்பவர் 150000 […]

தாத்தா வீடு

This entry is part 9 of 19 in the series 20 நவம்பர் 2016

நிஷா அதே மஞ்சள் பூக்கள் பூத்த வாசல்ச்செடி, மரமாய் படர்ந்து சுவர் போர்த்திய மணிபிளான்டின் குளுமை, திண்ணை மர பெஞ்சில் யாரும் புரட்டாத ஹிந்து பேப்பர், டிவியின் முன்னே அந்த நாற்காலி, கோட் ஸ்டாண்டில் நீலம் போட்ட ஒரு கதர் சட்டை, மூலை அலமாரியில் சன்னமாய் மிஞ்சி இருந்த மூக்குப்பொடி வாசம் – தாத்தா வீடு வந்தாயிற்று. வீடு வந்து கேட் திறக்கையிலேயே ஆர்ப்பரித்து ஊர்க்கூடும் தாத்தா இன்று இல்லை. நிசப்தமாய் தாத்தாவின் வீடு – பேரிரைச்சலாய் […]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 10 of 19 in the series 20 நவம்பர் 2016

1. ஒரு பறவையின் கோரிக்கை பூங்காவின் மேற்கு மூலை நூலகத்தின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்து அந்தச் செம்போத்து சிலநொடிகள் இடைவெளியில் கத்துகிறது ! அந்த ஒற்றைப் பறவையின் கோரிக்கைதான் என்ன? அதன் தவிப்பில் மூடிக்கிடக்கின்றன அர்த்தங்கள் என் யூகங்கள் தொடர்கின்றன பிரிவின் சோகத்தை அல்லது இணை தேடும் மனப்பூர்வமான அழைப்பை அல்லது குஞ்சுகளின் எதிர்பாரா மரணத்தையென எதை முன் வைக்கிறது அந்தக் கோரிக்கை ? அப்பறவையின் புரியா மொழியின் கனம் எதையோ யூகத்தில் ஆழ்த்திப் புரிய வைத்துக்கொண்டுதான் […]