எங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த அவன் விளையாட்டில் படு விளையாட்டுத்தனமாக இருந்தான் என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும். அவன் இப்போது மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர். வெறுமே விளையாடிட்டிருந்தவன்ட விளையாட்டா சேர்ந்து போச்சுறா காசு…என்றான் மாஞ்சா. ஏதோ அவனுக்குக் கிடைத்த சொத்து போல் சொல்லிக் கொண்டான். சொந்த ஊர் வரும்போதெல்லாம் மாரிச்சாமி அவன் செலவுக்குக் காசு கொடுத்து விட்டுப் போனான். அதென்ன அப்படியொரு தனி கவனிப்பு? […]
-ராமலக்ஷ்மி எழுத்து என்பது ஒரு சிற்பத்தைப் போல ஒரு கல்வெட்டைப் போல தான் வாழ்ந்த காலத்தை வருங்காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாக அமைந்து போகையில் எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்பட்டு மக்கள் மனதில் இடம் பெறுவதையெல்லாமும் தாண்டி வருங்காலம் வியந்து போற்றுவதாக உயர்ந்து நின்று விடும். கவனிப்பற்று போகும் அத்தகு எழுத்துக்கள் கூட பின்னாளில் எவராலேனும் புதையல் எனக் கண்டெடுக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. ஆனால் ஆசிரியர் சுகாவுக்கு சக காலத்திலேயே அந்த அங்கீகாரத்தை ஆனந்த விகடன் தந்திருந்தது ‘மூங்கில் மூச்சு’ […]
-வே.பிச்சுமணி உன்னை மாற்றிகொள் எனும் சொல் உனது தான் விழிக்க செய்துவிட்டது நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு உன் மனதில் வெறுப்பு மண்டியது விரோத கொடி ஆக்டபஸ் கையாய் பரவுகிறது உனக்கும் எனக்கும் உள்ள பகைவர்கள் சந்தர்ப்பத்தை சாதகமாக்க வளையவருகிறார்கள் வெறுப்பு அவர்களை விரட்ட மறுக்கிறது தூபங்கள் நம்மை அந்நியபடுத்துகின்றன எனக்கெதிராய் கனைகளை ஏவுகிறாய் எனது தற்காப்பு கேடயத்தை தாக்கும் ஆயுதம் என்கிறாய் சூரியனின் அண்மையினால் நிலவே புளுட்டோவின் கோள் அந்தஸ்தை நீக்கிறாய் இன்றைய வெற்றி உனதாக இருக்கலாம் […]
ஹெச்.ஜி.ரசூல் ஒரு புல்லின் நுனி கரும்பாறையை சுமந்திருந்த்து சொட்டுச் சொட்டாய் உள்ளிறங்க வழியற்று அதில் விழுந்த மழைத் துளிகள் பெருநதியாகப் பாய்ந்தோடுகிறது ஆயுள் பூராவும் சேமித்த சூட்டின் தகிப்பு தன்னுணர்ச்சியை இழக்க விரும்பவில்லை. பகலுறக்கம் தீய்ந்து இரவுதோறும் கரும்பாறை வளர்வதை கண்ணாப்பா சொல்லியிருக்கிறார் கருகிவிடாது ஒற்றைப்புல் வேர்பிடித்திருக்க குறு குறுவென ஊதிப் பெருகிய கரும்பாறையைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. சாயங்காலமொன்றில் மகுடியெடுத்து பாம்புப் பிடாரன் ஊதிய இசை பட்டு தடுமாறத்துவங்கியது கரும் பாறை எத்தனை நாள் உள்ளிருப்பது […]
– வ.ந.கிரிதரன் – விண்ணில் புள்! மண்ணில் புள்! வனத்தில் புள்! மனத்தில் புள்! புள்ளினம் பறந்து செல்லும். உள்ளமோ சிறகடிக்கும். அவற்றை அவதானிப்பதில் அளப்பரிய இன்பம். புல்லரிப்பில் களிக்குமென் உள்ளம். இறகசைப்பின் விரிவு கண்டு ஒரே பிரமிப்பு! அழுத்த வேறுபாடுகளை அவை கையாளும் இலாவகம்! எத்துணை அறிவு! புள்ளினம் தந்திரம் மிக்கவை. சிறகசைத்தலற்று விண்ணோக்கி அல்லது மண் நோக்கி விரைதலில் அவை பாவிக்கும் அறிவின் ஆழம்.. பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்… இவை கண்டு வியக்காமல் ஒருவரால் […]
கசக்கி எறிந்த காகித வார்த்தைகள் உறைந்து மடிகின்றன … காத்திருக்கின்றது இன்னும் எச்சமாகி நிற்கும் விகுதிகள் எதிலும் பூரணத்துவம் பெற்றிருந்த அவ்வார்த்தைகள் ஒரு சில நேரங்களில் முரண்படுகின்றன அவ்வேளைகளில் வீரியம் அதிகமாக … வெளிவரும் ஒவ்வொன்றிலும் தொக்கி நிற்கும் ஒரு துளி விஷம் …. விடுதலற்ற கணக்காகி எங்கிலும் எச்சமென தொடரும் அவை .. என்றும் முடியாத் தொலைவு வரை …. ஷம்மி முத்துவேல்
அன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவரசி அதே நிலா, அதே குளம், அதே அன்னம், அதே பூங்காவனம், அதே செயற்கை வசந்தம் அதுவாகவே அனைத்தும் எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை நெகிழ்ச்சி மிக்கதொரு நேசத் தீண்டலை அவள் எதிர்பார்த்திருந்தாள் அலையடிக்கும் சமுத்திரத்தில் பாதங்கள் நனைத்தபடி வழியும் இருளைக் காணும் விடுதலையை ஆவலுற்றிருந்தாள் காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா மாய உடலையொன்றையும் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “வேண்டாம் என் தந்தை பணம், மிஸிஸ் பெயின்ஸ் ! இரத்தக் கறை பிடித்த பணத்தில் ஏழைகளின் பசி தீரக் கூடாது ! பட்டினி கிடந்தாலும் தந்தையின் பீரங்கி அன்னமிட வேண்டாம் பாமரருக்கு ! வெடி மருந்து விற்ற பணம் சாவடிக்கு உயிர் கொடுக்க வேண்டாம் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : […]
திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத […]
நாகரத்தினம் கிருஷ்ணா எதிர்பார்த்தைதைப்போலவே சாலைமுழுவதும் பனிமூடியும் பனிஉறைந்தும் வாகனஓட்டத்தை கடுமையாக்கியிருந்தது. வாகன ஓட்டியின் சாமர்த்தியத்தாலேதான் விபத்தின்றி கடைசியில் ஸ்டாலின் இருப்பிடத்தை அடைய முடிந்தது. அங்கே போனபோதுதான் தெரிந்தது, கட்சியின் முக்கிய தலைவர்களின் வாகனங்கள் அனைத்தும் வரிசை கட்டி நின்றன. நிகிடா குருஷ்சேவ்க்கு புரிந்துகொண்டார். ஏதோ முக்கிய ஆலோசனைக்காகவே தலைவர்கள் அனைவரையும் கட்சியின் முதன்மைச் செயலர் அங்கே வரவழைத்திருக்கவேண்டுமென்பது அவரது ஊகம். அது நியாயமானதுங்கூட. தலைவர்கள் வரிசையில் குருஷ்சேவுக்கான அப்போதைய இடம் அநேகமாக ஏழோ எட்டோ, அப்படிப்பார்த்தால் இவருக்கு […]