சசிகலா விஸ்வநாதன் கடற்கரை சாலையில் அமைந்த அந்த அரசு அலுவகத்தில் அன்று பரபரப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பல்வேறு முயற்சிகள், வெகு வருட காத்திருப்புகள், அலுப்பூட்டும் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள்; இதை எல்லாம் கடந்து நேர்முகத் தேர்விற்குத் தேர்ச்சியான இருபது பேர் வந்திருந்தனர். பத்து காலியிடங்களுக்கு இருபது பட்டதாரிகளுக்கிடையே போட்டி. அனுராதா ஆட்டோவில் இருந்து இறங்கின அதே தருணத்தில் தன் அண்ணனோடு கூட வந்து இறங்கிய சத்யாவைக் கண்டு […]
வளவ. துரையன் அஞ்சல் கொண்டுவந்து தரும் அஞ்சல்காரர் போல ஒரு சில வீடுகளுக்கு முன் ஓயாமல் வந்து நிற்கிறது வெள்ளைப் பசு மாடு. ஒன்றுமே போடாததால் அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடும் பரதேசியாய் அதுவும் போகிறது. பாலைக் கறந்துவிட்டு வெளியே விரட்டிவிட்டப் பரிதாபம் அதன் கண்களில். . அடைக்க இயலாதவர் வாங்கிய கடன்போல வளர்க்க இடமி8ல்லாதவர் வாங்கிய ஜீவன் அது. கன்றுக்குக் கொஞ்சமாவது சுரக்க வேண்டுமெனச் சுவரொட்டியையும் நெகிழியையும் தேடிப் போகிறது நம் தேசத்தில்
வளவ. துரையன் கல்லூரி மாணவனின் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவதுபோலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு கதறும் கிழவர் ஒருவர் கதறலை நிறுத்தவே இல்லை. அலுவலகமோ பள்ளியோ செல்லவேண்டிய அந்தப் பெண்மணி கீழே கிடக்கும் சாப்பாட்டுப் பெட்டியின் நசுங்களைப் பார்க்கிறார். நகரம் பார்க்கலாம் என்றிருந்த காய்கறிகள் வழி தெரியாமல் கீழே சிதறி அழுகின்றன. லேசாகத்தான் மோதினாய் பரவாயில்லை என்கிறது புளியமரம் தன்னை முத்தமிட்டு நிற்கும் அந்தப் […]
நகுலன் வீதிகளை மறந்து வீட்டையும் மறந்த கலைஞன். விலாசம் தெரியா காட்டில் அலையும் தத்துவக்கவி. கவி, தொலை தூரத்து பறவைகளின் பாடல் கேட்பதாக சொல்லும் வயோதிகன். பூதக்கண்ணாடிகளை இலக்கிய பூச்சோலையில் விட்ட கவிஞன். ராமசந்திரன் வந்து விட்டான என கேட்டுக்கொண்டே இருக்கின்றார். பூனைகளிடம் தான் கேட்க வேண்டும் நகுலன் வீடு எங்கே, அவைகள்தான் நகுலன் கவுச்சி வாசனை பிடிக்க இழுத்துச்செல்லும். ஜெயானந்தன்
வெங்கடேசன் நாராயணசுவாமி (அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். உங்கள் Thinnai இதழின் வழியே இலக்கிய சிந்தனைகளையும் ஆன்மிக விழிப்புணர்வையும் பரப்பும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இணைக்கப்பட்டுள்ள என் சமீபத்திய பணி, “ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து”, ஸ்ரீவேதவ்யாச மகாமுனிவரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாம் ஸ்கந்தம் அடிப்படையில் தமிழ்ப் பாடல்களாக உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பாகும். சம்ஸ்கிருத மூலத்திலிருந்து நேரடியாக எழுந்த பாடல்களாகும். இவ்வடிப்படையில், ராஸக்ரீடை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக லீலைகளை எடுத்துரைக்கிறது. இது மனித மனதின் காமம் எனும் விகாரமான உணர்ச்சியை வெல்லும் வழிகளை பக்தி மற்றும் சத்சங்கத்தின் […]
சுப்ரபாரதிமணியன் இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம், தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது.. வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது இன்றைய கவிதையின் முக்கியமான விஷயமாக எனக்கு படுகிறது படைப்பாளன் வாசகன் இரண்டு பேர் இணையும் விஷயங்கள் தான் வெற்றி பெற்ற கவிதைகள் ஆகின்றன. . கவிதைகளில் பலம் தினசரி வாழ்க்கையின் அனுபவங்களை, அதிர்வு கொண்ட விஷயத்தை இணைப்பதுதான்.. கிராமங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த […]
குரு அரவிந்தன் சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள். ‘டாக்டர் எங்கே..?’ […]