உன்னொத்தவர்களுக்கு எத்தாலும் அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை: ”நாம்” சமத்துவம், சகமனித நேயம் என்பதான பல போர்வைகளின் அடியில் இந்த ஒற்றைச் சொல்லை யுனக் கொரு கூர் ஆயுதமாக ஆர்வமாய் செதுக்கியபடியே நீ…. ‘அவர்கள்’ என்று நீ யாரை உன் சுய ஆதாயத்திற்காகச் சுட்டிக்காட்டுகிறாயோ இந்த ‘நாம்’ அந்த ‘அவர்களை’ எந்தக் காரணமுமின்றி எதிரிகளாக பாவிக்கப்படப் பழக்கப்படுத்தப்படுவதே உன் இலக்காய்….. ‘’நான்’ இணைந்த ’நாமா’கப் பேசியவாறே உன் ‘நானை’ அந்த […]
வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து ”உங்களுக்கு ரெஜிஸ்டர் தபால் வந்துருக்காம்; நாளைக்கு போஸ்ட் ஆபீஸுல போயி வாங்கிக்கனுமாம்…” என்று அரையும் குறையுமாகவும் அவசரமாயும் சொல்லி முடித்ததும் உள்ளே போய் கதவைப் பூட்டி, வெளி விளக்கையும் அணைத்து விட்டாள். இது நடந்தது இப்போதல்ல; தொண்ணூறுகளின் தொடக்கத்தில் …. அப்போதெல்லாம் […]
எனக்கும் அவளுக்குமான கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது எங்களின் மண நாளிலிருந்து…… ஒருவரை நோக்கி ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கிறோம் மூர்க்கமாக முறுவல்களுடனும் முத்தங்களுடனும்….. பொதுவான போட்டி விதிகள் எதற்குள்ளும் பொருந்திப் போவதில்லை எங்களின் விளையாட்டு…. ஒருவரை நோக்கி ஒருவர் நகர்ந்து விட நேர்கிறது அவ்வப்போது; ஆயினும் சீக்கிரமே இயல்புக்குத் திரும்பி இழுவையை தொடர்கிறோம்….. கை தட்டி ஆரவாரித்தும் கண்ணீரால் காயப்படுத்தியும் எங்களை உசுப்பேற்றி விடுகின்றன உறவுகளும்…. மையக் கோடு […]
முனைவர் டாக்டர் சுபா கண்ணே எழுந்திரு !கதிரவன் உதித்திட்டான் கார் டிரைவர் வந்திடுவார் கணப்பொழுதும் நிற்க மாட்டார் அழகாய் நீ கிளம்பிவிடு ஆசிரியர் காத்திருப்பார் ! அம்மா … இன்று மட்டும் நீ என்னை விடுவாயா தமிழ் மிஸ்ஸை நினைத்தால் தடுமாற்றம் வருகிறது கணிதத்தை நினைத்தால் கண்ணில் நீர் துளிர்க்கிறது விஞ்ஞானம் என்று சொல்லி விரட்டி அடிக்கின்றார் சரித்திரம் என்றென்னை சக்கையாய் பிழிகின்றார் பொதிமாடு போல் சுமந்து ப்ராஜெக்ட் தனை நினைந்து மனம் வெதும்பி சாயுதம்மா […]
ஓரமெல்லாம் மஞ்சள் பூசியிருந்த இரண்டு ஜாதகங்களை சொர்ணம்மாள் கையில் வைத்துக் கொண்டிருந்தார். “ நான் போன் பண்ணி பேசட்டுமா? என்றார் ராஜியிடம். அவர் குரலில் ஒரு அதீத ஆவல் தெரிந்தது. “ இது ஜாதகப் பொருத்தம் பார்த்து பண்ணிக்கும் சாதாரண கல்யாணம் இல்லைம்மா. நான் சத்யாவோட பேசணும். ரமாவோட கல்யாணம், சித்ராவோட வேலை உத்திரவாதம் இவ்வளவு இருக்கு. உன்னை என்ன பண்றது? உனக்கு ஒரு வழி பண்ண வேண்டாமா? நீ என்னடான்னா சின்ன பொண்ணு மாதிரி […]
எழுத்தாளர் வாசந்தி அவர்களின் ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன கதைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து வாசந்தி எழுதியிருந்தது என்ன என்பதும் ஊகிக்க முடியுமே தவிர எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் வாசந்தி தன் நேர்காணலில் ஜெ பற்றி சொல்லும் போது She wants to project herself as the […]
(1) பூக்காரி பந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப் பிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு லிஃப்ட் இல்லாத அடுக்ககத்தின் உச்சி மாடி வீட்டுக்குத் தினம் தினம் மூச்சு வாங்க ஏறி வந்து மல்லிகைப் பூவை விட முகம் மலர்ந்து முழம் போட்டு மல்லிகைப் பூ தந்து விட்டுப் போகும் ஒல்லிக் குச்சியான பூக்காரியை மல்லிகைக் கூடையுடன் நகர் விட்டு நீங்கிய சில காலம் கழித்து தற்செயலாய் நகரின் நாற்சாலைகளின் ‘சிக்னல்’ சந்திப்பில் […]
கணேசனின் மல்லாந்து கிடந்த நிலையினின்று அவர் மயக்கமுற்று விழுந்திருந்திருக்க வேண்டும் என்று வேலுமணி நினைத்தார். “ரமணி, ரமணி!” என்று கூவிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார். “என்ன, அண்ணா! என்ன ஆச்சு?” என்று கேட்டவாறு ரமணி தன்னறையினின்று வெளிப்பட்டான். “உங்கப்பா மயக்கமாயிட்டாருன்னு தோணுது. மல்லாந்து கிடக்கார்….” “தண்ணி எடுத்துண்டு வாங்கண்ணா!” என்று சொல்லிவிட்டு ரமணி பதற்றத்துடன் ஓடினான். அவன் போன போது அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வேலுமணி சொன்னது போல் மல்லாந்து […]
வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை நூலாக்கினேன் கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை சொன்னது என் கவிதைகள் குறிஞ்சி மலர்களாம் குற்றாலச் சாரலாம் ஒரு திரைக்கவி மெச்சினார் பைரனின் நகலாம் நான் ஒரு பேராசிரியர் புகழ்ந்தார் மின்சாரம் எனக்குள் மிருதங்கம் இசைத்தது விழாவில் கொஞ்சம் விற்றது மிச்சம் தோற்றது இன்றுவரை கேட்பார் எவருமில்லை என் கவிதைகளை தேர்வு செய்யாத அந்த வாரஇதழ்களின் […]
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3) ஆத்மாவின் ஆனந்தம். மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆத்மாவின் வெளிப் பயணம் ஆனந்தம் அளிப்பது. திறந்த வெளி எங்கணும் காற்றினில் பரவி காலங் காலமாய் என்றும் காத்திருக்கும். நம்முள்ளே ஆத்மா இப்போது ஊடுருவி நாமெல்லாம் செம்மையாய் உயிர்த்துள்ளோம் ! பண்பையும் சேர்த்து ஊற்றுக் கனிரசம் போலிங்கு […]