தனிமைக் காட்டில் ஓர் ஆண்கிளி துணைக்கு வந்தது பெண்கிளி கூடின மசக்கையில் பெண்கிளி பிரசவம் பெண்ணுக்கு வலியோ ஆணுக்கு முட்டை வந்தது குஞ்சு வந்தது ஜனனம் விரிந்தது கழிவைத் தின்று பின் கிளியையே தின்றது மரம் இன்று ஏராளக் கிளிகள் ஏராள மரங்கள் எந்தக் கிளியிலிருந்து இந்தக் கிளி எந்த மரத்திலிருந்து இந்த மரம் கிளிக்கும் தெரியவில்லை மரமும் அறியவில்லை எல்லாமும் அறிந்த கரு ஒன்றுண்டென்று மனிதன் அறிவான் அதற்கு […]
தன்னிகரற்ற எழுத்தாளர் 30.10.2017 இல் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வி பயின்று இந்த அளவுக்குப் பேசப்படும் ஓர் எழுத்தாளர் வேறு எவரும் தமிழ்நாட்டில் இருந்ததாய்த் தெரியவில்லை. அடித்தட்டு மக்களில் ஒருவரான இவர் அடித்தட்டு மக்களின் வாழ்வு, அவர்களின் பிரச்சினைகள், இயல்புகள் ஆகியவை பற்றியே பெரும்பாலும் எழுதினார். இவரது தமிழ்நடை வேறு எவரும் பின்பற்ற முடியாத ஒன்றாகும். சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கிய இவர் ஆனந்தவிகடனில் முத்திரைக் கதைகள் எழுதுகிற அளவுக்கு உயர்ந்தவர். […]
ஊறவைத்த பச்சைக் கடலை 5 இரவே ஊறவைத்த மல்லிக் கசாயம் ஒரு குவளை 10000 காலடி நடை 3 இட்லி கொழுப்பகற்றிய பால் ஒரு குவளை இப்படியாகக் காலை 3 சப்பாத்தி உருளையில்லாக் கறி கொஞ்சம் காய்கறி எப்போதாவது ஒரு துண்டு மீன் அல்லது கோழி இப்படியாகப் பகல் இரண்டு சப்பாத்தி கொஞ்சம் தயிர் ஒரு துண்டு ஆப்பிள் படுக்குமுன் ஒரு சிட்டிகை கடுக்காய்த் தூள் வயிற்றுப்புண் வராதாம் இப்படியாக இரவு […]
மாமாங்கங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் ஆத்தும நண்பன் மாணிக்கத்தை. பேச ஆயிரம் உண்டு…. ஆனால், (தொலை) பேசியில் அழைத்தபோதெல்லாம் பேரனைப் பள்ளிக்குக் கூட்டிச்செல்லவேண்டுமென்று அவசரமாய் இணைப்பைத் துண்டித்துவிடுவான். அடுத்த வருடம் ஆவணி மாதம் அரைமணிநேரம் பார்க்கவரவா என்றேன் ஒருநாள். அந்தச் சமயத்தில் மகள்வயிற்றுப்பேத்தியின் சடங்குநீராட்டுவிழா நடக்கப்போவதாய் பெருமைபொங்கத் தெரிவித்தான். மகளோ மகனோ இருந்ததாகச் சொன்னதில்லை யவன்…… ஆனால், மறதி வயதின் பயன். ’பேசப்பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடு’ என்றதற்கு ‘இப்படிப் பேசலாமா என்னுயிர் நண்பா’ என்றான். […]
நீலாயதாட்சி….. நித்யகல்யாணீ…. பாலாம்பிகையம்மே…. பத்ரகாளித்தாயே… காலாதீதத்தில் துளியேனும் கைவசப்பட அருள்வாயே… வேலா வடிவேலா நீ தமிழ்க்கடவுளென்றால் விநாயகர் யாரென்று விளங்கச்சொல்வாயா? போலாகும்போல் நெருப்பு நிஜமல்லவா… நூலாய் இளைத்த கதை நொந்ததெதை என்பதை யிங்கே நந்தமிழ் தெரிந்ததாலேயே சொல்லப்போமோ சாலா என்றால் சுமாரான கெட்டவார்த்தையா இந்தியில் ஓலாப் பயணத்தில் பழுதாவது வீலா ஸ்டியரிங்கா தோலா சதையா எது பெரிதென்ற பட்டிமன்றம் நடந்திருக்கிறதா எங்கேனும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் குறைவது நூறா இருநூறா பாலாறு வழியுமென்ற […]
அன்று அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் ஒரு குட்டி முயலைக் காணமுடிந்தது. அதற்கு ‘கேரட்’ தர முடிந்தது இங்கிருந்தே. நெடுந்தொலைவிலிருந்தும் அதன் இக்குணூண்டு கண்ணும் புஸுபுஸு வாலும் அத்தனை துல்லியமாகக் கண்டது. அந்தக் குட்டி முயல் மயிலாட்டம் ஆடியது; குயிலாட்டம் பாடியது; யானையாகி என்னை முதுகிலேற்றிக்கொண்டு கானகமெங்கும் சுற்றிவந்தது. மலைப்பாம்பாகி யெனை முழுமையாய் விழுங்கிப் பின் பழுதின்றி மீட்டுயிர்க்கச் செய்தது மறுபிறப்பாய். காட்டுத்தாவரங்களை யெல்லாம் பரிச்சயப்படுத்தி யது. ’அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே […]
ஆதியோகி இடைவிடாது கொட்டுகிறது அடை மழை. ‘விளைச்சலுக்கு குறைச்சலிருக்காது’ என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள். ஏரிகளும் நீர்நிலைகளும் நிரம்பி, நிலத்தடி நீர் கணிசமாய் உயர்ந்து குடிநீர் விநியோகத்தில் இனி குறையிருக்காது என்ற மகிழ்ச்சியில் அரசும் பொதுஜனமும். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில் குதூகலமாய் குழந்தைகள். “இரவில் எங்கே ஒதுங்குவது” என்று நடுங்கும் குளிரில் நனைந்த ஆடைகளோடு நிற்கும் இந்த நடைபாதைவாசிகளின் கவலை குறித்துக் கவலை கொள்ளத்தான் யாருமில்லை..பாவம் ..! – ஆதியோகி
சோம.அழகு இது பயணக் கட்டுரை அல்ல ; பயணம் பற்றிய கட்டுரை. பயணம் – இது வெறும் வார்த்தையல்ல…ஓர் அற்புதமான உணர்வு. (இதை பாரதிராஜாவின் பாணியில் சொல்லிப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும். Travel – It’s not just a word. It’s a beautiful emotion !). இருபது வயதிற்குப் பிறகு அவ்வப்போது என்னுள் எட்டிப் பார்க்க முனைந்த பயணிக்கும் ஆவலைப் படிப்பைக் காரணம் காட்டித் தள்ளிப் போட்டிருக்கிறேன். அது சொத்தைக் […]
Posted on November 5, 2017 A team of Saturn moon keeps Saturn’s A ring from spreading. This image from NASA’s Cassini mission clearly show the ring’s density waves created by the small moons. The waves look like the grooves in a vinyl record. Credit: NASA ++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் […]
என்.துளசி அண்ணாமலை “அய்யா! உங்களுக்குக் கடிதம் வந்திருக்கு!” வீட்டு வேலையாள் கண்ணன், தான் கொணர்ந்த தபால்களை காப்பிமேசையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அன்றைய செய்தித்தாளில் கண்களைப் பதித்திருந்த சின்னக்குழந்தை, அசுவாரஸ்யமாக செய்தித்தாளை வைத்துவிட்டு, கடிதத்தைக் கையில் எடுத்துப் பிரித்தார். அவ்வேளையில் அங்கு பிரவேசித்த கமலம், கையிலிருந்த தேநீர்க் கோப்பையை அவரிடம் நீட்டியவாறே, “யாரிடம் இருந்து வந்திருக்கின்றது? இந்தக் காலத்தில் ஆற அமர கடிதம் எழுதுவதற்குக் கூட சனங்களுக்கு நேரம் இருக்கிறதா, என்ன?” என்றாள் சலிப்புடன். “ஹூம்….நானுந்தான் ரெண்டு […]