பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார விருந்து பற்றி எழுதும்போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான் அடுத்த நாள் தான் நினைவுக்கு வந்தது. நடந்த கால வரிசைப் படி சொல்ல சில சமயம் மறதியில் விடுபட்டாலும், நினைவுக்கு வந்த உடனே சொல்லி விட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் மறந்து தான் போய் விட்டன. அதற்குக் காரணம் தொடர்ந்து மிருணால் காந்தி சக்கரவர்த்தி பற்றியே எழுதி வந்ததால், அவனுடன் கொண்டிருந்த […]
சென்னை சென்றபோதெல்லாம் நான் தவறாமல் சந்தித்த இலக்கிய நண்பர்-திரு.ஒய்ஆர்.கே.சர்மா என்பவர். நண்பர் பி.ச.குப்புசாமி அவர்கள் மூலம் அறிமுகமானவர். அவருக்கு எல்லா எழுத்தாளர்களிடமும் நெருக்கமான பழக்கம் உண்டு. ஜெயகாந்தனின் அணுக்கக் குழுவினரில் ஒருவர். எல்லா இலக்கியப்பத்திரிகைகளுடனும், ‘தமிழ்ப் புத்தகாலயம்’ போன்ற பதிப்பகங்களுடனும் தொடர்பு உடையவர். சென்னையில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் அவரைப் பார்க்கலாம். சென்னை சென்றதும் முதலில் அவரைத்தான் பார்ப்பேன். அன்று சென்னையில் எங்கெங்கு, என்னென்ன இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன என்று தெரிவிப்பார். அங்கெல்லாம் என்னையும் […]
என்ன தான் தங்க கோவில் என்றாலும் இடிதாங்கி என்னவோ அலுமினியத்திலும் தாமிரத்திலும் தான் இருக்கிறது. அ.லெட்சுமணன்
இன்றைக்கு என்ன கிழமை வெள்ளியா, சனியா மாத்திரை விழுங்காமல் எங்கே தூக்கம் வருகிறது தேர் நிலைக்கு வந்துவிட்டது போல வேட்டுச் சத்தம் கேட்கிறது இத்தனை வயசாகியும் வாய் சாகமாட்டேன் என்கிறது புத்தனுக்கு ஞானம் தந்த அரசமரம் எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது அந்திம காலத்தில் தான் மனிதனுக்கு மூன்றாவது கண் திறக்கிறது இன்றைக்கு ஏன் நட்சத்திரங்கள் இப்படி ஜொலிக்கின்றது த்வனி மாறினால் வார்த்தைகள் வசையாக மாறி எதிரிலிருப்பவரை காயப்படுத்திவிடுகிறது மூதாதையர்கள் பட்சியாக வீட்டைச் சுற்றுவதாக கிணத்தடி ஜோசியன் […]
தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் பிறக்கும் என்பார் பலர். எடுத்துக்காட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை கலக்காப் பொதுவுடமைக் கருத்துக்களைச் சொல்பவை. பாரதிதாசன் தான்மை கலந்து தார்மீகக் கோபம் கொண்டாலும் அஃதெல்லை மீறாது. எஃது எப்படியிருந்தாலும் எல்லை மீறக்கூடாது. எல்லை மீறினால் தொல்லை. பாரதியாரின் கதையே வேறு. அஃதென்ன ? இயற்கையைக்கூட அவரால் குழந்தையைப் போல இரசிக்க முடியாது. அதிலும் ஒருவகையான அரசியலைக் கலந்துதான் பார்ப்பார். குயிலும் அரசியல் கூவும். பாஞ்சாலியை […]
இன்றைய ஹாட் நியூஸ்: தமிழகத்தில் இடைத் தேர்தல்; டெல்லியில் சிதம்பரம்; உலகத்தில், நியுட்ரினோ (Neutrino)! என்ன அது? இயற்பியல் பயில்வோருக்கு முதல் பாடமே, ஒளியின் வேகம் குறித்து ஐன்ஸ்டீன் உருவாக்கிய சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special relativity theory) தான். இன்று வரை, ஒளியின் வேகத்தை காட்டிலும் வேகமாக எதுவும் பயணிக்க முடியாது என்று அந்த கோட்பாடு கொண்ட கருத்தை கற்பிதம் என்று நிரூபிக்கும் கண்டுபிடிப்பாய் அமையப் போகிறது நியுட்ரினோவின் வேகம். அதைப் பற்றி சில செய்திகளை பார்ப்போம். நியுட்ரினோ […]
வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் 67 -ம் பக்கஎண் அடையாளமாக ஒரு பறவையின் இறகை செருகி இருந்தேன். மீண்டும் வாசிக்கஎடுத்தபோது 83 -ம்பக்கத்தில் பறவையின் இறகு இருந்தது. இப்பொழுது பறவையின் இறகை கையில்வைத்துக்கொண்டு கற்க ஆரம்பித்திருக்கிறேன் 67 -ம் பக்கத்தில் இருந்து 83 -ம் பக்கத்திற்கு எப்படி பறப்பதென்று? ரவி உதயன் raviuthayan@gmail.com
Navarathri Celebrations 2011 NAVARATHRI CELEBRATIONS 2011 Tues., Sept 27th through Wed., Oct. 5th, 2011 PROGRAM Daily Abishekam to Meenakshi………. 11.00 AM Weekdays; 10.30 AM Saturdays & Sundays Daily Lalitha Sahasranamam………… 7:30 PM 6:00 PM Saturdays & Sundays Tues., Oct. 4th, 2011 – Durgashtami… 9:00 AM Chandi Homam 1:00 PM Durgai Abishekam 1:45 PM Deeparathanai Sun., […]
நீண்டதொரு சாலையில் மிதிவண்டியை இழுத்தபடியே என்னோடு பேசிக்கொண்டே நடந்தாய் நீ! நாமிருவரும் தற்காலிகமாய் பிரியவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது சாலையின் பிரிவு! என்னிடம் விடைபெற்றபடியே சாலையின் வலதுபுறமாய் அழுத்தினாய் நீ உன் மிதிவண்டியை! என் கண்ணைவிட்டு நீ மறையும்வரை உன்னை பதைபதைக்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்!! நடைவண்டியை தள்ளிக்கொண்டு உற்சாகமாய்க் கிளம்பும் தன் குழந்தை கீழே விழுந்துவிடக்கூடாது எனத் தவிக்கும் தாய் போலவே…
(கட்டுரை – 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம். தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy) இந்திய அணுசக்திப் பிதா […]